Posts

குருதிச்சுவையில், பெருகும் சாக்லெட் உலகம்

Image
அடிப்படை மனித இயல்பு என்பது மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வாழும் குணம்தான். உடல் வலிமை, அதிகார வலிமை, அறிவின் மேன்மை என்று காலத்துக்கு காலம் மாறிகொண்டிருந்த இந்த ஆட்படுத்துகை அம்சம், இன்று வணிகர்கள் வசமிருக்கின்றது. நுகர்வு கலாசாரத்தில் மக்கள் அடிமைப்படுத்தி  மக்கள் ஆட்படுத்தும் அவலம் ஒரு புறம் என்றால் நுகர்வு பொருட்களின் உற்பத்தியில் தங்கள் உழைப்பையும் வாழ்வையும் பறிகொடுத்த மக்களும் வளங்களை அடகுவைத்து வாழும் தேசங்களும் நம் கண்ணுக்கு தெரியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றன. உலககெங்கும் நடைபெறும் இந்த அக்கிரமங்களில் ஒரேயொரு  பொருளின் உற்பத்திகாக  அதில் பாதிக்கப்பட்ட  மக்கள் வாழ்க்கையை நமக்கு முன்வைத்த முக்கியமான 2 ஆவணப்படங்கள் தான் The Dark Side of Chocolate, Shady Chocolate.  The Dark Side of Chocolate ஐரோப்பிய அமெரிக்க நிறுவனங்கள் சாக்லெட்டுக்களை உற்பத்தி செய்து வருகின்றன. வெவ்வேறு விதமான சாக்லெட்கள், சாக்லெட்கள் கலந்த உணவுப்பொருட்கள் உட்பட நமது அன்றாட வாழ்வாதார உணவுகளில் சாக்லெட்டின் வகிபாகம் அதிகரிக்கப்பட்டிருகின்ற நிலையில், சாக்லெட...

Fairway Galle Literary Festival - 2019

Image
காலி இலக்கிய திருவிழாவிற்கு  சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு பின்னரான காலி பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. காலி எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று. காரணம் அந்த கடலோசை. இலங்கையின் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கு சென்று அதன் ஓசையில் லயிப்பது பிடிக்கும். காலியின் கடலோசை எனக்குள் வெறுமையும் அமைதியும் கலந்த  உணர்வை தோற்றுவிக்கும். அதனால்தான் அதிகம் பிடிக்கும். கடலும் கோட்டைகளும் பழைமையான கட்டிடங்களும் இணைந்து  தனித்துவமான அழகை காலிநகரம்  வெளிப்படுத்தியது. ஏதோ வெளிநாட்டு நகரமோ என்று நினைக்குமளவு வெளிநாட்டவர்கள் நிறைந்திருந்தனர். அதனால் ஆட்டோ விலை உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மூன்றுமடங்காக  காணப்பட்டது. சிங்கள இலக்கிய விழாவில் கவிதை இலக்கியம் பற்றிய பகுதியில் சுவாரஸ்யமான கவிதைகளை கேட்கமுடிந்தது. அது முடிய கோட்டையை நோக்கி சென்றோம். ஓவியங்கள் வரைவதற்கான செயலமர்வும் கண்காட்சியும் எமது நேரத்தை பயனுள்ளதாக மாற்றின. வயது‌ வித்தியாசமின்றி ‌மிக ஆர்வமாக‌ அனைவரும்‌ வரைந்தனர். வரைதல் கொடுத்த மகிழ்ச்சியையும்  அவர்களது கைகளையும்‌ நான் ‌அமைதியாக ரசித்து க...

Revelations

Image
எதையெல்லாம் நிறைத்தால் வீடாகும் என்பதைப்போல எதையெல்லாம் நிறைத்து சினிமாவாக்கலாம் என்று எண்ணி தோற்று சரிகின்ற நிலையில் இருக்கின்ற தமிழ் சினிமாவிற்கு, சினிமா என்றால் என்னவென்று   புரிதலை ஏற்படுத்தவும் உலகவெளியில் சினிமாவின் தன்மையை வெளிப்படுத்தவும் சுயாதீன சினிமாக்கள் எப்போதும் முன்னின்று உழைக்கின்றன. நம் சமுகத்தில், எது சினிமா என்ற ஆரம்பநிலை புரிதல் கூட ஏற்படவில்லை என்பது துயரம் என்றால், ஓரளவு சினிமா சார்ந்த புரிதல் கொண்டவர்கள் கலைபடைப்புக்கள், மண் சார்ந்த படங்கள் என்ற ஒற்றை தன்மையான நிலைக்குள் சிறைப்பட்டு சிந்திப்பதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தவல்லன. கமர்ஷியல் சினிமா கலை சினிமா என்ற பேதங்கள் இன்று உலக அரங்கில் பெரும்பாலும் முன்னிறுத்தப்படுவதில்லை. ஒரு திரைப்படத்தின் படைப்பாற்றல் ( creativity ) என்பதே அவர்களை கவனிக்க வைக்கின்றது. படைப்பாற்றல் என்பதை தீர்மானிக்கும் மையம் Artistic vision இல் தங்கியுள்ளது. சமுகத்தின் மீதான ஒருவரது அவதானிப்பும்   கவனிப்பும்   Artistic vision   என்பதை தீர்மானிக்கின்றது. உலக அரங்கினை நோக்கி நகர முனைபவர்களுக்கு   R...

Paths of the Soul - ஆன்மாவின் யாத்திரை

Image
ஆன்மிகம் என்பது உள்ளார்ந்த ரீதியாக உணரப்படும் அமைதிநிலை. சிலை வழிபாடுகள், சடங்குகள், மத போதைனைகள் என்பன ஆன்மிகம் அல்ல. மதங்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி இயங்குகையில் ஆன்மிக அனுபவம் நிகழ்வதில்லை. நம் எண்ணங்களினால் செயல்களில் வெளிப்படும் அமைதியே நமக்குள் நிலவும் ஆன்மிகத்தை புலப்படுத்தும். அத்தகைய ஆன்மிக யாத்திரையில் உணர்த்தப்படும் நம்பிக்கை ஒளியை திரையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் தான் Paths of the Soul . திபெத் நாட்டின் சிறியதொரு கிராமத்தை சேர்ந்த சிலர், தலைநகரிலுள்ள Lhasa வுக்கு, 1,200 மைல்கள் தரையில் வீழ்ந்து வணங்கியபடியே நடைபயணமாக மேற்கொள்ளும் ஆன்மிக யாத்திரையூடாக, அவர்களது அன்பு, பொறுமை, அமைதி, வாழ்வியல் அணுகுமுறை என்பவற்றில் வெளிப்படுத்தப்படும் ஆன்மிக உணர்வுவை இந்த ஆவணப்படம் பதிவுசெய்கின்றது. இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட தேவையும் காரணமும் இருக்கின்றது. குடும்பத்தின் தீவினைகள் நீங்க , விலங்குகளை கொன்ற பாவம் தீர்க்க, வாழ்வில் இறுதி அமைதியை நோக்கி என்று பல எண்ணப்பாடுகளுடன் ஒன்றாக பயணிக்கும் இவர்களது பலவருட பயணத்தின் வழியாக வாழ்...

BARONESA

Image
ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் பெண்களின் உலகமும் பெண்களின் பார்வையில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் உலகமும் மாறுப்பட்டவை. இயக்குனரின் பாலின அடையாளத்தில் முரண்கள் வெளிப்படுவதில்லை. படைப்பில் வெளிப்படும்  நுணுக்கமான அணுகுமுறையிலேயே பெண்களின் படைப்புலகம் உயிர்ப்படைகின்றது. அதில் ஆவணப்படங்களின் தாக்கம் தனித்துவமானது. அந்தவகையில் பலதரப்பட்ட சினிமாக்களை பார்த்தாலும் உலகளாவிய ரீதியில் வெளியாகும் ஆவணப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கேள்விகளையும் குழப்பங்களையும் விட்டுச்செல்கின்றன. சமிபத்தில் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய ஆவணப்படம் Baronesa . 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பிரேசில் நாட்டு ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் Juliana Antunes. சேரிப்புறத்தில் வாழும் Andreia, அந்த சூழலில் வாழ விரும்பாமல் அங்கிருந்து வெளியேற எண்ணுகின்றாள். எங்கிருந்தோ வந்து, அங்கு குடியேறிய Leid, சிறைக்கு சென்ற கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் அங்கே தங்கி வாழ்கிறாள். போதைப்பொருள் கும்பல்,குண்டர் கும்பல் சண்டைகளில் தப்பித்து வறுமையை மீறி வாழும் இருவரது வாழ்க்கை நிகழ்வுகளை நேரடி...

அதிகாரத்தின் இழைகள்

Image
The Experiment    வன்முறை - குற்றமாக பார்க்கப்படும் உலகில், அரச வன்முறையை குற்றமாக அடையாளப்படுத்த முடியாமல் மௌனித்து வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும் மனித அவலம் தொடர்ந்து நிகழ்கின்றது. ‘அரச வன்முறை’ என்பதை வெறும் வார்த்தையாக கடந்து விடமுடியாது; பலகோடி உயிர்களின் ரத்தபலியில் பதிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வெற்றிகளை உள்ளடக்க முயலும் கடவுச்சொல்லாகவே கருதுகின்றேன். இந்த அரச வன்முறையின் ஆரம்பத்தை ஆராய்வோமானால் ‘அதிகாரம்’ என்பதே மையப்புள்ளியாக தென்படுகின்றது. அதிகாரத்தை நிலை நாட்டவே வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. அதிகாரத்தை எதிர்க்கவே போராட்டம் பிறக்கிறது. அரச வன்முறை நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில குரல்களும் கேள்விகளும் தொடர்ந்து ஒலித்தவண்ணம் உள்ளன. ‘’பிற மனிதனிடம் வன்முறையை பிரயோகிப்பவன் நல்லவனா? மனிதாபிமானமே இல்லையா? இந்த உலகம் ஏன் இப்படி இயங்குகின்றது?.....’’   மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வகைப்பாடு எல்லாம் இல்லவே இல்லை. மனிதனின் அடிப்படை உளவியலை குறுக்குவெட்டுப்பார்வைக்கு உட்படுத்தும் போதுதான் மனிதாபிமானம் எனும் கற்பிதம் உடைபடுகின்...

The Red Turtle

Image
சினிமாவில் அனிமேஷன் படங்களின் உருவாக்கம் ஆரம்பித்த காலப்பகுதியில், ‘’அனிமேஷன் படங்கள் Live action படங்களைப் போல உயிர்ப்புடன் கூடிய படைப்பாக திகழமுடியாது ; இங்கே மனித கூட்டிணைவுடன் உருவாகும் சினிமா , அங்கே தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தப்படுகின்றது . எக்காலத்திலும் Live action படங்களை அனிமேஷன் படங்களினால் நெருங்கவே முடியாது '' என்ற கூற்றுக்கள் முன்மொழியப்பட்டன . ஆரம்பகாலத்தில் Live action சினிமாக்களோடு ஒப்பிட்டு அனிமேஷன் திரைப்படத்தின் குறையாக அதன் கற்பனை படைப்புலகம்   முத்திரை குத்தப்பட்டது.   கற்பனை திறனென்பது கற்றுகொடுக்க முடியாத தனித்துவமான அம்சம் ; எல்லைகளும் கேள்விகளுமற்ற கற்பனை படைப்புலகத்தை தனது பலமாகவும் தன் அடிப்படை மூலதனமாகவும்   மாற்றிக்கொண்டு , அனிமேஷன்துறை செயற்பட்டதன் விளைவு, காலம் அக்கூற்றுகளை பொய்யாக்கியதோடு, அனிமேஷன் படத்துறை பல பரிணாமங்களை கடந்து சினிமாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கின்ற சக்தியாகிவிட்டதை நாம் அவதானிக்க முடியும். அனிமேஷனில் சாத்தியப்படுத்தப்படும் உயிர்ப்பினை Live action படங்களில் கொண்டுவர முடியாது என்று கருதுகின...