Posts

Showing posts from March, 2018

Dyketactics

Image
பெண்ணின் நிர்வாணம் என்ன செய்யும் ? பதட்டத்தை, பயத்தை, அருவருப்பை,ஆசையை, கிளர்ச்சியை, காம உணர்வினை ....இன்னும் ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை தரக்கூடும். நிஜத்தில் உடல் என்பது உணர்வுகள் கொண்ட சதைப்பிண்டம். உயிருள்ளவரை நம்மை சுமந்து திரிய அதை பராமரிக்க வேண்டிய கடமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நம் உடல் மீதான மறைவுணர்ச்சி செயற்பாடுகளை நிகழ்த்தவே நம் சமுகமும் குடும்ப அமைப்புகளும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன எனலாம். நம் உடலை நாமே நிர்வாணமாக தனிமையில் மட்டுமே காணும் சூழலும் நிர்வாணம் மீதான ஒழுக்க கற்பிதங்களும் அச்சங்களும் வன்முறைகளும் திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அடக்குமுறை கட்டமைப்புக்களே இங்கு அதிகம் உள்ளன. ஒருகட்டத்தில் அந்த இறுக்கமான கட்டமைப்பின் மீதான வெறுப்பின் எதிர்வினையை நிகழ்த்த நிர்வாண உடலை ஆயுதமாக்கும் மனநிலையும் அதனால்தான் எழுகின்றது. இப்படி நிர்வாண உடல் பற்றி ஆயிரம் கதைகள் பேசினாலும் உடலை முன்வைத்து உருவாக்கப்படும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவே இல்லை. இந்த முடிவற்ற முரண்பாடுகளே Barbara Hammer இன் Dyketactics படைப்புலகம்! Barbara Hammer,

Oscarஇல் சுயாதீன படைப்புக்களின் எதிர்காலம் ?

Image
உலகம் முழுவதும் அனிமேஷன் கலைஞர்களும் படைப்புக்களும் பெருகிவிட்ட காலமிது. புதிய படைப்புக்கள், வித்தியாசமான படைப்பாற்றல், மாறுபட்ட சிந்தனைத் தளம் என்று பலவிதமான அனிமேஷன் படைப்புக்களை திரைப்படவிழாக்களின் காண்கின்றோம். எண்ணற்ற திரைப்பட விழாக்களில் சுயாதீனப்படங்கள் வரிசையில் அனிமேஷன் படங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் Oscar திரைப்பட விழாவில் மட்டும் ஸ்டுடியோக்களின் ஆதிக்கமே நிலவி வருகின்றது. 2001 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக  Oscar திரைப்பட விழாவில் அனிமேஷன் படங்களுக்கென்று விருதுகள் அறிவிக்கப்பட்டன. Pixar, Disney, DreamWorks, 20th Century Fox, Sony, Tim Burton, Blue Sky Studios,  Studio Ghibli, Laika, Nickelodeon, Cartoon Saloon போன்ற ஸ்டுடியோக்களின் படங்களே விருது வென்ற படங்களாகவும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களாகவும் காணப்படுகின்றன. இதில் முதலிடத்தில் 9 விருதுகளை வென்று Pixar முதலிடத்திலும் 3 விருதுகளை வென்று Disney இரண்டாம் இடத்திலும் மூன்றாவதாக இரண்டு விருதுகளுடன் DreamWorks நிறுவனமும் காணப்படுகின்றது. அமெரிக்கா எனும் முதலாளித்துவ நாட்டில் அதன் வழித்தோன்றல்க

Oscar Women

Image
இந்த வருடம் Oscar விருதுப்பரிந்துரைப்பில் இடம்பெற்றுள்ள பெண் கலைஞர்களின் தெரிவு தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை இல்லாதளவு இந்த ஆண்டு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம் . நடிகை, துணைநடிகை என்ற பிரிவுகளை தாண்டி திரைக்கு பின்னரான பெண் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. ஒரே ஆண்டில் இத்தனை பரிந்துரைப்புக்கள் ஏன்? #MeToo சர்ச்சை உருவானதால் கட்டாயத்தின் பெயரில் பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கட்டுள்ளதா என்ற ரீதியில் கருத்துகள் எழுந்துள்ளன. இதனை நாம் மறுக்க முடியாது என்பதைப்போலவே முற்றிலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்றே நான் கருதுகின்றேன். நிறவெறி, ஆதிக்க மனநிலை நிறைந்த திரைப்படத் துறையாக திகழும் ஹாலிவுட்டில் பாலின வேறுபாட்டுக்கும் பஞ்சமில்லை எனலாம். திரைப்படங்களை பொறுத்தவரை Male Gazeக்கு உட்பட்ட படங்கள் ஹாலிவுட்டில் அதிகம். Male Gazeக்கு எதிராக பெண்கள் போராட வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக எழுத்திலும் கருத்திலும் எதிர்ப்பு குரலை பதிவு செய்த பின்னரே மாற்றம் நிகழ்ந்தது. இன்று கூட அதன் தாக்க

மாற்றத்துக்கான நிரந்தரம் - Gamperaliya

Image
ஒரு தேசத்தின் உடைமைகளில் அந்த நாட்டின் கலைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. பெருவாரியான தேசங்களின் கலைகளில் சினிமாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனித்துவமானது. உலகளாவிய ரீதியில், சினிமா என்பது கலை மட்டுமல்ல... ஒவ்வொரு நாடும், சினிமாவை மிகப்பெரிய சர்வதேச வணிகமாகவும் அதற்குள்ளே நுட்பமான அரசியல் ஆளுகை தன்மையை ஒளித்து வைத்தும் மறைமுகமாக அறிவுச்சண்டை நிகழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் இலங்கை சினிமாவின் நிலை என்ன என்று ஒரு கேள்விகேட்டால், நமக்கு முழுமையான பதிலை சொல்ல முடியாதளவு குழப்பங்கள் இருப்பதால் மௌனமாக புன்னகைத்து மழுப்புவதையே நம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சற்றே அந்த மௌனத்தை கூறுபிரித்து ஆய்வு செய்தால்.... நாம் ஊமைகள் அல்ல... எல்லாமே ஒருவித வெற்று மௌனம் என்பது இலகுவில் புரிந்துவிடுவதோடு, நம் மௌனத்திற்குள்ளே ஓர் அர்த்தபூர்வமான பதில் புதைந்திருக்கின்றது என்ற உண்மையும்  புலப்படும். இன்று பல நாடுகள் தங்கள் குரலை படைப்புக்கள் மூலம் அழுத்தமாக பதித்து சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுவருகையில், அவர்களால் சாத்தியப்படுத்தப்படும் சினிமா ஏன் இலங்கையில் சாத்தியமில்லை என்று சிந்தித்தால்,