Posts

Showing posts from 2014
Image
நீதிக்கு நெஞ்சோ நிகர் கவிபாட வேளை வந்தது திறந்திருந்த என் பேனையில் வார்த்தைகளைக் கொட்டி குவிக்கிறேன் கிறுக்கல்கள் கவியாகாது இது கிறுக்கச்சியின் உளறல்கள் கவியரங்கில்  நீதிக்கு நெஞ்சோ நிகர்  என்ன கவி சொல்வேன் இங்கு ? வருகிறான் ஒருவன்  என் பக்கத்தில் நிற்க வைக்கிறார்கள்  நிற்கிறான். கண்களில் சிந்தக் காத்திருக்கும் கண்ணீர்  தளர்ந்து போன உடல்  அமைதியும் பயமும் கொண்ட அவன் உள்ளம் பிரார்த்திக்கிறது  சட்டென்று அவன் முகம் மறைத்து  என்னை அவனுடன் இருகப் பிணைத்துவிட்டார் என் அதிகாரி. நேரம் பார்த்து அனுமதிக்க மெல்ல மெல்ல  நான், அவன் கழுத்தை இறுக்கினேன் . என் முழு பலத்தையும் உபயோகித்து  அவன் கழுத்து நரம்புகளை அறுத்தேன். சுவாசக்குழாய் நெரிபட்டு லேசான உடைவுடன்  அவன் நாக்கு வெளித்தள்ள  கண்கள் முழித்தள்ள  மேலும் மேலும் இறுக்கி பிடித்தேன்  வன்மம் பொங்க என் கடமையை தொடர்ந்தேன்  அவன் துடித்தான்  நான் இறுக்கி பிடித்து கழுத்தறுக்க  சில நிமிட போராட்டங்களில் மடிந்தான்  உயிர் பிரிந்த உடன் என் அதிகாரி  என்னை உற்சாகமாய் பெருமை பொங்க பா

The Orphanage

Image
The Orphanage வாழும் போது அன்பு பாசம் உறவுகள் இதெல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் .இறந்த பிறகு ? இறப்புக்கு பின்னர் வாழ்தல் இல்லையா ? அப்பொழுது அன்புக்கும் பாசத்துக்கும் இடமில்லையா ? உண்மையான அன்பு மரணத்துக்கு தயங்காது; மரணித்த பின்னரும் வாழ்தலை உறுதிபடுத்துவதும் அதே அன்புதான்  இதை தான்  The Orphanage வெளிபடுத்துகிறது   கதாநாயகி லாரா .அநாதை சிறுமி .அநாதை இல்லத்தில் வளரும் அவளை ஒரு தம்பதி தத்தெடுகின்றனர். பல வருடங்களுக்கு பின்னர் லாரா தான் வளர்ந்த இல்லத்தை வாங்கி மீண்டும் ஆதரவு இல்லமாக மாற்ற முடிவு செய்கிறாள் . இதற்காக கணவர் கார்லோஸ் , குழந்தை சிமோன் ஆகியோருடன் அங்கு வாழ ஆரம்பிக்கிறாள் . சிமோன் அவ்வப்போது அவனது நண்பர்கள் பற்றி லாராவிடமும் கார்லோஸிடமும் சொல்வது லாராவுக்கு குழப்பத்தை  ஏற்படுத்துகிறது. சிமோனின் நண்பர்கள் யார் கண்ணுக்கும் புலப்படுவதில்லை .இதனால் மகன் சொல்லும் நண்பர்கள் நிஜமில்லை தனது தனிமையை போக்க இப்படி சொல்கிறான் என்று நினைகிறார்கள் ஒரு நாள். லாராவை சந்திக்க ஒரு வயதான பெண்மணி வருகிறாள் .சமுக ஆர்வலர் என்று தன்னை அ டையாளப்படுத்தும் பென
Image
உழைப்பாளர் தினம் வாழ்த்து சொல்றவங்களும் வசை பாடுறவங்களும் இரண்டு தரப்புமே தங்களோட கருத்தை சொல்றாங்க  உழைக்கிற எங்களுக்கு எல்லா நாளுமே எங்க தினம் தான்  என்ன தொழில் என்ன பதவி எவ்வளவு சம்பளம்னு பாகுபட்டோட தானே உழைப்பாளர்களை வரையறுக்கிறோம் ? இன்னைக்கு அதை மறந்தாலும் பாக்கி இருக்குற 364 நாட்களும் அதை யோசிக்கிறோம் தானே ? பணம்- பதவி அடிப்படைல தானே நம்ம உழைப்பு மதிக்கபடுது ? அந்த எண்ணத்துல இருந்து விடுபட்டவங்க நம்மில் எத்தனை பேர் ? சொல்லபோனா எனக்குளேயே அந்த மாற்றம் முழுமையா நிகழலை நான் அதிகம் ஆச்சர்யபடுறதும் மதிகிறதும் சாக்கடை பணியாளர்களை தான் . வறுமை அவர்களது பணிக்கு காரணமா இருந்தாலும் அதை செய்ய முனையுற தைரியமும் சமுகத்தால ஒதுக்கபடுவதை ஏற்றுகொள்ற நிலையும் அசாத்தியமானது நம்ம உடல் கழிவுகளை நாமே பார்த்து அருவருக்கும் போது அதை அப்புறப்படுத்தும் மனிதர்கள் எப்படிபட்ட மனிதர்கள் ? அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் ? கழிவுகளோட கழிவுகளாக அவங்கள புறக்கணிக்கிறதை தவிர்ப்போமே அவங்க இல்லாட்டி நாம வாழ வழி இருக்காது .... முதல்ல அவங்களை கௌரவிப்போம் குறைந்த பட்சம் ஒதுக்கமால் அவமரியாதைக்கு உட்படு
Image
அம்மா-நான்-அன்பு பரிசில்களால் வாழ்த்துகளால் ஈடு செய்ய முடியாத அன்போடு எப்போதும் நீங்கள் ... வெறுமையோடு அமைதியாக இப்போதும் நான் ... இந்த வாழ்வியல் முரண்பாடுகள் உங்கள் அன்புக்கு முன் தோற்றுபோகவே செய்யும் அது புரியாத குழந்தையாக அன்றும் ...இன்றும் ...என்றும் ... நான் 
Image
பெண் சமத்துவம் ? ''மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? அப்படி என்ன உங்களுக்கு உரிமை இல்லை பாரதி காலத்தில் உரிமை இல்லை என்று போராடினால் அது நியாயம் அன்று பெண்கள் அடிமையாக இருந்தார்கள் இன்று உங்களுக்கு என்ன குறை? படிக்க முடியும் வேலைக்கு போக முடியும் விரும்பியபடி பணம் உடை வாழ்க்கைமுறை வசதி வாய்ப்புக்கள் எல்லாம் இருக்கிறது உடன்கட்டை முறை கூட இல்லை எப்படி எல்லா கொடுமைகளும் ஒழிந்தாயிற்று இன்னும் என்ன உரிமை வேண்டும் ? அடக்குமுறை அடக்குமுறை என்று கூப்பாடு போடுகின்றிர்கள் பெண்ணியம் பேசுவது இப்ப ஒரு fashion எப்ப பார்த்தாலும் ஆண்களை குறை சொல்லிக்கொண்டு .....'' இப்படி தொடர்கிறது சிலரின் அங்கலாய்ப்பு .... இந்த வாரத்தைகளை கேட்ட போது எனக்கு கோபமே வரவில்லை .காரணம் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சிந்திப்பது பெரிய விடயம் அந்த சிந்தையை வரவேற்கிறேன் முதலில் ஒருவிடயத்தை பதிவு செய்ய நினைக்கிறன் ஆண்கள் எல்லோரும் தவறானவர்கள் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் கூறவில்லை இருவரும் மனிதர்கள் சரியும் தவறும் கொண்ட சராசரி வாழ்வை கொண்டவர்கள் தான் நாங்கள் ஆண்கள் தவறானவர்கள் அல்ல ....என் வ
Image
அன்றும்... இன்றும்... என்றும்... 7.35க்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன் ... தெருமுனையை கடக்க முன்னர் சைக்கிளில் வந்தவன்  சொன்ன அரைகுறை ஆபாச வாசகம் காதில் விழுந்தது  தொடர்ந்து நடந்தேன் .... பேருந்தில் நடந்துனர் பணம் வாங்கும் சாக்கில்  கைகளை தொட முயன்றார்.என் பக்கத்தில் நிற்கும் பெண்ணுக்கு மிகுதி பணம் கொடுக்கும் சாக்கில் உடலில் படுமாறு கைகளை நீட்ட முயன்றதை மெல்ல நகர்ந்து கைப்பையால் தடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன் நிறுத்தத்தில் இறங்கி நடந்தால் எதிர்படுபவன் அழைக்கிறான் ஏய்...பாப்பா என்று . அடுத்த வசனம் காதில் விழ முன்னர் நடையை வேகப்படுத்தினேன் இரவு இருளை கடைதெரு விளக்குகள் அகற்ற முயல... உள் வீதி வீடுகள் மட்டும் வரவேற்றுகொண்டன . அந்த அரைகுறை வெளிச்சத்தில் மழை சகதியில் அருவருப்போடு நடந்து கொண்டிருக்கையில் கூட நடந்த ஒருவன் அழைத்த வாரத்தைகளை கேட்டும் கேட்காதது போலவே மேலும் நடந்தேன் வீட்டை நெருங்க கொஞ்ச நேரமே இருந்த நிலையில் எதிர்பட்ட ஒரு கும்பல் விசிலடித்து நெருங்க சட்டென்று நகர்ந்து எங்கள் வீதி நுழைந்தேன் வீட்டில் நுழைந்து செருப்பைக் கழற்றுகையில்  கடிகாரத்தில் நேரம் பார்த்

86வது ஆஸ்கார் விருதுவழங்கும் விழா

Image
Adapted Screenplay  Before midnight 1995ல் வெளியான Before sunrise , 2004ல்  வெளியான Before sunset படங்களோட தொடர்ச்சியா கடந்த வருடம் வெளியான படம் தான் Before midnight. Richard Linglater, Ethan Hawke, Julie delpy மூவாரல் எடுக்கப்பட்ட இந்த படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில்... Boston online film awards,39th los angeles awards,san diego film society,indiana film association,national society awards போன்ற விருதுகளை திரைக்கதைக்காக சுவிகரித்துள்ளது . இத்தனை விருதுகளை வென்றதால் நிச்சயம் இந்தப்படம் Adapted Screenplay காண விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதோடு இரண்டாம் பாகமான Before sunset 77 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் Adapted Screenplay விருதை வென்றது . அதனால் விருது நிச்சயம் என்று உறுதிப்படுத்துகின்றார்கள் ரசிகர்கள் . Captain Phillips Captain phillips உண்மை சம்பவங்களின் தொகுப்பு . 2009 ம் ஆண்டு Maersk Alabma என்கிற கப்பலை சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்தி வைத்து மிரட்ட அதை மீட்ட கப்பல் கேப்டன் தான் Richard Phillips.