Posts

Showing posts from June, 2015

Vertigo

Image
வாழ்க்கையில் நமக்கு எப்போதும் பயங்கள் இருந்துகொண்டே இருக்கும் . நிழல் போல தொடரும் பயங்களில் இருந்து வெளிவருவது எல்லோராலும் முடியாது . அந்த பய நிழலை தவிர்க்க வேண்டுமானால் சில விடயங்களை இழந்தால் மட்டுமே சாத்தியம் . பயத்தை பொறுத்தே நம் வாழ்வும் கட்டமைக்கப்பட்டு விடுகிறது . இந்த தத்துவத்தை மர்மபயணத்தின் மூலமாக உணர்த்துகிறது Vertigo. ஜான் ஸ்காட்டி(John Scottie)  மிகச்சிறந்த துப்பறிவாளன்; அனுபவசாலி; அவனது துறையில் அவனுக்கு ஈடுஇணை யாருமே இல்லை என்பார்கள். இந்த புகழ் நீடிக்க, காலம் அனுமதிக்கவில்லை .ஜானிற்கு ஒரு வினோத வியாதி உண்டு.  '' Acrophobia'- உயரமான இடத்திற்கு செல்கையில் அந்த உயரம் காரணமாக பயம் கலந்த தலைசுற்றல் ஏற்படும். இதனால், ஜானின் தொழில் பாதிக்கப்படுகிறது.குற்றவாளி உயர்ந்த இடங்களை நோக்கி  செல்கையில் அவனால் பிடிக்க முடிவதில்லை. இருந்தும், தனது வியாதியை தைரியமாக எதிர்கொள்ள முயல்கிறான் . அப்படி ஒரு நாள் ஒரு குற்றவாளியை துரத்தி செல்கையில், உயரம் அவனுள் பீதியை ஏற்படுத்த தலைசுற்றி கீழே விழ முயல அவனைக் காப்பாற்ற முயலும் போலிஸ் ஒருவரை இழக்கிறார் . சக அதிகாரியின் ம