Posts

Showing posts from November, 2015

Departures

Image
நம் வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாது. நமது வீடுகளிலும் மரணம் நிகழ்ந்திருக்கும். இல்லாவிட்டால்  நிச்சயம் அடுத்தவரின்  மரண வீடுகளுக்கு சென்றிருப்போம் . அப்போதெல்லாம் மரணித்தவர் , அவரின் உறவுகள் துக்க விசாரிப்புக்கள் கண்ணீர் இவை தான் நாம் அறிந்தவை . மரணத்தின் மூலமாக ஜீவியம் நடத்துபவர்களை பற்றி சிந்தித்ததுண்டா ? பிணவறை ஊழியர் , சவப்பெட்டி செய்பவர் ,மின்சார சுடுகாட்டில் பணிபுரிபவர் ,வெட்டியான் , சாவு மேளம் அடிப்பவர் என்று தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் பலரின் மரணத்தை தரிசிகின்றார்கள் .அவர்களது வாழ்வில் மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்  என்ன ? சமுகத்தில் அவர்களை எப்படி பார்கிறார்கள் ? புறக்கணிப்பும் வெறுமையும் அருவருப்பும் கடந்து அவர்களால் இயல்பாக வாழ முடியுமா ? இப்படி என்னை சிந்திக்க வைத்த ,அழ வைத்த ஜப்பானிய  திரைப்படம் தான்  Departures இசைக்கச்சேரிகள், அன்பு மனைவி என்று சந்தோஷமாக வாழ்கிறான் டைகோ( Daigo Kobayashi) . ஒருநாள்- அவனுடைய ஆர்கெஸ்ட்ரா கலைக்கப்படுகிறது. வேலைபோய் விட்ட கவலைக்கு உள்ளாகிறான். மிகுந்த தயக்கத்தோடு மனைவியிடம் தனக்கு வேலை போய்விட்டதாக சொல்ல அவனின

Balut Country

Image
கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் Balut Country படம் முடிந்த பின்னர் நடந்த கலந்துரையாடல் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது . கலந்துரையாடலின் போது இயக்குனரிடம் ''உங்கள் படம் மெதுவாக உள்ளது; திரைப்படங்களை மெதுவாக எடுக்ககூடாது சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் ''என்று ஆரம்பித்து ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற ரீதியில்  வகுப்பெடுக்க ஆரம்பித்தார் ஒருவர். இயக்குனர் Paul Sta. Ana சிரித்துக்கொண்டே'' இது மெலோ டிராமா வகையை சேர்ந்த படம் .அத்தோடு காட்சிகளை மிக மெதுவாக அமைத்ததன் காரணம் அந்த கதாபாத்திரத்தின் இருப்பையும் இயல்பையும் உணர்த்ததான் ....'' என்று சொல்லி விளக்க முற்பட்டும் அது முடியவில்லை. ஒரு கட்டத்தில் ''உங்களுக்கு பொழுது போக்கை ஏற்படுத்துவதற்கு, நான் பாலிவுட் படம் எடுக்கவில்லை; அதேவேளை நான் மோசமான படமும் எடுக்கவில்லை'' என்று முடித்துகொண்டார் . அரங்கை விட்டு வெளியே வந்த பின்னர் இயக்குனரை சந்தித்தேன். ''மெதுவாக நகர்வதாக பலர் சொன்னார்கள். எனக்கு அப்படி தெரியவில்லை காரணம் நான் இதைவிட மெதுவாக நகரும் படங்களை பார்த்துள்ளேன் ....&