Posts

Showing posts from July, 2013

Celluloid

Image
Celluloid வாரம் வாரம் புதுப்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.பழைய படங்களை பார்க்கும் இன்றைய தலைமுறையை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அந்தப்பழையபடங்கள்தான் சினிமாவின் முன்னோடி. அதிலிருந்து தான் சினிமா வளர்ச்சியடைந்து வந்திருகிறது . அந்த படங்கள், சலிப்பு தருகிறது என்ற ஒரே வார்த்தையில் நிராகரித்து விடுகிறோம் .அன்று அவர்களுக்கு என்ன வளம் இருந்தது ? அந்த படங்களை குறைந்த தொழில்நுட்ப வசதியோடு அவர்கள் எடுக்க முனைந்த போது எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் . கறுப்பு வெள்ளை படங்களில் சினிமாவை தொடக்கி வைத்தவர் யார் ?சினிமா எப்படி உருவானது ?எப்படி வளர்ச்சியடைந்தது ?  அந்த கலைஞர்களின்  வலி நிறைந்த வரலாறுகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?  நாம் அறியாத ஒரு கலைஞனுக்கு மரியாதையை செய்யும் அற்புத படைப்பு Celluloid  J.C.டேனியல் மலையாள சினிமாவின் தந்தை .இந்த அடையாளத்தை பெற்றுக்கொள்ள அந்தக் கலைஞன் தொலைத்தது தன் ஒட்டுமொத்த வாழ்க்கையை .சினிமா கனவுகள் தின்ற கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Celluloid.     மேலைத் தேயர்களால் உருவாக்கப்பட்ட சினிமாவை கிழைத்த

தர்மம்

Image
தினமும் வீட்டை விட்டு தெருவை தாண்டும் போது எதிர்படும் மனிதர்கள் எத்தனை எத்தனை ? அவர்களில் ஒரு பிரிவினர் தம் வாழ்க்கைக்காக கையேந்துகிறார்கள் நான் நடக்கும் சிறு தெருவில் குறைந்தது 5 பேராவது எதிர்படுகிறார்கள், கை ஏந்துகிறார்கள் ,கெஞ்சுகிறார்கள் ,கால்தொட்டு யாசிக்கின்றார்கள், கதறி அழுகின்றார்கள் ..... அவர்களின் முகம் பார்க்கும் திராணியற்று குற்ற உணர்ச்சியுடன் கடந்து போகிறேன் நித்தமும் ...  நான் கடந்தவர்களில் யாருடைய வாழ்க்கை இது ? Cast:Master Ashish,Shivaji Rao,Pandiyan,Raaghav,Pradeep,Gayathri,Dwarkesh Crew: Writer – Director: Madonne Ashwin Cinematography: Raja Bhattacharjee Editing & Sound Design: Abhinav Sunder Nayak Sound Effects: Narayanan Camera Assistant: Kannan Assistant Directors: Dwarkesh, Rajkumar, Karthik தர்மம் திரைப்படத்தின் கதை நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் . நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் தான் படத்தில் இடம் பெறுகிறார்கள் . வறுமையில் வாழும் இயலாமை மனிதர்கள் யாசகத்துக்காக கை ஏந்தினால் 'சீ போ' என்று விரட்டுகின்றோம் . ஆனால