Posts

Showing posts from January, 2013
Image
Baran  தாஜ்மஹால் இந்த உலகின் காதல் சின்னம் உலக காதலர்களின் ஆலயமாக கருதப்படுகிற இடம் மிகப்பெரிய பேரரசனான ஷாஜகான்,  பெரும் செல்வத்தால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் உதவியுடன் கட்டிய அந்த நினைவு சின்னம் இன்றும் போற்றபடுகிறது. அவருடைய காதல் கொண்டாடப்படுகிறது .ஷாஜகான் மட்டுமா இந்த உலகத்தில் காதலித்தார்? அவர் மட்டுமா காதலிக்கு நினைவு சின்னம் கட்டினார்? அவரின் காதல் மட்டும்தானா உயர்ந்தது ? இல்லை எல்லாருக்குள்ளும் காதல் இருக்கிறது ஒரு அரசனின் பிரம்மாண்டமான காதலுக்கு மத்தியில் எளிய மனிதர்களுக்கும் காதல் இருக்கிறது என்பதை நாங்கள் யோசிப்பததில்லை  அவர்களின் காதலும் அந்த காதலுக்காக அவர்கள் படும் கஷ்டமும் எங்களால் எப்பொழுதும் கவனிக்கப்படுவதே இல்லை  நம்மால் கவனிக்கப்படாத ஒரு எளியவனின் காதல் கதை  தான் Baran! லத்தீப் கதையின்  நாயகன்.ஒரு கட்டுமானத்தளத்தில் தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுப்பது,உணவு சமைப்பது ,பொருட்கள் வாங்கி வருவது போன்ற வேலைகளை செய்து வருகிறான் .ஒரு நாள் அவன் கடைக்கு சென்றுவிட்டு வரும் போது, அங்கு  வேலை பார்க்கும்  நஜாப் என்ற ஒரு ஆப்கான் தொழிலாளி கிழே