Posts

Showing posts from 2019

மறைமுக பிரச்சாரமும் மாற்றுத்தேர்வும்

Image
ஆட்டோவில் சிக்னலில் பச்சை விழும் வரை காத்திருந்தேன். அந்த நேரம் ஒரு ராணுவவீரர் ஆட்டோக்காரரிடம் அவருடைய டீ-சர்ட்டின் கைப்பகுதியில் இருந்த ராணுவ உடைபோன்ற அலங்காரத்தை சுட்டிக்காட்டி ''அண்ணா தயவு செய்து இதுபோன்ற டிஸைன்களை அணியாதீர்கள், கழட்டச்சொல்வார்கள், அடுத்தமுறை அணியவேண்டாம் கவனமாக இருங்கள்'' என்று அன்போடு சொல்லிவிட்டு சென்றார். ஆட்டோக்காரர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. என்னிடம் திரும்பி ''பாருங்க என்ன ஒரு நன்னடத்தை, என்னை அண்ணா என்று பணிவா அழைத்து இந்த டீசர்ட்டை போடவேண்டாம் என சொல்கிறார். இதே போலீஸ்காரன் என்றால் அவ்வளவுதான். இந்நேரம் கழட்டுடா டீ-சர்ட்டை என்று என்னை அடித்து இழுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போயிருப்பான். ஆனால் இவர்கள் எவ்வளவு மரியாதையாக நடந்துகொள்கிறார். என்ன இருந்தாலும் ராணுவத்தினர் மாதிரி வராது'' என்று பெருமிதமாக நான் இறங்கும் வரை பாராட்டி பேசிக்கொண்டே இருந்தார். ஈஸ்ட்டர் குண்டு வெடிப்பின் பின்னர், மீண்டும் நாங்கள் நடமாட ஆரம்பித்த பின்னர் சந்தித்த முதல் ஆட்டோக்காரர் ''இனி பயமில்லை... ராணுவம் பாதுகாப்பாங்க... முன்ன எப

நாயகவிம்பத்தின் சிதைவுகள்

Image
நாயகன் என்ற கதாபாத்திரத்தூடாக விம்ப மேலாதிக்கம், தமிழ் சினிமாவில் நிறுவப்படுவதை பல ஆண்டுகள் பார்த்துவருகின்றோம் . இவ்வாறு கட்டமைக்கப்படும் ‘’நாயக விம்பம்’’ சினிமாவின் ஆன்மாவை சிதைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது . அத்தோடு சமூகத்தில் மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளை விதைப்பதையும் பாலின ஒடுக்குமுறைகளை எவ்வாறு தோற்றுவித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம் . மக்களுடைய ரசனையை மழுக்கடித்த பெருமை இத்தகைய சினிமாக்களுக்கே உண்டு. ‘சிந்தனைவளர்ச்சி’ என்பதை தடுப்பதோடு தொடர்ந்து சிதைத்தும் வந்திருகின்றன. அதற்கு எளிய உதாரணமாக உலக படங்களையும் உலக இயக்குனர்களையும் பார்க்கும் தற்கால சமுகம் அவர்களை கட்டவுட் வைத்து வரவேற்கும் நிலையும், தனக்கான அடையாளமாக இன்னாரின் ரசிகன் என்று அறிமுகமாவதைபோல இந்த உலக இயக்குனரின் ரசிகன் என்றே தன்னை அறிவுசார் வட்டத்தில் பொருத்த முனையும் மனநிலையூடாக அறிந்துகொள்ள முடியும். தலைவா, தலைவி என்ற பதங்களினூடாக உலக இயக்குனர்களை மட்டுமல்ல சக மனிதர்களின் செயலையும் விதந்து நோக்கும் மனநிலை மிகவும் ஆபத்தான தாழ்வு சிக்கலின் வெளிப்பாடு. சினிமா

குருதிச்சுவையில், பெருகும் சாக்லெட் உலகம்

Image
அடிப்படை மனித இயல்பு என்பது மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வாழும் குணம்தான். உடல் வலிமை, அதிகார வலிமை, அறிவின் மேன்மை என்று காலத்துக்கு காலம் மாறிகொண்டிருந்த இந்த ஆட்படுத்துகை அம்சம், இன்று வணிகர்கள் வசமிருக்கின்றது. நுகர்வு கலாசாரத்தில் மக்கள் அடிமைப்படுத்தி  மக்கள் ஆட்படுத்தும் அவலம் ஒரு புறம் என்றால் நுகர்வு பொருட்களின் உற்பத்தியில் தங்கள் உழைப்பையும் வாழ்வையும் பறிகொடுத்த மக்களும் வளங்களை அடகுவைத்து வாழும் தேசங்களும் நம் கண்ணுக்கு தெரியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றன. உலககெங்கும் நடைபெறும் இந்த அக்கிரமங்களில் ஒரேயொரு  பொருளின் உற்பத்திகாக  அதில் பாதிக்கப்பட்ட  மக்கள் வாழ்க்கையை நமக்கு முன்வைத்த முக்கியமான 2 ஆவணப்படங்கள் தான் The Dark Side of Chocolate, Shady Chocolate.  The Dark Side of Chocolate ஐரோப்பிய அமெரிக்க நிறுவனங்கள் சாக்லெட்டுக்களை உற்பத்தி செய்து வருகின்றன. வெவ்வேறு விதமான சாக்லெட்கள், சாக்லெட்கள் கலந்த உணவுப்பொருட்கள் உட்பட நமது அன்றாட வாழ்வாதார உணவுகளில் சாக்லெட்டின் வகிபாகம் அதிகரிக்கப்பட்டிருகின்ற நிலையில், சாக்லெட்டை தவிர்த்து வாழ முடியா