Posts

Showing posts from February, 2013
Image
ஆரோக்கியம் தரும் அணிகலன்கள் நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விடயம். தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இன்று தங்கத்தை சாதாரண மக்கள் உபயோகிப்பது குறைந்து வருகிறது ஏன் என்றால் தங்கத்தின் விலை மிக உயர்ந்ததாகவும் பலவிதமான fashion நகைகள் ச
Image
என் பயணங்கள்...! பொழியாத மழையில் குடையோடு நடை பழகி நனையும் ஒரு பொழுது. கனவிலா நினைவிலா என்றறிய முடியா நிலையில் நித்தமும்  தொடரும் என் பயணங்கள் ...!
Image
காதல் வலி ... என் விழியில் வழியுது     கண்ணீரில் கனவுகள் ... புது வலியில் ததும்புது     கனவான நினைவுகள் வெற்றிடம் போலவே    வரையறை இல்லாவலி கரைதொடும் நேரத்திலே   காணல் நீராய் காதலே ... திசை அறியாத மேகங்களின் மழை மோதல்கள்    நம் மனதில் விசை புரியாத அணுக்களின் பிழை விளைவு நம் காதலில் மௌனங்கள் மரிக்க நீளும் வார்த்தைகள் அலையாய் மோதும் சிறகில் சிலுவை சுமக்கும் வரமாய் காதலே ... கண்ணில் வளர்ந்து எரியும் தீயில் இந்த இதயம் கருகும் நாளில் எந்தன் ஜீவன் தொலையும் உன்னில் உயிரே ...   என் விழியில் வழியுது    கண்ணீரில் கனவுகள் புது வலியில் ததும்புது    கனவான    நினைவுகள் வெற்றிடம் போலவே    வரையறை இல்லாவலி கரைதொடும் நேரத்திலே    காணல் நீராய் காதலே
Image
Exam நம் வாழ்வில் பரீட்சை அனுபவங்கள் நமக்கு நிறைய இருக்கிறது. முழுமையாக படித்து ,அரைகுறையாக படித்து ,முதல் நாள் இரவில் படித்து ,படிக்காமல்  சென்ற பரீட்சைகள் எத்தனை ?படித்த அனைத்தும் மறந்து போய் என்ன எழுதுவது என்று தெரியாமல் தவித்த தருணங்கள் , பக்கத்து இருக்கையிலிருந்து பதில் வேண்டி எதி ர் ப்பார்த்த நேரங்கள் , எரிச்சலோடு சில திருட்டு தனங்களை சகித்த பொழுதுகள் , பொறாமையோடு நன்றாக எழுதுபவரை பார்த்து மனதில் திட்டியது , பரீட்சை தாளில் கடிதங்களையும் கவிதைகளையும் கிறுக்கி தள்ளியது.  இப்படி பரீட்சை,பரீட்சை நிலைய அனுபவங்கள் தனி சுவாரஸ்யம்  பரீட்சையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் அதுவும் மிக மிக சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவான ஒரு திரைப்படம் இருக்கிறது . அந்த படம் தான் Exam ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் C .E .O பதவிக்கு  பல கட்ட தேர்வுகள் முடிந்து கடைசி தேர்வு நடைபெறுகிறது. கடைசி தேர்வில் பங்கு பற்றுபவர்கள் 8 பேர். ஜன்னல்கள் இல்லாத மிக சிறிய மூடிய அறையில் அவர்கள் அனைவரும் அமர்த்தப்படுகிறார்கள் . அவர்களுக்கு ஒரு பரீட்சை தாளும் பென்சிலும் வழங்கப்படுகிறது. பரீட்