Posts

Showing posts from August, 2013
Image
UP வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்த பயணம் சாகசங்கள் நிரம்பியதாக சராசரி வாழ்வில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானோர் ஆசைப்படுகிறோம் . மற்றவர்களிலிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக்காட்ட அல்லது தனித்து அடையாப்படுத்த நம் தோற்றம் ,இயல்பு ,குணம் ,வாழ்முறை என்று அனைத்தையும் மாற்றிக்கொள்ள  முனைகிறோம் . அப்படி எல்லாம் அடைந்த பிறகு அதில் சந்தோசமும் நிம்மதியும் இருகிறதா என்றால் பெரும்பாலானோருக்கு இல்லை என்றே சொல்லலாம் .சராசரி வாழ்க்கையில் சந்திக்கும் அன்பு கலந்த அற்புத நிமிடங்கள் சாகச வாழ்க்கையில் கிடைப்பதில்லை .நமக்கிருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்க்கையில் அப்படிபட்ட சந்தோசங்கள் இல்லாத நிலை   சில சமயம் வெறுமை தந்துவிடும் . உண்மையான அன்புடன் பிறருக்கு உதவும் சில சந்தர்ப்பங்கள் ,பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் இயல்பு வாழ்க்கை  இது  தான் உண்மை,1000 சாகசங்கள் ஈடாகாது  அன்பின் சில நிமிட தருணங்களுக்கு என்பதை உணர்த்திய அற்புத திரைப்படம் தான் UP                         சார்லஸ் முண்ட்ஸ் ஒரு சாகச வீரர் தென் அமெரிக்க காடுகளில் உள்ள ஒரு அபூர்வப
Image
நீ...நான்...காதல்...  நீ இன்றி நான் இல்லையே ... உடல் இன்றி நிழல்  இல்லையே .. உயிர் தேடும் உடல் போல  நம்மை தேடிடும் நம் காதலே  வினா  தேடும் விடை  போல முதல் முரணாய் நாமிருவர் ... நுண் பூகம்ப விரிசல்கள் போல  பிரிந்த நம் காதலே ... காதலின் மழையிலே என் மௌனங்கள் கரைய உன் அருகில் வாழ்ந்திட என் ஆயுள் நினைக்க கண்ணீர் துளியில் கரையும் இதயம் கவிதை பாடும் உனக்காகவே  எல்லாம் கனவாக நிஜங்கள் நஞ்சாக உயிர் வதை தரும் என் காதலே நீ இன்றி நான் இல்லையே ... உடல் இன்றி நிழல்  இல்லையே .. உயிர் தேடும் உடல் போல  நம்மை தேடிடும் நம் காதலே  உன்னைக் கண்ட வேளை  வாழ்வில்  உன் சிரிப்பில் நிலைத்த நாட்கள் உலகில்  கண்ணில் வளர்ந்த காதல் உயிரில்  நினைகிறதே மனதே  உன் கைகள் கோர்த்து சென்ற நேரங்கள்  சேர்ந்து நடந்த அந்தி சாலைகள்  தோளில் சாய்ந்த அன்பு பொழுதுகள்  நினைகிறதே மனதே  மனதினில் ஒரு கனம் பரவ நினைவினில் அது ரணமாக  கண்ணிலே அது விஷமாக  கவிதைகள் அதன் வசமாக  புரியாத காதலில் பிரியாத நேசங்கள்  நம்  நினைவுகள் கனவோடு காத்திருக்க.. உனக்கான வாழ்வில்

A short film about love

Image
காதல் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் வாரத்தை ...காதல்   என்பது என்ன ? அன்பின் வெளிப்பாடு என்றால் அதில் காமத்தின் தேவை தான் என்ன ? உள்ளக்கிளர்ச்சி தான் காதல் என்றால் உடல் உரசல்களுக்கு அவசியம் இல்லையே ...காதல் என்பதன் மறைமுகப் பொருளே உடல் புணர்ச்சியின் தேவை தானா உடல் தவிர்த்து மனநேசத்தோடு மட்டும் காதல் வாழாதா ?  இந்த கேள்விகளுக்கும் குழப்பங்களுக்குமான பதில் தான்  A short film about love வார்சாவில் ஒரு பெரிய அடுக்குமாடிக்குடியிருப்பில் தன் வளர்ப்பு தாயோடு வசித்து வருகிறான் தோமக்.  தபால் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே படித்து வருகிறான் . சுவாரஸ்யமற்ற அன்றாட வேலைகளிலிருந்து அவனை விடுவிக்கும் ஒரே அம்சம் காதல் ! எதிரிலுள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கிறாள் அவனுடைய தேவதை . அவள் பெயர் மேக்தா. மேக்தாவின் வாழ்வுக்கு எந்த விதிகளும் கட்டுபாடுகளும் இல்லை. தினம் ஒரு காதலன்,அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் நாட்கள்... என்று கடந்து போகிறது அவள் வாழ்வு ! அவளிடம் தோமக் நேசம் கொள்கிறான். தினமும் அவளை தொலைநோக்கி வழியே பார்த்து ரசிப்பதன் மூலம் காதலை வளர்த்துக் கொள்ளும்  தோ