Posts

Showing posts from January, 2018

Komaali Kings

Image
கோமாளி கிங்ஸ் திரைப்படத்தை திரையரங்கில் முதல்நாள் காணவேண்டும் என்று எண்ணியிருந்தேன். இயக்குனர் கிங்ரட்ணம் அவர்கள் ஊடக திரையிடலுக்கு வருமாறு அழைத்திருந்தார். அதனால் முன்னரே பார்க்க நேர்ந்தது. அதனடிப்படையில் சில விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். உலக நாடுகளின் திரைப்படங்களை பற்றி பேசுகின்றோம் எழுதுகின்றோம், இலங்கை தமிழ் படங்கள் என்று பெயர் கூறக்கூட முடியாதளவு இருக்கின்றோமே என்ற கவலை நமக்குள் உள்ளது. அந்த நிலையை மாற்ற சுயாதீன படங்கள் மட்டுமே தொழிற்பட்டு வந்த நிலையில், தொழிற்துறை சினிமாவை மீள் கட்டியெழுப்பும் விதமாக வெளியாகவுள்ளது கோமாளி கிங்ஸ் திரைப்படம். இலங்கையானது நில அமைவு , அரசியல் மற்றும் மக்கள் வாழ்வியலின் அடிப்படையில், சுயாதீன திரைப்படங்களுக்கான சிறந்த களமாக காணப்பட்டாலும், தமிழ் மக்களை பொறுத்தவரை சுயாதீன சினிமா மீதான தெளிவும் புரிதலும் இல்லாத நிலையில் தமிழக திரைப்படங்களின் வெற்றி, வணிகப்புகழ், அந்தஸ்து, நாயக விம்பம் என்பவற்றின் மீதான ஈர்ப்பும் பிரமிப்பும் கொண்டிருப்பதால் தொழிற்துறை சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பான்மையானவர்களிடம் காணப்படுகின்றது.

Dharmasena Pathiraja

Image
''ஒவ்வொரு நாட்டிலும் முதல் திரைப்படம் வெளியானதும் அந்த தேசத்தின் சினிமா உருவாகிவிட்டதாக வரலாற்றில் ஆண்டுகளை பதிந்து கொள்கிறோம். ஆனால் நிஜம் வேறு .... பிலிம்சுருளில் எடுக்கப்பட்ட அசையும் படங்கள் அனைத்தும் சினிமாக்கள் அல்ல. கதையின் அத்தியாய விளக்கமாக, உரையாடல் தொகுப்பாக, மேடை நாடகப்பதிவாக ....என்று பல கட்டங்களைக்கடந்து ஏதோ ஒரு புள்ளியில்தான் படைப்பாளியின் சினிமா உருவாகும். அன்றிலிருந்து அந்த தேசத்தின் முதல் சினிமா உருவாக்கப்பட்டு, அதன் நீட்சியாக சினிமா பிரவாகமெடுக்கும். இலங்கை சினிமா வரலாற்றில் திரைப்படங்கள் ஆரம்பிக்கப்பட்டு இயக்குனர் பட்டியல் உருவாக்கப்பட்டாலும் சினிமா என்பதின் தோற்றம் தர்மசேன பதிராஜ என்ற படைப்பாளியால்தான் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை சினிமாவின் ஆரம்பகர்த்தாவாகவும் இன்றைய படைப்பாளிகளின் பிதாமகனாகவும் திகழ்பவரின் படங்களின் .......'' இலங்கை சினிமா பற்றிய இலக்கிய சஞ்சிகைக்கான கட்டுரையை பதிராஜவின் படங்களைப்பற்றியும் அந்த படைப்புகள் உருவாக்கிய தனித்துவமான இலங்கை சினிமா துறைப்பற்றியும் மேற்கூறப்பட்ட வரிகளோடுதான் ஆரம்பித்திருந்தேன். ஒருகட்

அந்த நிமிடம்

Image
சட்டென்று கடந்து போன நிமிடங்களில் தொலைந்த வார்த்தையை நினைவூட்ட தடுக்கிறது ஏதோ ஒன்று . புகைப்படத்தில் முகம் பதிக்க முன்னர் அசலான இந்த சலன முகம் யாருக்கு பிடிக்கும் ? தயக்கமும் கேள்வியும் மீளவும் தொடர்ந்த போது என்ன சொல்லியிருப்பேன் நான் ? ம்.....நினைவுகளின் நீட்சியில் ஒளிந்து கொண்ட வார்த்தையை கண்டெடுக்க ஒரு கணம் கொடு . மீண்டும் தொலைந்த வார்தைகளில் ஒளிந்து கொள்ள தயாராகிறேன்.