Posts

Showing posts from April, 2018

இதே நாளில் ...

Image
உலகின் கிழக்கு  கடலின் ஒரு தீவில் வசித்த  எனக்கும் மேற்கு  கடலின் மறு தீவில் வசித்த உனக்கும் அறிமுகம் இதே நாளில் ..... துயரும் வலியும் பெருகிய தருணத்தில் நான் தனிமையும் அமைதியும் நிரம்பிய நிலையில் நீ பேரன்பின் பிணைப்பில் சந்தித்துள்ளோம். இந்த ஓராண்டில் உனக்கும் எனக்கும் வாழ்க்கை நிறையவே மாறியிருகின்றது. இருவரின் தேடல்களும் கனவுகளும் வேறுவேறு நமது  உலகங்கள் எப்போதும்  மாறுபட்டவை அதில்  முரண்பாடுகள் எண்ணற்றவை உனக்கும் எனக்கும் பொதுவில், மனிதர்கள் நிறையவே வந்து போயிருகின்றார்கள் நமக்கான கண்ணீரும் புன்னகையும் சில பக்கங்களை அதிகரித்திருகின்றது நமக்குள் தீர்க்கப்படாத கேள்விகள் கோப்பையில் எஞ்சியிருக்கின்றன சண்டையிட்டு விவாதிக்க   இன்னும் நேரம் மிச்சமிருகின்றது பயணிக்க வேண்டிய சாலைகள் காத்திருக்கின்றன நமக்குள் பகிர்தலின் ஆழமும் அன்பும் ஒரு எரிமலையின் தீகொண்ட நீர் போல சுரந்து தகிக்கின்றது எல்லா தேசத்தின் விடியல்களுக்காகவும் நட்சத்திரங்களை உறங்கவைக்க நமது மௌனத்தின் இசை மெலிதாக ஒலித்து  பரவட்டும்

Tree of life

Image
சினிமா எனக்கு ஆன்மிகம் ! என் வாழ்க்கையில் உடைந்து நொறுங்கும் போதெல்லாம் டெரன்ஸ் மாலிக்கின் படைப்புலகத்திற்குள் நுழைந்து என்னை மீட்டுக்கொள்வேன். என்னைச் சுற்றி என்ன நடந்தாலும் யார் என்ன செய்தாலும் அமைதியாக கடந்து செல்ல சினிமாவின் ஆன்மிக அனுபவமே வழிநடத்துகின்றது. திரைக்கதை எழுதுகையில் நாம் பார்க்ககூடிய செயல்களை மட்டுமே எழுத முடியும். உணர்வு தளங்களில் எழுத முடியாது. செயல்பாடுகளின் வழியே எழுதப்பட்ட சினிமாவை, உணர்வுகளின் வழியே பார்வையாளனை அடையச் செய்ய, பல சூட்சுமங்களை கையாண்டு, பார்வையாளர்களையும் சேர்த்தே இயக்கவேண்டிய நிலை இங்குண்டு. டெரன்ஸ் மாலிக் எந்த சூட்சுமங்களையும் கையாள்வதில்லை. தன் அறிவிலிருந்து திரைப்படங்களை உருவாக்காமல் மனதிலிருந்து உருவாக்குகின்றார். திரையுலகில் இருக்கும்போதே யாரிடமும் எதுவும் கூறாமல் 20 வருடங்கள் தொலைந்து போனார். அந்த தவப்பயணமே மாபெரும் படைப்புலகத்தை அவருக்குள் உருவாக்கி கொடுத்திருக்கின்றது. நான் எப்போதும் கூறுவதுதான் ... வாய்ப்புக்கள் எவரையும் இயக்கினராக்கிவிடும் ஆனால் படைப்பாளியாக தன்னையே அர்பணிக்க வேண்டும். வாழ்க்கையும் வாழ்தலும் மிக மிக