Posts

Showing posts from 2015

Departures

Image
நம் வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாது. நமது வீடுகளிலும் மரணம் நிகழ்ந்திருக்கும். இல்லாவிட்டால்  நிச்சயம் அடுத்தவரின்  மரண வீடுகளுக்கு சென்றிருப்போம் . அப்போதெல்லாம் மரணித்தவர் , அவரின் உறவுகள் துக்க விசாரிப்புக்கள் கண்ணீர் இவை தான் நாம் அறிந்தவை . மரணத்தின் மூலமாக ஜீவியம் நடத்துபவர்களை பற்றி சிந்தித்ததுண்டா ? பிணவறை ஊழியர் , சவப்பெட்டி செய்பவர் ,மின்சார சுடுகாட்டில் பணிபுரிபவர் ,வெட்டியான் , சாவு மேளம் அடிப்பவர் என்று தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் பலரின் மரணத்தை தரிசிகின்றார்கள் .அவர்களது வாழ்வில் மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்  என்ன ? சமுகத்தில் அவர்களை எப்படி பார்கிறார்கள் ? புறக்கணிப்பும் வெறுமையும் அருவருப்பும் கடந்து அவர்களால் இயல்பாக வாழ முடியுமா ? இப்படி என்னை சிந்திக்க வைத்த ,அழ வைத்த ஜப்பானிய  திரைப்படம் தான்  Departures இசைக்கச்சேரிகள், அன்பு மனைவி என்று சந்தோஷமாக வாழ்கிறான் டைகோ( Daigo Kobayashi) . ஒருநாள்- அவனுடைய ஆர்கெஸ்ட்ரா கலைக்கப்படுகிறது. வேலைபோய் விட்ட கவலைக்கு உள்ளாகிறான். மிகுந்த தயக்கத்தோடு மனைவியிடம் தனக்கு வேலை போய்விட்டதாக சொல்ல அவனின

Balut Country

Image
கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் Balut Country படம் முடிந்த பின்னர் நடந்த கலந்துரையாடல் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது . கலந்துரையாடலின் போது இயக்குனரிடம் ''உங்கள் படம் மெதுவாக உள்ளது; திரைப்படங்களை மெதுவாக எடுக்ககூடாது சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் ''என்று ஆரம்பித்து ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற ரீதியில்  வகுப்பெடுக்க ஆரம்பித்தார் ஒருவர். இயக்குனர் Paul Sta. Ana சிரித்துக்கொண்டே'' இது மெலோ டிராமா வகையை சேர்ந்த படம் .அத்தோடு காட்சிகளை மிக மெதுவாக அமைத்ததன் காரணம் அந்த கதாபாத்திரத்தின் இருப்பையும் இயல்பையும் உணர்த்ததான் ....'' என்று சொல்லி விளக்க முற்பட்டும் அது முடியவில்லை. ஒரு கட்டத்தில் ''உங்களுக்கு பொழுது போக்கை ஏற்படுத்துவதற்கு, நான் பாலிவுட் படம் எடுக்கவில்லை; அதேவேளை நான் மோசமான படமும் எடுக்கவில்லை'' என்று முடித்துகொண்டார் . அரங்கை விட்டு வெளியே வந்த பின்னர் இயக்குனரை சந்தித்தேன். ''மெதுவாக நகர்வதாக பலர் சொன்னார்கள். எனக்கு அப்படி தெரியவில்லை காரணம் நான் இதைவிட மெதுவாக நகரும் படங்களை பார்த்துள்ளேன் ....&

FAILAN

Image
காதல்- ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொள்வது அவருக்காக தன்னை மாற்றிகொள்வது அவரோடு வாழ்வை பகிர்ந்து கொள்வது போன்றவை தானா ?  நேசிப்பு என்பதில் தனித்திருத்தல், காத்திருத்தல் என்பவை உள்ளடங்காதா ? தனித்த ஒருவரின் நேசிப்புக்கு அர்த்தமோ அடையாளமோ ஏன் இல்லை ....? எதிர்பார்ப்புகள்  இல்லாத காதல் புயல், தென்றல் தவிர்த்து உணரப்படாத  அந்த காற்றை போலவே எப்போதும் ..... கதாநாயகியின் பெயர்  Failen. சீனாவிலிருந்து கொரியாவுக்கு வருகிறாள். பெற்றோர்கள் இறந்தபின்பு யாருமற்ற நிலையில் தூரத்து உறவினர்களை தேடி கொரியாவுக்கு வந்தால், அவர்கள் எப்போதோ கனடாவுக்கு இடம்பெயர்ந்துவிட்ட விடயம் தெரிகிறது. யாருமற்ற நிலையில் அவளை சிகப்பு விளக்கு பகுதிக்கு விற்க ஒருவன் முயல்கிறான். அப்போதுதான் தெரிகிறது Failenக்கு தீராத வியாதி இருப்பதாகவும் நோயோடு போராடி அவள் வாழ்ந்துகொண்டிருகிறாள் என்பதையும் அறியும் அவன் வேறு வழியின்றி பணத்துக்காக அவளுக்கு உதவ முன்வருகிறான். திருட்டுத்தனமாக விவாகம் செய்தால் கொரியாவில் வாழிட உரிமை கிடைக்கும் என்று சொல்லி விவாக பத்திரங்களை தயார் செய்கிறான். Failenஐ திருமணம் செய்ய தனது நண்

The Clue:4th Period Mystery

Image
இலக்கிய வகுப்பு ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்கள் குறிபெடுத்துக் கொள்கின்றார்கள் .அந்த மாணவர்கள் கூட்டத்தில் ஒருவன் ஜங் ஹூன் (Jung-hoon) .வகுப்பில் சிறந்த மாணவனாக நற்பெயர் கொண்டவன் . எழுதும் போது எதேச்சையாக முன்னிருக்கையைப் பார்கிறான் . டா ஜங் (Da-jung)  எப்போதும் நீளக் கூந்தலை விரித்துவிட்டிருபாள் அதனால் curtain என்றே அனைவரும் அழைப்பார்கள் . பாடப்புத்தகத்திற்குள் குற்றங்கள் தொடர்பான புத்தகத்தை மறைத்து வைத்து வாசிக்கிறாள் .அவளது மேஜையில் இருப்பது எல்லாமே கிரைம் தொடர்பான புத்தகங்கள் . அவளது செய்கையை பார்த்துவிட்டு மீண்டும் பாடத்தை கவனிக்க தொடங்குகிறான் ஜங். ஒருவனை விஷம் வைத்து எப்படி கொல்லலாம் என்பதை பற்றி curtain மனதிற்குள் வாசிக்கையில் திடிரென்று பின் இருக்கையில் சத்தம் கேட்கிறது . பின்வரிசை மாணவன் வாயில் நுரை தள்ளி துடிதுடிக்க அனைவரும் பதறுகிறார்கள் .ஜங் ஆம்புலன்சை அழைக்க முயல, டா அந்த மாணவனை தொடர்ந்து தனது கேமராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறாள் . சில நாட்களுக்கு பின்பு- மாணவன் உயிர்  பிழைக்கிறான் .அந்த மாணவன் உட்பட எல்லோரும் food poison  என்று நம்ப  curtai

காக்கா முட்டை

Image
காக்கா முட்டை   –நான் உணர்ந்ததை கொஞ்சம் பகிர்கிறேன் :)  காக்கா முட்டை  கதை நாயகர்களின் பெயர் இதுதான்.   2   சிறுவர்கள் மூத்தவன் பெரிய காக்கா முட்டை, சிறியவன் சின்ன காக்கா முட்டை.  புறநகர் பகுதியான சேரியில் ஒரு சிறு குடும்பம் .அந்த குடும்பத்தில் 2 சிறுவர்கள் . அப்பா சிறையில், அம்மாவும் அப்பத்தாவும் ஒரு குட்டி நாயும், சிறிய அறையில் குடும்பமாக வாழ்கிறார்கள் . பீட்சா கடை திறக்கப்படுகிறது.சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைபடுகிறார்கள் . தினமும் 1௦ ருபாய் சம்பாதிக்கும் சிறுவர்கள் எப்படி 300 ரூபாய் பீட்சாவை சாப்பிட்டார்கள் ? இதுதான் படத்தின் கதை. சிறுவர்கள் இருவரும் காக்கா முட்டை குடித்து வளர்கிறார்கள் .இதனால் அனைவரும் கேலி செய்கிறார்கள். தாய்திட்டும் போது,அப்பத்தா ”காக்காவும் பறவை தானே நம்ம கூடவே இருக்குது.முட்டை விக்குற வெலைல அதை வாங்க முடியுமா ?” என்று பேரன்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் .காக்கைகள் கூடு கட்டி வாழும் மரமும் மரம் சார்ந்த இடமும் திடிரென்று ஒருநாள் பூட்டப்படுகிறது. வியாபார ஸ்தலமாக மாறுவதால் மரம் அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு இறுதியில் மிகப்பெரிய பீட்சா கடை அங்கு திறக்கபடுக

SE7EN

Image
திங்கட்கிழமை காலை ...மழை பெய்து கொண்டிருகிறது . பழைய கட்டிடத்தை நோக்கி செல்கிறார்கள் துப்பறிவாளர்களான வில்லியம் சொமர்செட்டும் டேவிட் மில்லரும் . மிகவும் அழுக்கடைந்த அறை ....இருட்டு ....ஒரு மாமிசமலை போன்ற பருமனான மனிதன், வயிறு வெடித்து இறந்து கிடக்கின்றான் . அவனது கால்களும் கைகளும் முட்கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது . அளவுக்கதிகமாக அவனை சாப்பிடச்செய்து கொடூரமாக கொலை செய்திருகிறார்கள்  என்று தெரிகிறது . அடுத்த நாள் - நகரத்தின் மிக பிரபலமான வக்கீல் ....தனது உடற்பகுதியை தானே வெட்டி எடைபோட கொடுத்திருக்கிறார் ,மேசைக்கடியில் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டு இறந்த நிலையில் அவரது உடல் கிடைக்கிறது . தரையில் 'GREED' (பேராசை ) என்று இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது . முன்னர் நடந்த கொலையில் GLUTTONY (பெரும்தீனி)  என்று எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது . இந்த வாரத்தைகள் பைபிளில் காணப்படுகின்றன . PRIDE (பெருமை ) ENVY (பொறாமை  ) GLUTTONY(பெரும்தீனி) LUST( இச்சை ) WARTH (பெரும்கொபம் ) GREED(பேராசை ) SLOTH(சோம்பேறித்தனம்)            7 பாவங்கள் இவை இந்த பாவங்களை செய்தவ

Vertigo

Image
வாழ்க்கையில் நமக்கு எப்போதும் பயங்கள் இருந்துகொண்டே இருக்கும் . நிழல் போல தொடரும் பயங்களில் இருந்து வெளிவருவது எல்லோராலும் முடியாது . அந்த பய நிழலை தவிர்க்க வேண்டுமானால் சில விடயங்களை இழந்தால் மட்டுமே சாத்தியம் . பயத்தை பொறுத்தே நம் வாழ்வும் கட்டமைக்கப்பட்டு விடுகிறது . இந்த தத்துவத்தை மர்மபயணத்தின் மூலமாக உணர்த்துகிறது Vertigo. ஜான் ஸ்காட்டி(John Scottie)  மிகச்சிறந்த துப்பறிவாளன்; அனுபவசாலி; அவனது துறையில் அவனுக்கு ஈடுஇணை யாருமே இல்லை என்பார்கள். இந்த புகழ் நீடிக்க, காலம் அனுமதிக்கவில்லை .ஜானிற்கு ஒரு வினோத வியாதி உண்டு.  '' Acrophobia'- உயரமான இடத்திற்கு செல்கையில் அந்த உயரம் காரணமாக பயம் கலந்த தலைசுற்றல் ஏற்படும். இதனால், ஜானின் தொழில் பாதிக்கப்படுகிறது.குற்றவாளி உயர்ந்த இடங்களை நோக்கி  செல்கையில் அவனால் பிடிக்க முடிவதில்லை. இருந்தும், தனது வியாதியை தைரியமாக எதிர்கொள்ள முயல்கிறான் . அப்படி ஒரு நாள் ஒரு குற்றவாளியை துரத்தி செல்கையில், உயரம் அவனுள் பீதியை ஏற்படுத்த தலைசுற்றி கீழே விழ முயல அவனைக் காப்பாற்ற முயலும் போலிஸ் ஒருவரை இழக்கிறார் . சக அதிகாரியின் ம
Image
பெண்  சுயம்   –   ஒரு மாற்றுப் பார்வை  ''என் கையிலிருப்பது ஒரு பேனா .இதே மாதிரி தோற்றத்தில் இதே மாதிரி  மையளவில் இதே மாதிரி செயல் திறத்துடன் லட்சக்கணக்கான பேனாக்கள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும்  உள்ளது . இந்த மையில் நாம் என்ன எழுதிறோம் என்பதை பொறுத்து தான் அந்த பேனாவுக்கு அர்த்தம் கிடைகிறது . இந்த பேனா மாதிரி தான் பெண் வாழ்க்கையும் . பெண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உடல் உறுப்புக்கள் ,ஹார்மோன்கள், செயல்திறனுடன் இருக்கிறோம் .அதுவும் கோடிக்கணக்கில் . அதில் எத்தனைப் பேர் அடையாளங்களாக இருக்கிறார்கள் ? அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறார்கள் ? பெண் சுயம் என்று நான் சொல்வது சுய அடையாளத்தை .தன்னை தானே செதுக்கி உயரங்களை சிகரங்களை  நோக்கி செல்கிற பெண்ணோட தேடல் வெளிதான் நான் பேசபோற சுயம் . Wயோட மகள்,  Xஓட சகோதரி,  Yயுடைய மனைவி, Zஉடைய அம்மா இப்படிதான் பல பெண்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் . வீட்டைத்தாண்டி அவர்களின் பெயர் இல்லை .ஏன் திருமணம் ஆனதற்கு  பிறகு திருமதி என்ற அடையாளத்திற்குள் அவள் பெயரே அவளுக்கு சொந்தமில்லை . அதான் இனிஷியல்