Posts

Showing posts from May, 2013
Image
A Millionaire's first love... நம் வாழ்வில் எத்தனையோ பேர் நம்முடன் வாழ்கிறார்கள்    அனைவரையும் நாம் நேசிப்பதில்லை . அம்மா,அப்பா,சகோதர்கள்,நண்பர்கள்,வாழ்க்கை துணை இப்படி நம் நேசிப்பு வட்டம் மிகச் சிறியதே ... இந்த சிறிய நேசிப்பு வட்டத்தில் வாழ்பவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு வைத்துள்ளோம் . அவர்கள் அருகிருப்பை அதிகம் விரும்புகிறோம் .அவர்களுடன் வாழ் நாட்களை அனுபவிக்க எண்ணுகிறோம். பிடித்தவர்களுடன் பிடித்த வாழ்க்கை எவ்வளவு அருமையானது ? ஆனால் நம் நேசத்துக்குரியவர் நம்மை விட்டு பிரியப்போகிறார் அதுவும் நிரந்தரமாக உலகை விட்டு போகப்போகிறார் என்று அறிகையில் எப்படி இருக்கும் ? அவரின் பிரிவு வலி என்றால், பிரிவு நிகழப்போகிறது என்பதை அறிந்து அவருடன் வாழும் வாழ்க்கை அதீத வலியை தரும். அந்த வலியோடு கடக்கும் நாட்கள் மிக கொடுமை . அந்த வலிதரும் உறவு நம் காதலாக இருந்தால் ... அந்த காதலின் கதைதான் A  millionaire's first love ஜே க்யூன் ( Kang Jae-Kyung) மிகப் பெரிய கோடீஸ்வரன் .சிறுவயதில் பெற்றோரை இழந்து பணத்தை மட்டும் ஒரே துணையாக கொண்டதால் முரட்டுத்தனம் கொண்டவனாகவும் திமிர்