Posts

Showing posts from August, 2018

Paths of the Soul - ஆன்மாவின் யாத்திரை

Image
ஆன்மிகம் என்பது உள்ளார்ந்த ரீதியாக உணரப்படும் அமைதிநிலை. சிலை வழிபாடுகள், சடங்குகள், மத போதைனைகள் என்பன ஆன்மிகம் அல்ல. மதங்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி இயங்குகையில் ஆன்மிக அனுபவம் நிகழ்வதில்லை. நம் எண்ணங்களினால் செயல்களில் வெளிப்படும் அமைதியே நமக்குள் நிலவும் ஆன்மிகத்தை புலப்படுத்தும். அத்தகைய ஆன்மிக யாத்திரையில் உணர்த்தப்படும் நம்பிக்கை ஒளியை திரையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் தான் Paths of the Soul . திபெத் நாட்டின் சிறியதொரு கிராமத்தை சேர்ந்த சிலர், தலைநகரிலுள்ள Lhasa வுக்கு, 1,200 மைல்கள் தரையில் வீழ்ந்து வணங்கியபடியே நடைபயணமாக மேற்கொள்ளும் ஆன்மிக யாத்திரையூடாக, அவர்களது அன்பு, பொறுமை, அமைதி, வாழ்வியல் அணுகுமுறை என்பவற்றில் வெளிப்படுத்தப்படும் ஆன்மிக உணர்வுவை இந்த ஆவணப்படம் பதிவுசெய்கின்றது. இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட தேவையும் காரணமும் இருக்கின்றது. குடும்பத்தின் தீவினைகள் நீங்க , விலங்குகளை கொன்ற பாவம் தீர்க்க, வாழ்வில் இறுதி அமைதியை நோக்கி என்று பல எண்ணப்பாடுகளுடன் ஒன்றாக பயணிக்கும் இவர்களது பலவருட பயணத்தின் வழியாக வாழ்

BARONESA

Image
ஆண்களின் பார்வையில் உருவாக்கப்படும் பெண்களின் உலகமும் பெண்களின் பார்வையில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் உலகமும் மாறுப்பட்டவை. இயக்குனரின் பாலின அடையாளத்தில் முரண்கள் வெளிப்படுவதில்லை. படைப்பில் வெளிப்படும்  நுணுக்கமான அணுகுமுறையிலேயே பெண்களின் படைப்புலகம் உயிர்ப்படைகின்றது. அதில் ஆவணப்படங்களின் தாக்கம் தனித்துவமானது. அந்தவகையில் பலதரப்பட்ட சினிமாக்களை பார்த்தாலும் உலகளாவிய ரீதியில் வெளியாகும் ஆவணப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கேள்விகளையும் குழப்பங்களையும் விட்டுச்செல்கின்றன. சமிபத்தில் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய ஆவணப்படம் Baronesa . 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பிரேசில் நாட்டு ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் Juliana Antunes. சேரிப்புறத்தில் வாழும் Andreia, அந்த சூழலில் வாழ விரும்பாமல் அங்கிருந்து வெளியேற எண்ணுகின்றாள். எங்கிருந்தோ வந்து, அங்கு குடியேறிய Leid, சிறைக்கு சென்ற கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் அங்கே தங்கி வாழ்கிறாள். போதைப்பொருள் கும்பல்,குண்டர் கும்பல் சண்டைகளில் தப்பித்து வறுமையை மீறி வாழும் இருவரது வாழ்க்கை நிகழ்வுகளை நேரடியாக

அதிகாரத்தின் இழைகள்

Image
The Experiment    வன்முறை - குற்றமாக பார்க்கப்படும் உலகில், அரச வன்முறையை குற்றமாக அடையாளப்படுத்த முடியாமல் மௌனித்து வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும் மனித அவலம் தொடர்ந்து நிகழ்கின்றது. ‘அரச வன்முறை’ என்பதை வெறும் வார்த்தையாக கடந்து விடமுடியாது; பலகோடி உயிர்களின் ரத்தபலியில் பதிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வெற்றிகளை உள்ளடக்க முயலும் கடவுச்சொல்லாகவே கருதுகின்றேன். இந்த அரச வன்முறையின் ஆரம்பத்தை ஆராய்வோமானால் ‘அதிகாரம்’ என்பதே மையப்புள்ளியாக தென்படுகின்றது. அதிகாரத்தை நிலை நாட்டவே வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. அதிகாரத்தை எதிர்க்கவே போராட்டம் பிறக்கிறது. அரச வன்முறை நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில குரல்களும் கேள்விகளும் தொடர்ந்து ஒலித்தவண்ணம் உள்ளன. ‘’பிற மனிதனிடம் வன்முறையை பிரயோகிப்பவன் நல்லவனா? மனிதாபிமானமே இல்லையா? இந்த உலகம் ஏன் இப்படி இயங்குகின்றது?.....’’   மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வகைப்பாடு எல்லாம் இல்லவே இல்லை. மனிதனின் அடிப்படை உளவியலை குறுக்குவெட்டுப்பார்வைக்கு உட்படுத்தும் போதுதான் மனிதாபிமானம் எனும் கற்பிதம் உடைபடுகின்றது. மனிதர