Posts

Showing posts from January, 2019

Fairway Galle Literary Festival - 2019

Image
காலி இலக்கிய திருவிழாவிற்கு  சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு பின்னரான காலி பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. காலி எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று. காரணம் அந்த கடலோசை. இலங்கையின் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கு சென்று அதன் ஓசையில் லயிப்பது பிடிக்கும். காலியின் கடலோசை எனக்குள் வெறுமையும் அமைதியும் கலந்த  உணர்வை தோற்றுவிக்கும். அதனால்தான் அதிகம் பிடிக்கும். கடலும் கோட்டைகளும் பழைமையான கட்டிடங்களும் இணைந்து  தனித்துவமான அழகை காலிநகரம்  வெளிப்படுத்தியது. ஏதோ வெளிநாட்டு நகரமோ என்று நினைக்குமளவு வெளிநாட்டவர்கள் நிறைந்திருந்தனர். அதனால் ஆட்டோ விலை உட்பட அனைத்து பொருட்களின் விலையும் மூன்றுமடங்காக  காணப்பட்டது. சிங்கள இலக்கிய விழாவில் கவிதை இலக்கியம் பற்றிய பகுதியில் சுவாரஸ்யமான கவிதைகளை கேட்கமுடிந்தது. அது முடிய கோட்டையை நோக்கி சென்றோம். ஓவியங்கள் வரைவதற்கான செயலமர்வும் கண்காட்சியும் எமது நேரத்தை பயனுள்ளதாக மாற்றின. வயது‌ வித்தியாசமின்றி ‌மிக ஆர்வமாக‌ அனைவரும்‌ வரைந்தனர். வரைதல் கொடுத்த மகிழ்ச்சியையும்  அவர்களது கைகளையும்‌ நான் ‌அமைதியாக ரசித்து கொண்டிருந்தேன் . (முகங்களை விட

Revelations

Image
எதையெல்லாம் நிறைத்தால் வீடாகும் என்பதைப்போல எதையெல்லாம் நிறைத்து சினிமாவாக்கலாம் என்று எண்ணி தோற்று சரிகின்ற நிலையில் இருக்கின்ற தமிழ் சினிமாவிற்கு, சினிமா என்றால் என்னவென்று   புரிதலை ஏற்படுத்தவும் உலகவெளியில் சினிமாவின் தன்மையை வெளிப்படுத்தவும் சுயாதீன சினிமாக்கள் எப்போதும் முன்னின்று உழைக்கின்றன. நம் சமுகத்தில், எது சினிமா என்ற ஆரம்பநிலை புரிதல் கூட ஏற்படவில்லை என்பது துயரம் என்றால், ஓரளவு சினிமா சார்ந்த புரிதல் கொண்டவர்கள் கலைபடைப்புக்கள், மண் சார்ந்த படங்கள் என்ற ஒற்றை தன்மையான நிலைக்குள் சிறைப்பட்டு சிந்திப்பதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தவல்லன. கமர்ஷியல் சினிமா கலை சினிமா என்ற பேதங்கள் இன்று உலக அரங்கில் பெரும்பாலும் முன்னிறுத்தப்படுவதில்லை. ஒரு திரைப்படத்தின் படைப்பாற்றல் ( creativity ) என்பதே அவர்களை கவனிக்க வைக்கின்றது. படைப்பாற்றல் என்பதை தீர்மானிக்கும் மையம் Artistic vision இல் தங்கியுள்ளது. சமுகத்தின் மீதான ஒருவரது அவதானிப்பும்   கவனிப்பும்   Artistic vision   என்பதை தீர்மானிக்கின்றது. உலக அரங்கினை நோக்கி நகர முனைபவர்களுக்கு   Revelations ஐ சம காலத்து