Posts

Showing posts from July, 2018

The Red Turtle

Image
சினிமாவில் அனிமேஷன் படங்களின் உருவாக்கம் ஆரம்பித்த காலப்பகுதியில், ‘’அனிமேஷன் படங்கள் Live action படங்களைப் போல உயிர்ப்புடன் கூடிய படைப்பாக திகழமுடியாது ; இங்கே மனித கூட்டிணைவுடன் உருவாகும் சினிமா , அங்கே தொழில்நுட்பத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தப்படுகின்றது . எக்காலத்திலும் Live action படங்களை அனிமேஷன் படங்களினால் நெருங்கவே முடியாது '' என்ற கூற்றுக்கள் முன்மொழியப்பட்டன . ஆரம்பகாலத்தில் Live action சினிமாக்களோடு ஒப்பிட்டு அனிமேஷன் திரைப்படத்தின் குறையாக அதன் கற்பனை படைப்புலகம்   முத்திரை குத்தப்பட்டது.   கற்பனை திறனென்பது கற்றுகொடுக்க முடியாத தனித்துவமான அம்சம் ; எல்லைகளும் கேள்விகளுமற்ற கற்பனை படைப்புலகத்தை தனது பலமாகவும் தன் அடிப்படை மூலதனமாகவும்   மாற்றிக்கொண்டு , அனிமேஷன்துறை செயற்பட்டதன் விளைவு, காலம் அக்கூற்றுகளை பொய்யாக்கியதோடு, அனிமேஷன் படத்துறை பல பரிணாமங்களை கடந்து சினிமாவின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கின்ற சக்தியாகிவிட்டதை நாம் அவதானிக்க முடியும். அனிமேஷனில் சாத்தியப்படுத்தப்படும் உயிர்ப்பினை Live action படங்களில் கொண்டுவர முடியாது என்று கருதுகின்றோம்.