Posts

Showing posts from June, 2019

மறைமுக பிரச்சாரமும் மாற்றுத்தேர்வும்

Image
ஆட்டோவில் சிக்னலில் பச்சை விழும் வரை காத்திருந்தேன். அந்த நேரம் ஒரு ராணுவவீரர் ஆட்டோக்காரரிடம் அவருடைய டீ-சர்ட்டின் கைப்பகுதியில் இருந்த ராணுவ உடைபோன்ற அலங்காரத்தை சுட்டிக்காட்டி ''அண்ணா தயவு செய்து இதுபோன்ற டிஸைன்களை அணியாதீர்கள், கழட்டச்சொல்வார்கள், அடுத்தமுறை அணியவேண்டாம் கவனமாக இருங்கள்'' என்று அன்போடு சொல்லிவிட்டு சென்றார். ஆட்டோக்காரர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. என்னிடம் திரும்பி ''பாருங்க என்ன ஒரு நன்னடத்தை, என்னை அண்ணா என்று பணிவா அழைத்து இந்த டீசர்ட்டை போடவேண்டாம் என சொல்கிறார். இதே போலீஸ்காரன் என்றால் அவ்வளவுதான். இந்நேரம் கழட்டுடா டீ-சர்ட்டை என்று என்னை அடித்து இழுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போயிருப்பான். ஆனால் இவர்கள் எவ்வளவு மரியாதையாக நடந்துகொள்கிறார். என்ன இருந்தாலும் ராணுவத்தினர் மாதிரி வராது'' என்று பெருமிதமாக நான் இறங்கும் வரை பாராட்டி பேசிக்கொண்டே இருந்தார். ஈஸ்ட்டர் குண்டு வெடிப்பின் பின்னர், மீண்டும் நாங்கள் நடமாட ஆரம்பித்த பின்னர் சந்தித்த முதல் ஆட்டோக்காரர் ''இனி பயமில்லை... ராணுவம் பாதுகாப்பாங்க... முன்ன எப