Posts

Showing posts from April, 2020

அழுக்கின் ஆவணம்

Image
சு ற்றுசூழல் என்றாலே நமக்கு முதலில் நினைவு வரும் விடயம் என்ன? இயற்கை சார்ந்த இடங்கள், அதன் முக்கியத்துவம், சூழலை மாசுப்படுத்தும் வாகனப்புகை , குப்பைகள் உட்பட பல   விடயங்கள்   நம் கண்முன்தோன்றும். இவற்றில், வீதிகளில் வீசப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு அந்த இடம் சுத்தமாக்கப்பட்டால் உடனே பிரச்சினை தீர்ந்தது என்று எண்ணுகின்றோம். ஆனால் நிஜம் வேறு!   குப்பைகளின் அழிவில்லா ஆயுள் நமக்கு முதல் எதிரி. அன்றாடம் நம் வாழ்வில் பல்வேறுபட்ட   பொருட்களை பயன்படுத்துகின்றோம். இவற்றில் நமது பயன்பாட்டை தவிர்த்து   எத்தனையோ   பொருட்கள் குப்பையாக மாற்றப்பட்டு வீசப்படுகின்றன. வீசப்படும் குப்பைகள் எங்கோ நிறைக்கப்பட்டு விதவிதமான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் சிந்தித்திருப்போமா? நமது இயந்திர வாழ்வை சற்று நிறுத்தி நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவாதனிக்க சொல்கின்றது இந்த Trashed ஆவணப்படம். Candida Brady இன் இயக்கத்தில் பிரபல நடிகர் Jeremy Irons நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான ஆவணத்திரைப்படம்தான் Trashed . குப்பைகளினால் உணவுச்சங்கிலியிலும் நீர், நிலம், காற்று   உட்பட எமது சுற்றுச்சூழலி

Caroline Leaf - நுட்பங்களின் அரசி

Image
பிறப்பின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தனியன்கள். ஆனால் நாம் தனியன்களாக பிறந்தாலும் அனைவருடனும் ஒன்றித்து வாழவேண்டிய நிலையே காணப்படுகின்றது.  நமக்கு ஏற்படும் அனுபவங்கள் இன்னொருவர் வாழ்வோடும்  கலந்த  சம்பவங்களாக காணப்படுகின்றன. வாழ்க்கை என்பதே ஒன்றித்து நிகழ்வதாகும். யாராலும் கட்டுப்படுத்தவோ ஏற்படுத்தவோ முடியாத இந்த நிகழ் அதிசயத்தை சினிமாவில்  காண்பியல்  அனுபவமாக தருவதற்கு  வாழ்வின் மீதான அதீத கவனிப்பு ஒரு படைப்பாளிக்கு இருத்தல் வேண்டும். இந்த வாழ்வியல் ஒன்றிப்பை வெளிப்படுத்தும் படைப்புகள், சினிமாவின் மிக அரிதான பொக்கிஷங்கள். Live Action  சினிமாவில் இந்த வாழ்வியல் ஒன்றிப்பை பார்த்ததை விட, அனிமேஷனில் இந்த உயிர்ப்புடன் கூடிய காண்பியல் தருணத்தை ஏற்படுத்தி, பரவசப்படுத்திய  படைப்பாளி C aroline L eaf  (கரோலின் லீப்). அறிவியலில் பிறந்த கலையே சினிமா. அறிவியல் தொழில்நுட்பங்கள் வழியே படைக்கப்படும் கலை வடிவமாக சினிமாவை காண்கையில், தொழில்நுட்ப சினிமாக்களில் மிக உச்சதன்மையான நிகழ் அதிசயமாக அனிமேஷன் படங்கள் காணப்படுகின்றன. உயிருள்ள ஜீவன்களின் உணர்ச்சிகளை கோட்டுப்படங்களில் பிரதிபலித்து அதன