Posts

Showing posts from May, 2018

Fast Film

Image
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொள்ள / கடத்தப்பட , கதாநாயகன் எதிரிகளை மீறி அவளை காப்பாற்றி இறுதியில் இருவரும் இணைதல் என்பது , காலம் காலமாக நாம் பார்த்துவரும் சினிமாக்களின் உள்ளடக்கம்.   இந்த ஒரே உள்ளடக்கத்தை ஒரே மாதிரியாக நாங்களும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். Fast Film படத்திலும் இதே உள்ளடக்கம் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கின்றது. லைவ் ஆக்ஷன் சினிமாக்களை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம் என்பதே அழகியல் முரண். மௌன யுகத்திலிருந்து ஹாலிவுட் கோல்டன் யுகம் வரையான ,   முக்கியமான 300 படங்களிலிருந்து 65,000 படங்களைகொண்டு படைக்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளராக, சிறந்த வாசகராக இருத்தல் வேண்டும் என்பார்கள். அதே போல திரைப்படங்களின் தீவிர ரசிகர்களுக்கு, அந்த ஆத்ம ரசனையே நல்ல படைப்புக்களை கொடுக்க உதவும் என்பதற்கு இந்த படமும் நல்ல உதாரணம். இதுவரை நாங்கள் ஹாலிவுட்டில் பார்த்து ரசித்த ஷாட்கள் , நடிகர் நடிகையர் மற்றும் ஒலி என்பவற்றை ஒரே படத்தில் பார்க்க கிட்டியமை கிளாசிக் ரசிகர்களுக்கு அருமையான திரைவிருந்து. அதிலும் படத்தில் இடம்பெறும் சேசிங் காட்சி அட்டகாசம்

கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா

Image
கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா கடந்த வருட இறுதியில் 7வது சார்க் திரைப்படவிழாவின் Materclass நடைபெற்றபோது, முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவற்றில் 2 முக்கியமான கேள்விகளையும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களினால் பெற்ற புரிதல்களையும் இங்கு பகிர்கின்றேன். உலகம் முழுக்க சில கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டும், பதில்கள் சொல்லப்பட்டுக் கொண்டுமிருப்பது வழக்கம். அத்தகைய  சினிமா தொடர்பான கேள்விகளில் Masterclass, Workshop, Lab என்று சகல இடங்களிலும் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று...  ‘கலைப்படங்களா... கமர்ஷியல் படங்களா... சிறப்பானவை? எதனை நோக்கி நம் பயணமும் பார்வையும் அமையவேண்டும்?’ என்ற கேள்வியாகும். இதற்கு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் பலவிதமான பதில்களை கொடுத்திருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்ற மிக சுருக்கமான தெளிவான பதிலாக  Griffith Film Schoolபேராசிரியரான Anne Démy-Geroe  கூறிய பதிலை எழுதுகின்றேன். Q1 பார்வையாளர் : "Crouching tiger, Hidden dragon ஒரு கமர்சியல் படம்... இந்த கலைத்தன்மையற்ற போலியான படைப்பை எங்களால் முழுவதுமாக பார்க்கவே முடியவில்லை. அந்த ப