Posts

Showing posts from September, 2015

FAILAN

Image
காதல்- ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொள்வது அவருக்காக தன்னை மாற்றிகொள்வது அவரோடு வாழ்வை பகிர்ந்து கொள்வது போன்றவை தானா ?  நேசிப்பு என்பதில் தனித்திருத்தல், காத்திருத்தல் என்பவை உள்ளடங்காதா ? தனித்த ஒருவரின் நேசிப்புக்கு அர்த்தமோ அடையாளமோ ஏன் இல்லை ....? எதிர்பார்ப்புகள்  இல்லாத காதல் புயல், தென்றல் தவிர்த்து உணரப்படாத  அந்த காற்றை போலவே எப்போதும் ..... கதாநாயகியின் பெயர்  Failen. சீனாவிலிருந்து கொரியாவுக்கு வருகிறாள். பெற்றோர்கள் இறந்தபின்பு யாருமற்ற நிலையில் தூரத்து உறவினர்களை தேடி கொரியாவுக்கு வந்தால், அவர்கள் எப்போதோ கனடாவுக்கு இடம்பெயர்ந்துவிட்ட விடயம் தெரிகிறது. யாருமற்ற நிலையில் அவளை சிகப்பு விளக்கு பகுதிக்கு விற்க ஒருவன் முயல்கிறான். அப்போதுதான் தெரிகிறது Failenக்கு தீராத வியாதி இருப்பதாகவும் நோயோடு போராடி அவள் வாழ்ந்துகொண்டிருகிறாள் என்பதையும் அறியும் அவன் வேறு வழியின்றி பணத்துக்காக அவளுக்கு உதவ முன்வருகிறான். திருட்டுத்தனமாக விவாகம் செய்தால் கொரியாவில் வாழிட உரிமை கிடைக்கும் என்று சொல்லி விவாக பத்திரங்களை தயார் செய்கிறான். Failenஐ திருமணம் செய்ய தனது நண்