Posts

Fast Film

Image
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொள்ள / கடத்தப்பட , கதாநாயகன் எதிரிகளை மீறி அவளை காப்பாற்றி இறுதியில் இருவரும் இணைதல் என்பது , காலம் காலமாக நாம் பார்த்துவரும் சினிமாக்களின் உள்ளடக்கம்.   இந்த ஒரே உள்ளடக்கத்தை ஒரே மாதிரியாக நாங்களும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். Fast Film படத்திலும் இதே உள்ளடக்கம் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கின்றது. லைவ் ஆக்ஷன் சினிமாக்களை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம் என்பதே அழகியல் முரண். மௌன யுகத்திலிருந்து ஹாலிவுட் கோல்டன் யுகம் வரையான ,   முக்கியமான 300 படங்களிலிருந்து 65,000 படங்களைகொண்டு படைக்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளராக, சிறந்த வாசகராக இருத்தல் வேண்டும் என்பார்கள். அதே போல திரைப்படங்களின் தீவிர ரசிகர்களுக்கு, அந்த ஆத்ம ரசனையே நல்ல படைப்புக்களை கொடுக்க உதவும் என்பதற்கு இந்த படமும் நல்ல உதாரணம். இதுவரை நாங்கள் ஹாலிவுட்டில் பார்த்து ரசித்த ஷாட்கள் , நடிகர் நடிகையர் மற்றும் ஒலி என்பவற்றை ஒரே படத்தில் பார்க்க கிட்டியமை கிளாசிக் ரசிகர்களுக்கு அருமையான திரைவிருந்து. அதிலும் படத்தில் இடம்பெறும் சேசிங் காட்சி ...

கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா

Image
கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா கடந்த வருட இறுதியில் 7வது சார்க் திரைப்படவிழாவின் Materclass நடைபெற்றபோது, முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவற்றில் 2 முக்கியமான கேள்விகளையும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களினால் பெற்ற புரிதல்களையும் இங்கு பகிர்கின்றேன். உலகம் முழுக்க சில கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டும், பதில்கள் சொல்லப்பட்டுக் கொண்டுமிருப்பது வழக்கம். அத்தகைய  சினிமா தொடர்பான கேள்விகளில் Masterclass, Workshop, Lab என்று சகல இடங்களிலும் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று...  ‘கலைப்படங்களா... கமர்ஷியல் படங்களா... சிறப்பானவை? எதனை நோக்கி நம் பயணமும் பார்வையும் அமையவேண்டும்?’ என்ற கேள்வியாகும். இதற்கு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் பலவிதமான பதில்களை கொடுத்திருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்ற மிக சுருக்கமான தெளிவான பதிலாக  Griffith Film Schoolபேராசிரியரான Anne Démy-Geroe  கூறிய பதிலை எழுதுகின்றேன். Q1 பார்வையாளர் : "Crouching tiger, Hidden dragon ஒரு கமர்சியல் படம்... இந்த கலைத்தன்மையற்ற போலியான படைப்பை எங்களால் முழுவதுமாக பார்க்கவே முடிய...

இதே நாளில் ...

Image
உலகின் கிழக்கு  கடலின் ஒரு தீவில் வசித்த  எனக்கும் மேற்கு  கடலின் மறு தீவில் வசித்த உனக்கும் அறிமுகம் இதே நாளில் ..... துயரும் வலியும் பெருகிய தருணத்தில் நான் தனிமையும் அமைதியும் நிரம்பிய நிலையில் நீ பேரன்பின் பிணைப்பில் சந்தித்துள்ளோம். இந்த ஓராண்டில் உனக்கும் எனக்கும் வாழ்க்கை நிறையவே மாறியிருகின்றது. இருவரின் தேடல்களும் கனவுகளும் வேறுவேறு நமது  உலகங்கள் எப்போதும்  மாறுபட்டவை அதில்  முரண்பாடுகள் எண்ணற்றவை உனக்கும் எனக்கும் பொதுவில், மனிதர்கள் நிறையவே வந்து போயிருகின்றார்கள் நமக்கான கண்ணீரும் புன்னகையும் சில பக்கங்களை அதிகரித்திருகின்றது நமக்குள் தீர்க்கப்படாத கேள்விகள் கோப்பையில் எஞ்சியிருக்கின்றன சண்டையிட்டு விவாதிக்க   இன்னும் நேரம் மிச்சமிருகின்றது பயணிக்க வேண்டிய சாலைகள் காத்திருக்கின்றன நமக்குள் பகிர்தலின் ஆழமும் அன்பும் ஒரு எரிமலையின் தீகொண்ட நீர் போல சுரந்து தகிக்கின்றது எல்லா தேசத்தின் விடியல்களுக்காகவும் நட்சத்திரங்களை உறங்கவைக்க நமது மௌனத்தின் இசை மெலிதாக ஒலித்து  பரவட்டும்

Tree of life

Image
சினிமா எனக்கு ஆன்மிகம் ! என் வாழ்க்கையில் உடைந்து நொறுங்கும் போதெல்லாம் டெரன்ஸ் மாலிக்கின் படைப்புலகத்திற்குள் நுழைந்து என்னை மீட்டுக்கொள்வேன். என்னைச் சுற்றி என்ன நடந்தாலும் யார் என்ன செய்தாலும் அமைதியாக கடந்து செல்ல சினிமாவின் ஆன்மிக அனுபவமே வழிநடத்துகின்றது. திரைக்கதை எழுதுகையில் நாம் பார்க்ககூடிய செயல்களை மட்டுமே எழுத முடியும். உணர்வு தளங்களில் எழுத முடியாது. செயல்பாடுகளின் வழியே எழுதப்பட்ட சினிமாவை, உணர்வுகளின் வழியே பார்வையாளனை அடையச் செய்ய, பல சூட்சுமங்களை கையாண்டு, பார்வையாளர்களையும் சேர்த்தே இயக்கவேண்டிய நிலை இங்குண்டு. டெரன்ஸ் மாலிக் எந்த சூட்சுமங்களையும் கையாள்வதில்லை. தன் அறிவிலிருந்து திரைப்படங்களை உருவாக்காமல் மனதிலிருந்து உருவாக்குகின்றார். திரையுலகில் இருக்கும்போதே யாரிடமும் எதுவும் கூறாமல் 20 வருடங்கள் தொலைந்து போனார். அந்த தவப்பயணமே மாபெரும் படைப்புலகத்தை அவருக்குள் உருவாக்கி கொடுத்திருக்கின்றது. நான் எப்போதும் கூறுவதுதான் ... வாய்ப்புக்கள் எவரையும் இயக்கினராக்கிவிடும் ஆனால் படைப்பாளியாக தன்னையே அர்பணிக்க வேண்டும். வாழ்க்கையும் வாழ்தலும் மிக மிக...

Dyketactics

Image
பெண்ணின் நிர்வாணம் என்ன செய்யும் ? பதட்டத்தை, பயத்தை, அருவருப்பை,ஆசையை, கிளர்ச்சியை, காம உணர்வினை ....இன்னும் ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை தரக்கூடும். நிஜத்தில் உடல் என்பது உணர்வுகள் கொண்ட சதைப்பிண்டம். உயிருள்ளவரை நம்மை சுமந்து திரிய அதை பராமரிக்க வேண்டிய கடமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நம் உடல் மீதான மறைவுணர்ச்சி செயற்பாடுகளை நிகழ்த்தவே நம் சமுகமும் குடும்ப அமைப்புகளும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன எனலாம். நம் உடலை நாமே நிர்வாணமாக தனிமையில் மட்டுமே காணும் சூழலும் நிர்வாணம் மீதான ஒழுக்க கற்பிதங்களும் அச்சங்களும் வன்முறைகளும் திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அடக்குமுறை கட்டமைப்புக்களே இங்கு அதிகம் உள்ளன. ஒருகட்டத்தில் அந்த இறுக்கமான கட்டமைப்பின் மீதான வெறுப்பின் எதிர்வினையை நிகழ்த்த நிர்வாண உடலை ஆயுதமாக்கும் மனநிலையும் அதனால்தான் எழுகின்றது. இப்படி நிர்வாண உடல் பற்றி ஆயிரம் கதைகள் பேசினாலும் உடலை முன்வைத்து உருவாக்கப்படும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவே இல்லை. இந்த முடிவற்ற முரண்பாடுகளே Barbara Hammer இன் Dyketactics படைப்புலகம்! Barbara Hammer,...

Oscarஇல் சுயாதீன படைப்புக்களின் எதிர்காலம் ?

Image
உலகம் முழுவதும் அனிமேஷன் கலைஞர்களும் படைப்புக்களும் பெருகிவிட்ட காலமிது. புதிய படைப்புக்கள், வித்தியாசமான படைப்பாற்றல், மாறுபட்ட சிந்தனைத் தளம் என்று பலவிதமான அனிமேஷன் படைப்புக்களை திரைப்படவிழாக்களின் காண்கின்றோம். எண்ணற்ற திரைப்பட விழாக்களில் சுயாதீனப்படங்கள் வரிசையில் அனிமேஷன் படங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் Oscar திரைப்பட விழாவில் மட்டும் ஸ்டுடியோக்களின் ஆதிக்கமே நிலவி வருகின்றது. 2001 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக  Oscar திரைப்பட விழாவில் அனிமேஷன் படங்களுக்கென்று விருதுகள் அறிவிக்கப்பட்டன. Pixar, Disney, DreamWorks, 20th Century Fox, Sony, Tim Burton, Blue Sky Studios,  Studio Ghibli, Laika, Nickelodeon, Cartoon Saloon போன்ற ஸ்டுடியோக்களின் படங்களே விருது வென்ற படங்களாகவும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களாகவும் காணப்படுகின்றன. இதில் முதலிடத்தில் 9 விருதுகளை வென்று Pixar முதலிடத்திலும் 3 விருதுகளை வென்று Disney இரண்டாம் இடத்திலும் மூன்றாவதாக இரண்டு விருதுகளுடன் DreamWorks நிறுவனமும் காணப்படுகின்றது. அமெரிக்கா எனும் முதலாளித்துவ நாட்டில் அதன் வழித...

Oscar Women

Image
இந்த வருடம் Oscar விருதுப்பரிந்துரைப்பில் இடம்பெற்றுள்ள பெண் கலைஞர்களின் தெரிவு தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை இல்லாதளவு இந்த ஆண்டு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம் . நடிகை, துணைநடிகை என்ற பிரிவுகளை தாண்டி திரைக்கு பின்னரான பெண் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. ஒரே ஆண்டில் இத்தனை பரிந்துரைப்புக்கள் ஏன்? #MeToo சர்ச்சை உருவானதால் கட்டாயத்தின் பெயரில் பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கட்டுள்ளதா என்ற ரீதியில் கருத்துகள் எழுந்துள்ளன. இதனை நாம் மறுக்க முடியாது என்பதைப்போலவே முற்றிலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்றே நான் கருதுகின்றேன். நிறவெறி, ஆதிக்க மனநிலை நிறைந்த திரைப்படத் துறையாக திகழும் ஹாலிவுட்டில் பாலின வேறுபாட்டுக்கும் பஞ்சமில்லை எனலாம். திரைப்படங்களை பொறுத்தவரை Male Gazeக்கு உட்பட்ட படங்கள் ஹாலிவுட்டில் அதிகம். Male Gazeக்கு எதிராக பெண்கள் போராட வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக எழுத்திலும் கருத்திலும் எதிர்ப்பு குரலை பதிவு செய்த பின்னரே மாற்றம் நிகழ்ந்தது. இன்று கூட அதன் தாக்க...