Fast Film


கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொள்ள / கடத்தப்பட, கதாநாயகன் எதிரிகளை மீறி அவளை காப்பாற்றி இறுதியில் இருவரும் இணைதல் என்பது, காலம் காலமாக நாம் பார்த்துவரும் சினிமாக்களின் உள்ளடக்கம். 
இந்த ஒரே உள்ளடக்கத்தை ஒரே மாதிரியாக நாங்களும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். Fast Film படத்திலும் இதே உள்ளடக்கம் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கின்றது.

லைவ் ஆக்ஷன் சினிமாக்களை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம் என்பதே அழகியல் முரண். மௌன யுகத்திலிருந்து ஹாலிவுட் கோல்டன் யுகம் வரையான,  முக்கியமான 300 படங்களிலிருந்து 65,000 படங்களைகொண்டு படைக்கப்பட்டுள்ளது.

சிறந்த எழுத்தாளராக, சிறந்த வாசகராக இருத்தல் வேண்டும் என்பார்கள். அதே போல திரைப்படங்களின் தீவிர ரசிகர்களுக்கு, அந்த ஆத்ம ரசனையே நல்ல படைப்புக்களை கொடுக்க உதவும் என்பதற்கு இந்த படமும் நல்ல உதாரணம். இதுவரை நாங்கள் ஹாலிவுட்டில் பார்த்து ரசித்த ஷாட்கள்,நடிகர் நடிகையர் மற்றும் ஒலி என்பவற்றை ஒரே படத்தில் பார்க்க கிட்டியமை கிளாசிக் ரசிகர்களுக்கு அருமையான திரைவிருந்து. அதிலும் படத்தில் இடம்பெறும் சேசிங் காட்சி அட்டகாசம்.

Virgil Widrich இயக்கிய இந்த Fast film  பார்க்கையில் இன்னுமொரு வீடியோவும்  நினைவுக்கு  வந்தது. Adrien Dezalay, Emmanuel Delabaere, Simon Philippe மூவரது கூட்டணியில் எடுக்கப்பட்ட Hitchcock -Kubrick mashup ஆக இருவரது திரைப்படங்களின் கதாபத்திரங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட The Red Drum Getaway.

The Red Drum Getaway-  https://vimeo.com/230188914




Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery