Paths of the Soul - ஆன்மாவின் யாத்திரை

ஆன்மிகம் என்பது உள்ளார்ந்த ரீதியாக உணரப்படும் அமைதிநிலை. சிலை வழிபாடுகள், சடங்குகள், மத போதைனைகள் என்பன ஆன்மிகம் அல்ல. மதங்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி இயங்குகையில் ஆன்மிக அனுபவம் நிகழ்வதில்லை. நம் எண்ணங்களினால் செயல்களில் வெளிப்படும் அமைதியே நமக்குள் நிலவும் ஆன்மிகத்தை புலப்படுத்தும். அத்தகைய ஆன்மிக யாத்திரையில் உணர்த்தப்படும் நம்பிக்கை ஒளியை திரையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் தான் Paths of the Soul . திபெத் நாட்டின் சிறியதொரு கிராமத்தை சேர்ந்த சிலர், தலைநகரிலுள்ள Lhasa வுக்கு, 1,200 மைல்கள் தரையில் வீழ்ந்து வணங்கியபடியே நடைபயணமாக மேற்கொள்ளும் ஆன்மிக யாத்திரையூடாக, அவர்களது அன்பு, பொறுமை, அமைதி, வாழ்வியல் அணுகுமுறை என்பவற்றில் வெளிப்படுத்தப்படும் ஆன்மிக உணர்வுவை இந்த ஆவணப்படம் பதிவுசெய்கின்றது. இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட தேவையும் காரணமும் இருக்கின்றது. குடும்பத்தின் தீவினைகள் நீங்க , விலங்குகளை கொன்ற பாவம் தீர்க்க, வாழ்வில் இறுதி அமைதியை நோக்கி என்று பல எண்ணப்பாடுகளுடன் ஒன்றாக பயணிக்கும் இவர்களது பலவருட பயணத்தின் வழியாக வாழ்...