The Clue:4th Period Mystery





இலக்கிய வகுப்பு ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்கள் குறிபெடுத்துக் கொள்கின்றார்கள் .அந்த மாணவர்கள் கூட்டத்தில் ஒருவன் ஜங் ஹூன் (Jung-hoon) .வகுப்பில் சிறந்த மாணவனாக நற்பெயர் கொண்டவன் .
எழுதும் போது எதேச்சையாக முன்னிருக்கையைப் பார்கிறான் .
டா ஜங் (Da-jung)  எப்போதும் நீளக் கூந்தலை விரித்துவிட்டிருபாள் அதனால் curtain என்றே அனைவரும் அழைப்பார்கள் .
பாடப்புத்தகத்திற்குள் குற்றங்கள் தொடர்பான புத்தகத்தை மறைத்து வைத்து வாசிக்கிறாள் .அவளது மேஜையில் இருப்பது எல்லாமே கிரைம் தொடர்பான புத்தகங்கள் .
அவளது செய்கையை பார்த்துவிட்டு மீண்டும் பாடத்தை கவனிக்க தொடங்குகிறான் ஜங்.
ஒருவனை விஷம் வைத்து எப்படி கொல்லலாம் என்பதை பற்றி curtain மனதிற்குள் வாசிக்கையில் திடிரென்று பின் இருக்கையில் சத்தம் கேட்கிறது .
பின்வரிசை மாணவன் வாயில் நுரை தள்ளி துடிதுடிக்க அனைவரும் பதறுகிறார்கள் .ஜங் ஆம்புலன்சை அழைக்க முயல, டா அந்த மாணவனை தொடர்ந்து தனது கேமராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறாள் .


சில நாட்களுக்கு பின்பு-
மாணவன் உயிர்  பிழைக்கிறான் .அந்த மாணவன் உட்பட எல்லோரும் food poison  என்று நம்ப  curtain மட்டும் இது ஒரு கொலை முயற்சி என தீர்க்கமாக நம்புகிறாள். இந்த விஷயம் பள்ளியின் பெயரை பாதிக்கிறது . போலீஸ் கமிஷனர் பள்ளியை பார்வையிட வருவதாகவும் அன்று ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் பள்ளியை மூட வேண்டி ஏற்படும் என்ற அறிவிப்பு வருகிறது .

அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவன்  டா  க்யு (Tae-gyu) .தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டவன்.
சக மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுக்க அவள் ஜங்கிடம் சொல்ல இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது .
வகுப்பறைக்குள் சண்டை போட்டதால் இருவருக்கும் தண்டனை தருகிறார் ஆசிரியர் maddog.(மன நோயாளியைப் போல காணப்படுவதால் எல்லோரும் அப்படி அழைக்கின்றனர்).


வகுப்பறைகளை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்பட்டதால்,
 ஜங் அதை செய்துவிட்டு கிளம்ப தாமதமாகிறது.நண்பன் நீச்சல் பயிற்சி கூடத்திற்கு வெளியே இருப்பதை பார்த்துக்கேட்க ''உன் வகுப்பில் இருக்கும் curtain இங்குதான் நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறாள் .அவள் மிகவும் அழகாக இருக்கிறாள் என்கிறான் '' .
ஜங்கும் நண்பனுடன் இணைந்து அவளை பார்க்க அதை அவள் கண்டுவிடுகிறாள் . curtain மீது சிறு ஆர்வம் கொண்டிருந்த ஜங் அன்று முதல் அவள் மேல் ஈர்ப்புகுட்படுகிறான்

அடுத்த நாள்
 curtain னிடமிருந்து sms வருகிறது
ஏன் அப்படி செய்தாய் என்று
அதற்கு ஜங் ''தவறாக எண்ண வேண்டாம்
நான் வேண்டுமென்று பார்க்கவில்லை அது எதேச்சையாக நடந்தது''
என்று reply செய்கிறான்

ஜங் sms அனுப்புவதை ஆசிரியர் mad dog பார்க்கிறார்
''யாருக்கு இதை அனுப்புகிறாய் அப்படி என்ன பார்த்தாய் ?''என்று கேட்க
இந்த பிரச்னையின் போது மாணவர்கள் அனைவரும் ஜங்கை கவனிக்க curtain மட்டும் அவன் மீது பார்வையை திருப்பதாது டா  க்யுவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

PT பாடத்திற்கு மாணவர்கள் அனைவரும் கிளம்ப ஜங் கிடம் வம்பு வளர்க்கிறான் டா  க்யு.
'' நீ curtain ற்கு தானே sms அனுப்பினாய் அவளது புகைப்படங்கள் என்னிடம் இருக்கின்றன.''என்று ஆபாசமாக  பேசுகிறான்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத ஜங் அவன் கைகளிலிருந்த கத்தியை எடுத்து ஓங்குகிறான் .அதை சக மாணவி புகைப்படம் எடுத்துவிட கத்தியை கீழே போட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறான்

மைதானத்தில் இருக்கிற curtainக்கு மனம் ஒரு நிலையில் இல்லை
ஏதோ தவறு நடக்க விருப்பதை உணர்கிறாள்.
போலீஸ் கமிஷனர் பாடசாலைக்கு வர அதிபரும் ஆசிரியர்களும்
ஒவ்வொரு வகுப்பாக அழைத்து செல்ல ஆரம்பிகின்றனர் .
maddogற்கு இன்று மனகனின் நினைவு நாள் சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள்
என்று தகவல் வர சோகமான நிலையில் கழிப்பறைக்கு செல்கிறார்.
அங்கு ஜங் நின்று கொண்டிருக்க நீ வகுப்பறைக்கு செல் என்று அறிவுறுத்த வகுப்பறைக்கு செல்கிறான்


வகுப்பறைக்குள் நுழைந்த ஜங்கிற்கு பேரதிர்ச்சி ஏற்படுகிறது.
 டா  க்யு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்
சிறிது நேரத்திற்கு முன் தான் தொட்ட கத்தியால்
அவன் குத்தப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைய அதே நேரம் curtain வகுப்பறைக்குள் நுழைகிறாள்

நான் இவனைக் கொல்லவில்லை என்று பதற
அந்த இடத்தை உற்றுப் பார்ப்பவள் இதை நீ செய்யவில்லை என்பது தெரியும். கொலையாளி சற்று நேரத்துக்கு முன்பு இங்கு வந்திருக்கிறான்
அவனைக் கொன்று விட்டு laptop செல்போன் இரண்டையும் எடுத்து சென்று இருக்கிறான் ;அவன் நிச்சயம் இங்குதான் இருப்பான்
கமிஷனர் வந்திருப்பதால் யாரும் வெளியே போக முடியாது
ஆயிரக்கணக்கான மாணவர்கள், பல ஆசிரியர்கள்
இதில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டும் double பீரியட் PT பாடத்தில் இன்னும் ஒரு பாடம் நமக்கு மிச்சமிருக்கு
 4௦ நிமிடத்துக்குள் அவன் யாரென்று கண்டுபிடித்தால் நீ தப்பிக்கலாம் என்று சொல்ல இருவரும் உண்மையான கொலைகாரனை அடுத்த 40 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க ஆரம்பிகின்றார்கள்

40 நிமிடத்திற்குள் அந்த பள்ளியில் இருக்கும் கொலைகாரனை தேட முடிந்ததா ? யார் அவன் ? எதற்காக இந்த கொலை ?
போன்ற கேள்விகளுக்கு பதில் தான் கிளைமாக்ஸ்




படம் ஓரளவு சுவாரஸ்யமாகவே நகர்ந்தது .
இருந்தாலும் கொலைகாரன் ,கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கும் விதம் என்று அனைத்தும் மிக சராசரி தன்மை கொண்டவை
இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்கலமோ என்று தோன்றியது
கொஞ்சம் லோ பட்ஜெட் படம் என்பதால் அதற்கேற்ப எடுத்திருகிறார்கள்
மிக பெரிய பள்ளி ஆனால் கதையில் குறிப்பிட்ட இடங்களும் சில நபர்களுமே வருகிறார்கள்

நாயகன்  ஜங், WAY HOME  படத்தில் குட்டிப் பையனாக நடித்த Yoo Seung-ho.
கதாநாயகியை விட வயதில் சிறியவர் என்பது படம் பார்கையில் நன்கு தெரிகிறது .
இந்த படத்தை தமிழ் படுத்தலாம். இதே கதையில் சுவாரஸ்யமான காட்சிகள் திருப்பங்களை ஏற்படுத்தினால் தமிழில் வெற்றிப்படம் சாத்தியமே


பின் குறிப்பு :-
5 வருடங்களுக்கு முன்னர் பார்த்த படம் ,
பென்சில் படத்தின் டிரைலரை பார்க்கையில் அந்த காட்சிகள் இந்த படத்தை ஞாபகப்படுத்தின   :)

Comments

  1. இந்த படத்தை பார்க்க முயற்சிக்கறேன்... திரைப்பட அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. என் படத்தை செய்ய முதல் இது கண்ணில் தட்டுப்பட்டிருந்தால் கட்டாயம் இதையும் பார்த்திருப்பேன், இனி பார்க்கிறேன்
    மிக்க நன்றிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog