Balut Country



கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் Balut Country படம் முடிந்த பின்னர் நடந்த கலந்துரையாடல் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது .

கலந்துரையாடலின் போது இயக்குனரிடம்
''உங்கள் படம் மெதுவாக உள்ளது; திரைப்படங்களை மெதுவாக எடுக்ககூடாது சஸ்பென்ஸ் இருக்க வேண்டும் ''என்று ஆரம்பித்து ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற ரீதியில்  வகுப்பெடுக்க ஆரம்பித்தார் ஒருவர்.

இயக்குனர் Paul Sta. Ana சிரித்துக்கொண்டே'' இது மெலோ டிராமா வகையை சேர்ந்த படம் .அத்தோடு காட்சிகளை மிக மெதுவாக அமைத்ததன் காரணம் அந்த கதாபாத்திரத்தின் இருப்பையும் இயல்பையும் உணர்த்ததான் ....''
என்று சொல்லி விளக்க முற்பட்டும் அது முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ''உங்களுக்கு பொழுது போக்கை ஏற்படுத்துவதற்கு, நான் பாலிவுட் படம் எடுக்கவில்லை; அதேவேளை நான் மோசமான படமும் எடுக்கவில்லை'' என்று முடித்துகொண்டார் .

அரங்கை விட்டு வெளியே வந்த பின்னர் இயக்குனரை சந்தித்தேன்.
''மெதுவாக நகர்வதாக பலர் சொன்னார்கள். எனக்கு அப்படி தெரியவில்லை காரணம் நான் இதைவிட மெதுவாக நகரும் படங்களை பார்த்துள்ளேன் ....'' என்றதும் மெதுவாக நகரும் காட்சிகளின் பின்னணி பற்றி பேசினார் .

படம் பற்றி சில விஷயங்களை கேட்டேன்.



படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் தண்ணீர் பிரச்னை படத்தின் கதைக்கு எந்த விதத்தில் அவசியப்படுகிறது ?பிற்பகுதியில் அதைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசின் மீதான எதிர்ப்பை/சமுக அக்கறையை பதிவு செய்ய இந்த காட்சிகளை வைத்தீர்களா ?


நாயகன் ஜூன் பண்ணையை ஏற்றுகொள்ள முடிவு செய்கிறான்
ஆனால் குழந்தையோடு இருக்கும் காதலி பற்றி அவனால் தெளிவான முடிவு எடுக்கவில்லை.
தனது பாரம்பரியத்தை கைவிட மனமில்லாதவன் எப்படி தனது சொந்த வாழ்வில் இவ்வாறான முடிவை எடுத்தான் ?

இப்படி படம் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையான பதில்களை தந்தார் . ஜூன் தனது எதிர்காலத்தை பற்றிய முடிவை மாற்றிக்கொள்ளும்
தருணத்தில் அதற்கான ஆழமான உணர்ச்சிபூர்வமான காட்சிகள் குறைவாக உள்ளன....
ஜூனின் மனமாற்றத்துக்கு காரணமாக , அழுத்தமான உணர்வுபூர்மான காட்சிகள் சில இருந்திருந்தால் படம் இங்கிருப்பவர்களுக்கு பிடித்திருக்கும் என்று கூறினேன்.
படத்தில் உள்ள குறை பற்றி சொன்னபோது அதனை சிரிப்போடு ஏற்றுகொண்டார்.

படம் பற்றிய நேர்மையான கருத்துக்களையும் கேள்விகளையும் அவர் அதிகம் எதிர்பார்க்கிறார் . என் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்ததோடு என் விமர்சனத்தையும் ஏற்றுகொண்டார்.
படத்தை விட அவரின் பக்குவமான மனநிலை,அந்த உரையாடல் எனக்கு பிடித்திருந்தது :)


Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery