Departures



நம் வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாது. நமது வீடுகளிலும் மரணம் நிகழ்ந்திருக்கும். இல்லாவிட்டால்  நிச்சயம் அடுத்தவரின்  மரண வீடுகளுக்கு சென்றிருப்போம் . அப்போதெல்லாம் மரணித்தவர் , அவரின் உறவுகள் துக்க விசாரிப்புக்கள் கண்ணீர் இவை தான் நாம் அறிந்தவை . மரணத்தின் மூலமாக ஜீவியம் நடத்துபவர்களை பற்றி சிந்தித்ததுண்டா ? பிணவறை ஊழியர் , சவப்பெட்டி செய்பவர் ,மின்சார சுடுகாட்டில் பணிபுரிபவர் ,வெட்டியான் , சாவு மேளம் அடிப்பவர் என்று தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் பலரின் மரணத்தை தரிசிகின்றார்கள் .அவர்களது வாழ்வில் மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்  என்ன ? சமுகத்தில் அவர்களை எப்படி பார்கிறார்கள் ?
புறக்கணிப்பும் வெறுமையும் அருவருப்பும் கடந்து அவர்களால்
இயல்பாக வாழ முடியுமா ?
இப்படி என்னை சிந்திக்க வைத்த ,அழ வைத்த ஜப்பானிய  திரைப்படம் தான் Departures


இசைக்கச்சேரிகள், அன்பு மனைவி என்று சந்தோஷமாக வாழ்கிறான் டைகோ(Daigo Kobayashi).
ஒருநாள்-
அவனுடைய ஆர்கெஸ்ட்ரா கலைக்கப்படுகிறது.
வேலைபோய் விட்ட கவலைக்கு உள்ளாகிறான்.
மிகுந்த தயக்கத்தோடு மனைவியிடம் தனக்கு வேலை போய்விட்டதாக சொல்ல அவனின் மனநிலையை புரிந்துகொண்டவள்
'சரி பரவாயில்லை இன்னொரு வேலை தேடிக்கொள்ளலாம்;
அதுவரை செலவுகளை குறைத்து வீட்டு நிலையை நான் சமாளித்துக் கொள்கிறேன்.இனி இந்த பெரிய வீடு வேண்டாம் உங்கள் பெயரில் உள்ள பழைய வீட்டுக்கு இடம்பெயர்வோம் வாடகை பிரச்னை தீர்ந்துவிடும் நகர்  பகுதியிலிருந்து கொஞ்சம் தூரமாக போனால் மற்ற செலவுகளும் குறைந்து விடும் என்று நம்பிக்கையூட்டுகிறாள் மனைவி மிகா (Mika).
Daigoக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் ஏற்பட வேலை தேட ஆரம்பிக்கிறான்.நாட்கள் நீள்கின்றன ஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை.
சலிப்பும் வெறுமையும் அவனை ஆட்கொள்கையில் மனைவியின் அன்பு அவனுள் ஆதரவை ஏற்படுத்துகிறது.

ஒருநாள் பத்திரிகை விளம்பரத்தை பார்க்கிறான் ஏதோ டூரிஸ் கம்பனி வேலை என நேர்முகத்தீர்வுக்கு போக, அங்கிருக்கும் பெண் அவனை ஆச்சர்யமாக பார்க்கிறாள்.
உரிமையாளருடன் பேசுகையில் இது டூரிஸ் கம்பனி அல்ல இறந்தவர்களின் உடலிற்கு ஒப்பனை செய்யும் வேலை என தெரிகிறது.
பயந்துபோய் எழுந்துபோக முயல ''இந்தா உனக்கு முற்பணம் நன்றாக யோசி பிடித்திருந்தால் வேலைக்கு வா என்று சொல்கிறார்'' உரிமையாளரான சசாகி (Sasaki).
முற்பணமே இவ்வளவு கிடைக்குமா என்று ஆச்சர்யப்படுபவன்
பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த வேலையை ஏற்றுக்கொள்கிறான்
மனைவியிடம் டூரிஸ் கம்பனி வேலை என்று பொய் சொல்ல... வேலை கிடைத்தால் சந்தோஷப்படுகிறாள் மிகா .

முதல் நாள்-
பிணங்களுக்கான இறுதிகடமையை எப்படி செய்வது என்று வீடியோ எடுக்கிறார்கள் அதில் பிணமாக நடிக்க வேண்டும் பயத்தோடும் தயக்கத்தோடும் நடித்து முடிக்கிறான்.
அடுத்தநாள்-
பலநாள் அழுகிய உடலுக்கு இறுதி கடமைகள் செய்யவேண்டும்.
உள்ளே செல்வதற்கு முன்பே நாற்றம் குமட்டுகிறது.
பொறுத்துக்கொண்டு செல்கிறான்.
அழுகிய உடலை பார்த்ததும் அருவருப்பால் வாந்தி எடுக்கிறான்
ஆனால் அவனுடைய குரு மிகப்பொறுமையாக அனைத்து கடமைகளையும் செய்கிறார்.
அதிர்ச்சியும் அருவருப்புமாக சோர்ந்து போய் இருந்தவனுக்கு
பணத்தைக் கொடுத்து ஓய்வெடுத்துக் கொள் என்கிறார்.
உடலெல்லாம் நாற்றம் வீட்டுக்கு  போக முடியாத நிலை;
பொதுக் குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வருகையில் தெரிகிறது,
அதை நடத்தும் பெண்மணி தனது தாயாரின் நெருங்கிய தோழி என்பது.
பார்த்த மகிழ்ச்சியில் 'அடிக்கடி வா உன் மனைவியையும் அழைத்து வா; என்று கூறி  மகனுக்கும் அறிமுகப்படுத்துகிறார்.

இறந்து போன கோழியைப் பார்த்தாலே அருவருத்துபோகும் டைகோ எப்படி இதுபோன்ற தொழிலை தொடர்வது என்று யோசிக்கிறான்.
தொழிலை விட்டுவிடுவோமா ? விட்டால் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று குழம்புகிறான்.
செல்லோ இசைக்கருவியை எடுக்கிறான் அந்த  இசைக்குறிப்புதாளில் பெரிய கல் ஒன்று சுற்றப்படிருகிறது.அந்த கல் சிறுவயதில் பெற்றோர் சகிதம் ஆற்றோரத்தில் விளையாடுகையில் அப்பா அவனுக்கு கொடுத்தது .
''மொழிகள் தோன்றாத காலத்தில் கற்களை கொண்டுதான் மனிதர்கள் பேசிகொள்வார்கள் . மென்மையான கல்லை கொடுத்தால் சந்தோஷமாக உள்ளேன் என்றும் கரடுமுரடான கல்லை கொடுத்தால்
கவலையாக உள்ளேன் என்று அர்த்தம்...'' அப்பா சொன்னதும் ஒரு சிறிய மென்மையான வெள்ளைக் கல்லை கொடுக்கிறான் அப்பா பெரிய கல்லை கொடுக்கிறார்.
சிறுவயதில் நடந்தவற்றை நினைந்துப்பார்கிறான்.
அவனால் தந்தையின் முகத்தை நினைவு கூற முடியவில்லை.
தாயாருக்கு துரோகம் செய்துவிட்டு வேறு பெண்ணோடு ஊரைவிட்டு சென்ற பிறகு தந்தையை அவன் பார்த்ததே இல்லை.
நீண்ட நாட்களுக்கு பின்னர் செல்லோ இசைக்கத் தொடங்குகிறான்
அவனது இசை அந்த இரவின் நிசப்ததோடு கலந்துவிடுகிறது.


குருவோடு இறந்த வீட்டுக்கு செல்கிறான் அங்கே உடல் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.
குருவின் செயல்கள் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
இறந்த உடல் குடும்பத்தாரின் கண்ணீர் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்துவதை உணர்கிறான்
குருவோடு இணைந்து பணிபுரிகிறான்

முதன் முதலில் மேக்கப் செய்ய இது தனது மகள் அல்ல என்று கதறுகிறாள் தாய்
தாமதமாக வந்ததுக்கு திட்டும் மிகபெரிய தொளிள்ளதிபர்
குருவின் அலங்காரத்தை பார்த்து கண்கலங்கி இறுதியில்
'' என் மனைவி இவ்வளவு அழகா இப்படி அழகாக நான் பார்த்ததில்லை
என்று நெகிழ்ந்துபோய் மன்னிப்பு கோருகிறார்
விஷயம் மெல்ல மெல்ல தெரிகிறது அனைவரும் இவனை ஒத்துக்குகிரர்க்ள
மனைவி இந்த மாதிரி வேலை வேண்டாம் என்று பிரிந்து போகிறாள்
ஆனால் வேலையை தொடர்கிறான் ஆத்மார்த்தமான மாற்றத்தை அவனுள் உணர்கிறான்

மனைவி கர்ப்பவதியாக திரும்பி வருகிறாள்
இந்த வேலை வேண்டாம் விட்டுவிடுங்கள் நமது குழந்தையின் எதிர்காலத்தை இந்த வேலை நிர்மூலமாக்கிவிடும் வேறு வேலை தேடிக்கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று கூற மறுக்கிறான்
பேசிகொண்டிருக்கையில் ஒரு அழைப்பு
பொதுகுளியலறை நடத்துனரும் அம்மாவின் தோழியுமான பெண்மணி இறந்துபோக அங்கு சென்று இறுதிக்கடமைகள் செய்கிறான்
தனது தாயாருக்கு செய்த கடமைகளை பார்க்கும் பெண்மணியின் மகன்
நண்பனை திட்டி ஒதுக்கியதை பார்த்து வேதனை கொள்கிறான்

உடலை பார்க்காமல் ஆதமரத்தமாக செய்யும் வேலையை பார்த்தவள் அவனின் தொழிலை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறாள்
சில நாட்களின் பின்பு தந்தையின் இறப்பு செய்தி கிடைகிறது
தயக்கத்தோடு வர மறுப்பவனை கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறாள் மனைவி
அங்கு யாருமற்று கிடத்தி வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அநாதை பிணங்களை போல முறையற்று சடங்குகள் நடப்பதை பார்த்து கோபம் கொள்பவன் அவர்களை புறந்தள்ளிவிட்டு இறுதிகடமைகளை செய்ய ஆரம்பிக்கிறான்
உடலை சுத்தப்படுத்துகையில் அவரின் கைகள் எதையோ இருக்கப் பற்றியிருப்பதை பார்கிறான் கஷ்டப்பட்டு திறந்தால் ஒரு சிறிய வெள்ளை கல்.
சிறுவயதில் ஆற்றோரத்தில் தான் கொடுத்த கல்லை  தந்தை பத்திரப்படுத்தியதையும் தனக்காக என்கியதையும் உணர்கிறான்
நெகிழ்ந்துபோய் அந்த கல்லை மனைவின் வயிற்றில் வைத்து
கருவில் இருக்கும் குழந்தைக்கு அன்பை உணர்த்துகிறான்.

சிக்கலான பாதைகள் பொக்கிஷங்களின் மறைவழி என்பதை எப்பொழுதும் பூரணமாக நம்புகின்றேன். வாழ்க்கை நமக்கானபயணத்தை மாற்றி அமைத்தாலும் அதில் நம்மை மீட்டுத்தரவே செய்கின்றது.
சினிமாவின் நுட்பங்களை எப்போதும் தேடி அலையும் என்னை வாழ்வின் புதிர்களை நோக்கி நகர செய்துவிட்டது .







Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

Balut Country