Departures

நம் வாழ்வில் மரணம் என்பது தவிர்க்க முடியாது. நமது வீடுகளிலும் மரணம் நிகழ்ந்திருக்கும். இல்லாவிட்டால் நிச்சயம் அடுத்தவரின் மரண வீடுகளுக்கு சென்றிருப்போம் . அப்போதெல்லாம் மரணித்தவர் , அவரின் உறவுகள் துக்க விசாரிப்புக்கள் கண்ணீர் இவை தான் நாம் அறிந்தவை . மரணத்தின் மூலமாக ஜீவியம் நடத்துபவர்களை பற்றி சிந்தித்ததுண்டா ? பிணவறை ஊழியர் , சவப்பெட்டி செய்பவர் ,மின்சார சுடுகாட்டில் பணிபுரிபவர் ,வெட்டியான் , சாவு மேளம் அடிப்பவர் என்று தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் பலரின் மரணத்தை தரிசிகின்றார்கள் .அவர்களது வாழ்வில் மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ? சமுகத்தில் அவர்களை எப்படி பார்கிறார்கள் ? புறக்கணிப்பும் வெறுமையும் அருவருப்பும் கடந்து அவர்களால் இயல்பாக வாழ முடியுமா ? இப்படி என்னை சிந்திக்க வைத்த ,அழ வைத்த ஜப்பானிய திரைப்படம் தான் Departures இசைக்கச்சேரிகள், அன்பு மனைவி என்று சந்தோஷமாக வாழ்கிறான் டைகோ( Daigo Kobayashi) . ஒருநாள்- அவனுடைய ஆர்கெஸ்ட்ரா கலைக்கப்படுகிறது. வேலைபோய் விட்ட கவலைக்கு உள்ளாகிறான். மிகுந்த தயக்கத்தோடு மனைவியிடம் தன...