ஒரு காட்சி ...சில எண்ணங்கள் ...
பர்பி படத்தில் பாடல்கள் அருமையானவை இந்த பாடல் அழகானதுதான்
ரசிக்க கூடிய பல காட்சிகளை உள்ளடக்கிய இந்த பாடலில் ஒரு காட்சி முக்கியமானது
ரன்பீரும் பிரியங்காவும் லாரியில் பயணிக்கையில்
பிரியங்கா தூங்கிக் கொண்டிருப்பார்
மனவளர்ச்சி குன்றிய பிரியங்காவின் ஆடை விலகி கால்கள் தெரியும்
அதை உற்றுபார்ப்பார் சக பயணி ஒருவர்
ஆடையை சரிப்படுத்தி விட்டு "இதைப்பார் " என்று
தன் காலைக் காட்டுவார் ரன்பீர்
மிக குறுகிய நேரம் இடம் பெறும் இக்காட்சி என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது
இந்த காட்சியில் எத்தனையோ விடயங்களை மறைமுகமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்
ஒரு பெண்ணின் உடல் பாலுணர்வு அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது
அவள் மனவளர்ச்சி குன்றியவளாக இருந்தாலும் அது பற்றிய கவலை இல்லை
பெண் மீதான உடல் அரசியல் இது
பெண்ணின் உடல் மீது, சொல்லப்போனால் சதை மீது ஏற்படும் அந்த உணர்வு ஆண் மீது தோன்றாததுக்கு ஹார்மோன்கள் மட்டும் தான் காரணமா?
இந்த படத்தில் வரும் பர்பி மாதிரி எத்தனை ஆண்கள் பெண்ணை அவள் உடல் தவிர்த்து சக மனிஷியாய் பார்கிறார்கள்
மிக சொற்பமே ...
உடல் என்பது வெறும் சதைபிண்டம் தான்
இந்த மேல் தோல் இல்லாமல் போனால் யாரெல்லாம் விரும்புவார்கள் ?நேசிப்பார்கள் ?
பல பக்கங்களில் பேச வேண்டிய விடயங்களை ஒரு காட்சியில் உணர்த்திவிட்டார் இயக்குனர்
இந்தக் காட்சியை பார்த்த பின்னராவது உரிமை இல்லாத பெண்ணை பாலுணர்வுடன் பார்ப்பததை தவிர்க்கலாமே....
இந்த படத்தில் வரும் பர்பி மாதிரி எத்தனை ஆண்கள் பெண்ணை அவள் உடல் தவிர்த்து சக மனிஷியாய் பார்கிறார்கள்
ReplyDeleteமிக சொற்பமே ...
உடல் என்பது வெறும் சதைபிண்டம் தான்
இந்த மேல் தோல் இல்லாமல் போனால் யாரெல்லாம் விரும்புவார்கள் ?நேசிப்பார்கள் ?
பல பக்கங்களில் பேச வேண்டிய விடயங்களை ஒரு காட்சியில் உணர்த்திவிட்டார் இயக்குனர் nice....
:)...
Delete