ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி...
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும் விபரம் நான் கண்டு
வியக்கிறேன் வியர்க்கிறேன்
வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
விழி அல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது
தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே
விழி அல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது உனக்குத்தான் உரியது
இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல் தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது
தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே
தோகையே உன்னை நான் தேடியே வந்தேன் இங்கே
பொய்கையை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய்
தேங்கினேன் உன் கையில் வழங்கினேனே என்னை இன்றே...
தோழியே உன் தேகம் இளம் தென்றல் தொடாததோ
தோழனே உன் கைகள் தொட நாணம் தான் விடாததோ
காதல் ஒரு அழகான பரவச உணர்வு, பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் எனக்கு,காதலும் அது சார்ந்த விடயங்களும் எப்போதும் செய்திதான்.
காதலை பார்த்து படித்து ரசித்து இருந்தாலும் அதை உணரும் வாய்ப்பு கிடைத்ததில்லை ...
சில அயல் சினிமாக்கள் காட்டிய காதலில் அதன் ஆத்மார்த்தமான உணர்வுகண்டு சிலாகித்திருந்தாலும் தமிழில் அதுபோன்ற திரைத்தருணங்களை நான் கண்டதில்லை ...
இந்த பாடலில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கலாம்
காதல் இருக்கிறது. ஆத்மார்த்தமான காதல் இந்த பாடலில் வழிகிறது
இசையும் குரலும் சாதாரண வரிகளை பேரழகாக மாற்றிவிட்டது
காட்சிபடுத்தல் அதைவிட அழகு
அலைபாயுதே படத்தில் சிநேகிதனே பாடல் இடம் பெற்ற இடத்தை ஞாபகப்படுத்தினாலும் அந்த பாடலையும் தாண்டி இந்த பாடல் அதிகம் ரசிக்க வைக்கிறது.
நாயகன் ஷிவ், நாயகி மான்சி காதல்வயப்பட்டவர்களை அவர்களது உணர்வுகளை, சின்ன பார்வையில் பரிமாறும் அளவற்ற காதலை வெளிப்படுத்தியுள்ளார்கள்
அதுவும் மான்சியின் கண்களில் வெளிப்படும் காதல் ...
அந்த வெட்கம் ...தாபம்....அருமை
அந்த வெட்கம் ...தாபம்....அருமை
பார்க்கும்போதே பாடலில் உள்ள குளிர்ச்சி நம்மையும் மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது
எத்தனையோ காதல் பாடல்களை கேட்டிருந்தாலும் இப்பாடல் போல என்னை எதுவும் ஈர்த்தது இல்லை...தொடர்ச்சியாக பல நாட்கள் என் இரவுகளின் தனிமையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது
இத்தனை தூரம் என்னை ஒரு பாடல் ஈர்க்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.இப்பாடலை பார்க்க பார்க்க ஏன் காதலிக்காமல் இருக்கிறோம் என்று கூட தோன்றியது
காதல் இத்தனை அழகானதா? இவ்வளவு மகிழ்வை தருமா ?
எனக்கு புரியவில்லை ....யாரோ ஒருவரது கனவு இது... ஆனால் என்னை இத்தனை தூரம் இம்சிக்கிறது. அது எப்படி?
Comments
Post a Comment