Traveling on one leg
எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தரவுகளோ தகவல்களோ தெரியாமல் பார்க்கின்ற திரைப்படங்கள் நம்மை நெருங்கி மனதில் ஆழ ஊடுருவி நுழைவது ரசனையான அனுபவம். Traveling on one leg சமிபத்தில் அத்தகைய நுண் அனுபவத்தை தந்த திரைப்படம். 1985 இல் ரோமானியா -ஜேர்மனி இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாக பிரிந்த நேரத்தில் தன் இழந்த காதலை தேடி புறப்படும் பெண்ணின் அக உணர்வுகளை படம் சித்தரிக்கின்றது. இந்தப்படத்தை Avant-Garde படங்களின் காட்சிமுறை இப்படிதானே என்ற எண்ணத்தோடு கடந்து விட முடியாது. புற அழுத்தங்களால் சிதைவுறும் அக உலகத்தை காட்சிப்படுத்தல் அத்தனை எளிதல்ல. மனிதருக்கு மனிதர் சிந்தனை என்பது முற்றிலும் மாறுபட்டது. நாடுகளுக்கு எல்லை கோடுகள் போட்டு பிரித்துவிடலாம். மனித மன ஓட்டங்களை எந்த வேலி கொண்டும் தடுத்துவிட முடியாது . காதலும் ஏக்கமும் காமம் சார்ந்து மட்டுமே பயணிக்கும் என்ற ஒருதளப்பார்வை ஆழமற்றது. அன்பையும் பற்றுதலையும் தேடி அலைகின்ற மனம் அதற்குள்ளே தனது அடையாளத்தையும் தேடிக் கொண்டே இருக்கும். எதை நாம் அதிகம் நேசிக்கின்றோமே அதையே அதிகம் வெறுக்கவும் விலகவும...
Comments
Post a Comment