Posts

The Clue:4th Period Mystery

Image
இலக்கிய வகுப்பு ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்கள் குறிபெடுத்துக் கொள்கின்றார்கள் .அந்த மாணவர்கள் கூட்டத்தில் ஒருவன் ஜங் ஹூன் (Jung-hoon) .வகுப்பில் சிறந்த மாணவனாக நற்பெயர் கொண்டவன் . எழுதும் போது எதேச்சையாக முன்னிருக்கையைப் பார்கிறான் . டா ஜங் (Da-jung)  எப்போதும் நீளக் கூந்தலை விரித்துவிட்டிருபாள் அதனால் curtain என்றே அனைவரும் அழைப்பார்கள் . பாடப்புத்தகத்திற்குள் குற்றங்கள் தொடர்பான புத்தகத்தை மறைத்து வைத்து வாசிக்கிறாள் .அவளது மேஜையில் இருப்பது எல்லாமே கிரைம் தொடர்பான புத்தகங்கள் . அவளது செய்கையை பார்த்துவிட்டு மீண்டும் பாடத்தை கவனிக்க தொடங்குகிறான் ஜங். ஒருவனை விஷம் வைத்து எப்படி கொல்லலாம் என்பதை பற்றி curtain மனதிற்குள் வாசிக்கையில் திடிரென்று பின் இருக்கையில் சத்தம் கேட்கிறது . பின்வரிசை மாணவன் வாயில் நுரை தள்ளி துடிதுடிக்க அனைவரும் பதறுகிறார்கள் .ஜங் ஆம்புலன்சை அழைக்க முயல, டா அந்த மாணவனை தொடர்ந்து தனது கேமராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறாள் . சில நாட்களுக்கு பின்பு- மாணவன் உயிர்  பிழைக்கிறான் .அந்த மாணவன் உட்பட எல்லோரும் food po...

காக்கா முட்டை

Image
காக்கா முட்டை   –நான் உணர்ந்ததை கொஞ்சம் பகிர்கிறேன் :)  காக்கா முட்டை  கதை நாயகர்களின் பெயர் இதுதான்.   2   சிறுவர்கள் மூத்தவன் பெரிய காக்கா முட்டை, சிறியவன் சின்ன காக்கா முட்டை.  புறநகர் பகுதியான சேரியில் ஒரு சிறு குடும்பம் .அந்த குடும்பத்தில் 2 சிறுவர்கள் . அப்பா சிறையில், அம்மாவும் அப்பத்தாவும் ஒரு குட்டி நாயும், சிறிய அறையில் குடும்பமாக வாழ்கிறார்கள் . பீட்சா கடை திறக்கப்படுகிறது.சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைபடுகிறார்கள் . தினமும் 1௦ ருபாய் சம்பாதிக்கும் சிறுவர்கள் எப்படி 300 ரூபாய் பீட்சாவை சாப்பிட்டார்கள் ? இதுதான் படத்தின் கதை. சிறுவர்கள் இருவரும் காக்கா முட்டை குடித்து வளர்கிறார்கள் .இதனால் அனைவரும் கேலி செய்கிறார்கள். தாய்திட்டும் போது,அப்பத்தா ”காக்காவும் பறவை தானே நம்ம கூடவே இருக்குது.முட்டை விக்குற வெலைல அதை வாங்க முடியுமா ?” என்று பேரன்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் .காக்கைகள் கூடு கட்டி வாழும் மரமும் மரம் சார்ந்த இடமும் திடிரென்று ஒருநாள் பூட்டப்படுகிறது. வியாபார ஸ்தலமாக மாறுவதால் மரம் அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு இறுதியில் மிகப்பெரி...

SE7EN

Image
திங்கட்கிழமை காலை ...மழை பெய்து கொண்டிருகிறது . பழைய கட்டிடத்தை நோக்கி செல்கிறார்கள் துப்பறிவாளர்களான வில்லியம் சொமர்செட்டும் டேவிட் மில்லரும் . மிகவும் அழுக்கடைந்த அறை ....இருட்டு ....ஒரு மாமிசமலை போன்ற பருமனான மனிதன், வயிறு வெடித்து இறந்து கிடக்கின்றான் . அவனது கால்களும் கைகளும் முட்கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது . அளவுக்கதிகமாக அவனை சாப்பிடச்செய்து கொடூரமாக கொலை செய்திருகிறார்கள்  என்று தெரிகிறது . அடுத்த நாள் - நகரத்தின் மிக பிரபலமான வக்கீல் ....தனது உடற்பகுதியை தானே வெட்டி எடைபோட கொடுத்திருக்கிறார் ,மேசைக்கடியில் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டு இறந்த நிலையில் அவரது உடல் கிடைக்கிறது . தரையில் 'GREED' (பேராசை ) என்று இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது . முன்னர் நடந்த கொலையில் GLUTTONY (பெரும்தீனி)  என்று எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது . இந்த வாரத்தைகள் பைபிளில் காணப்படுகின்றன . PRIDE (பெருமை ) ENVY (பொறாமை  ) GLUTTONY(பெரும்தீனி) LUST( இச்சை ) WARTH (பெரும்கொபம் ) GREED(பேராசை ) SLOTH(சோம்பேறித்தனம்)         ...

Vertigo

Image
வாழ்க்கையில் நமக்கு எப்போதும் பயங்கள் இருந்துகொண்டே இருக்கும் . நிழல் போல தொடரும் பயங்களில் இருந்து வெளிவருவது எல்லோராலும் முடியாது . அந்த பய நிழலை தவிர்க்க வேண்டுமானால் சில விடயங்களை இழந்தால் மட்டுமே சாத்தியம் . பயத்தை பொறுத்தே நம் வாழ்வும் கட்டமைக்கப்பட்டு விடுகிறது . இந்த தத்துவத்தை மர்மபயணத்தின் மூலமாக உணர்த்துகிறது Vertigo. ஜான் ஸ்காட்டி(John Scottie)  மிகச்சிறந்த துப்பறிவாளன்; அனுபவசாலி; அவனது துறையில் அவனுக்கு ஈடுஇணை யாருமே இல்லை என்பார்கள். இந்த புகழ் நீடிக்க, காலம் அனுமதிக்கவில்லை .ஜானிற்கு ஒரு வினோத வியாதி உண்டு.  '' Acrophobia'- உயரமான இடத்திற்கு செல்கையில் அந்த உயரம் காரணமாக பயம் கலந்த தலைசுற்றல் ஏற்படும். இதனால், ஜானின் தொழில் பாதிக்கப்படுகிறது.குற்றவாளி உயர்ந்த இடங்களை நோக்கி  செல்கையில் அவனால் பிடிக்க முடிவதில்லை. இருந்தும், தனது வியாதியை தைரியமாக எதிர்கொள்ள முயல்கிறான் . அப்படி ஒரு நாள் ஒரு குற்றவாளியை துரத்தி செல்கையில், உயரம் அவனுள் பீதியை ஏற்படுத்த தலைசுற்றி கீழே விழ முயல அவனைக் காப்பாற்ற முயலும் போலிஸ் ஒருவரை இழக்கிறார் . சக அதிகாரியின்...
Image
பெண்  சுயம்   –   ஒரு மாற்றுப் பார்வை  ''என் கையிலிருப்பது ஒரு பேனா .இதே மாதிரி தோற்றத்தில் இதே மாதிரி  மையளவில் இதே மாதிரி செயல் திறத்துடன் லட்சக்கணக்கான பேனாக்கள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும்  உள்ளது . இந்த மையில் நாம் என்ன எழுதிறோம் என்பதை பொறுத்து தான் அந்த பேனாவுக்கு அர்த்தம் கிடைகிறது . இந்த பேனா மாதிரி தான் பெண் வாழ்க்கையும் . பெண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உடல் உறுப்புக்கள் ,ஹார்மோன்கள், செயல்திறனுடன் இருக்கிறோம் .அதுவும் கோடிக்கணக்கில் . அதில் எத்தனைப் பேர் அடையாளங்களாக இருக்கிறார்கள் ? அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறார்கள் ? பெண் சுயம் என்று நான் சொல்வது சுய அடையாளத்தை .தன்னை தானே செதுக்கி உயரங்களை சிகரங்களை  நோக்கி செல்கிற பெண்ணோட தேடல் வெளிதான் நான் பேசபோற சுயம் . Wயோட மகள்,  Xஓட சகோதரி,  Yயுடைய மனைவி, Zஉடைய அம்மா இப்படிதான் பல பெண்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் . வீட்டைத்தாண்டி அவர்களின் பெயர் இல்லை .ஏன் திருமணம் ஆனதற்கு  பிறகு திருமதி என்ற அடையாளத்திற்குள் அவள் பெயர...

Bicycle Thieves

Image
Bicycle Thieves அறம் என்பது என்ன? திருட்டு அறமல்ல; குற்றம் என்பதை அறிவோம் ஆசையின் அடிப்படையில் நடக்கும் திருட்டு –குற்றம். அவசியத்தின்  அடிப்படையில் நடக்கும் திருட்டு??? பல்பொருள் அங்காடிக்கு முன்னால் உணவுப்பொதியை திருடி செல்பவர்களை எந்தஅடிப்படையில் குற்றவாளி என்பது? நாங்கள் பாதைகளோடு தெரு மனிதர்களையும் கடந்தே போகிறோம். எங்களது புறக்கணிப்பில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் குற்றசமுகமாக மாறிவருகிறது. ஒருவனது குற்றசெயலுக்கு பின்னணியில் நம் பெயரும் இருக்கிறது என்பதை கண்ணீரோடு உணர்த்துகிறது Bicycle Thieves  இரண்டாம் உலகயுத்தகாலம். இத்தாலியில் வேலையில்லாத்திண்டாட்டம் நிலவிவருகிறது .ஒரு இடத்தில் போஸ்டர் ஓட்டும் வேலைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது .தங்கள் பெயர் பட்டியலில் வருமா என்று ஆவலோடு காத்திருகிறது ஒரு பெரிய கூட்டம் . மேலாளர் அந்தோனியோரிச்சியை அழைக்கிறார். அந்தோனியோரிச்சி வேலையற்ற குடும்பஸ்தன் .சந்தோஷத்தில் சென்றால் அந்த வேலைக்கு சொந்தமாக சைக்கிள் இருக்கவேண்டும் என்று மேலாளர் சொல்ல ,செய்வதறியாது தவிக்கிறான் அந்தோனியோ. சைக்கிள் இல்லை என்றால் எங்கே வேலை பறிபோய்விடும்...

Spirited Away

Image
கனவுகள் கற்பனைகள் என்பதன் ஆரம்ப புள்ளி எதுவாக இருக்கும் ? எனக்குள் எப்படி ஆரம்பித்தது இந்த கற்பனைகளின் பயணம்  என்று அடிக்கடி யோசிப்பேன் .... பனி படர்ந்த கண்ணாடியில் தெரியும் முகத்தோற்றம் மாதிரி என் நினைவுகளில் நிழலாடுகிறது அந்த பால்யகால சம்பவங்கள் தாத்தாக்கள் பாட்டிகளிடம் கதை கேட்ட நாட்கள் அவை . அவர்கள் சொல்லச் சொல்ல அதை மனதில் காட்சிப்படுத்திக் கொள்வது என் வழக்கம் . பாட்டிகளின் உலகத்தோடு ஆரம்பித்த இந்த வழக்கம் எல்லோரிடமும் கதை கேட்கும் நச்சரிப்பாகவே மாறியது.  ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கதை இருக்கும்; பல சமயம் ஒரே கதை வெவ்வேறு விதத்தில் வெளிப்படும் . எதுவாக இருந்தாலும் எனக்கு கதைகள் ,அது தரும் கற்பனைகள், தனிமையை துரத்த தேவைப்பட்டது . காலப்போக்கில் பால்யம் தொலைய சினிமாவுக்குள் ஐக்கியமானேன். சினிமா தரும் கற்பனை உலகில் வசிக்க ஆரம்பித்த பிறகு கதைகளோடு வாழவே ஆரம்பித்து விட்டேன் . என்றோ கேட்ட கதைகளின் எச்சங்கள் இன்றைய பொழுதோடு சேர்ந்து கனவுகளில் துரத்தும் . அதை அரையுறக்கத்தில் ரசித்துக் கொண்டே உறங்கியும் உறங்காமலும் இரவை கழிப்பேன்.  இது என் வாழ்க...