Posts

Vertigo

Image
வாழ்க்கையில் நமக்கு எப்போதும் பயங்கள் இருந்துகொண்டே இருக்கும் . நிழல் போல தொடரும் பயங்களில் இருந்து வெளிவருவது எல்லோராலும் முடியாது . அந்த பய நிழலை தவிர்க்க வேண்டுமானால் சில விடயங்களை இழந்தால் மட்டுமே சாத்தியம் . பயத்தை பொறுத்தே நம் வாழ்வும் கட்டமைக்கப்பட்டு விடுகிறது . இந்த தத்துவத்தை மர்மபயணத்தின் மூலமாக உணர்த்துகிறது Vertigo. ஜான் ஸ்காட்டி(John Scottie)  மிகச்சிறந்த துப்பறிவாளன்; அனுபவசாலி; அவனது துறையில் அவனுக்கு ஈடுஇணை யாருமே இல்லை என்பார்கள். இந்த புகழ் நீடிக்க, காலம் அனுமதிக்கவில்லை .ஜானிற்கு ஒரு வினோத வியாதி உண்டு.  '' Acrophobia'- உயரமான இடத்திற்கு செல்கையில் அந்த உயரம் காரணமாக பயம் கலந்த தலைசுற்றல் ஏற்படும். இதனால், ஜானின் தொழில் பாதிக்கப்படுகிறது.குற்றவாளி உயர்ந்த இடங்களை நோக்கி  செல்கையில் அவனால் பிடிக்க முடிவதில்லை. இருந்தும், தனது வியாதியை தைரியமாக எதிர்கொள்ள முயல்கிறான் . அப்படி ஒரு நாள் ஒரு குற்றவாளியை துரத்தி செல்கையில், உயரம் அவனுள் பீதியை ஏற்படுத்த தலைசுற்றி கீழே விழ முயல அவனைக் காப்பாற்ற முயலும் போலிஸ் ஒருவரை இழக்கிறார் . சக அதிகாரியின்...
Image
பெண்  சுயம்   –   ஒரு மாற்றுப் பார்வை  ''என் கையிலிருப்பது ஒரு பேனா .இதே மாதிரி தோற்றத்தில் இதே மாதிரி  மையளவில் இதே மாதிரி செயல் திறத்துடன் லட்சக்கணக்கான பேனாக்கள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும்  உள்ளது . இந்த மையில் நாம் என்ன எழுதிறோம் என்பதை பொறுத்து தான் அந்த பேனாவுக்கு அர்த்தம் கிடைகிறது . இந்த பேனா மாதிரி தான் பெண் வாழ்க்கையும் . பெண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உடல் உறுப்புக்கள் ,ஹார்மோன்கள், செயல்திறனுடன் இருக்கிறோம் .அதுவும் கோடிக்கணக்கில் . அதில் எத்தனைப் பேர் அடையாளங்களாக இருக்கிறார்கள் ? அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறார்கள் ? பெண் சுயம் என்று நான் சொல்வது சுய அடையாளத்தை .தன்னை தானே செதுக்கி உயரங்களை சிகரங்களை  நோக்கி செல்கிற பெண்ணோட தேடல் வெளிதான் நான் பேசபோற சுயம் . Wயோட மகள்,  Xஓட சகோதரி,  Yயுடைய மனைவி, Zஉடைய அம்மா இப்படிதான் பல பெண்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் . வீட்டைத்தாண்டி அவர்களின் பெயர் இல்லை .ஏன் திருமணம் ஆனதற்கு  பிறகு திருமதி என்ற அடையாளத்திற்குள் அவள் பெயர...

Bicycle Thieves

Image
Bicycle Thieves அறம் என்பது என்ன? திருட்டு அறமல்ல; குற்றம் என்பதை அறிவோம் ஆசையின் அடிப்படையில் நடக்கும் திருட்டு –குற்றம். அவசியத்தின்  அடிப்படையில் நடக்கும் திருட்டு??? பல்பொருள் அங்காடிக்கு முன்னால் உணவுப்பொதியை திருடி செல்பவர்களை எந்தஅடிப்படையில் குற்றவாளி என்பது? நாங்கள் பாதைகளோடு தெரு மனிதர்களையும் கடந்தே போகிறோம். எங்களது புறக்கணிப்பில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் குற்றசமுகமாக மாறிவருகிறது. ஒருவனது குற்றசெயலுக்கு பின்னணியில் நம் பெயரும் இருக்கிறது என்பதை கண்ணீரோடு உணர்த்துகிறது Bicycle Thieves  இரண்டாம் உலகயுத்தகாலம். இத்தாலியில் வேலையில்லாத்திண்டாட்டம் நிலவிவருகிறது .ஒரு இடத்தில் போஸ்டர் ஓட்டும் வேலைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது .தங்கள் பெயர் பட்டியலில் வருமா என்று ஆவலோடு காத்திருகிறது ஒரு பெரிய கூட்டம் . மேலாளர் அந்தோனியோரிச்சியை அழைக்கிறார். அந்தோனியோரிச்சி வேலையற்ற குடும்பஸ்தன் .சந்தோஷத்தில் சென்றால் அந்த வேலைக்கு சொந்தமாக சைக்கிள் இருக்கவேண்டும் என்று மேலாளர் சொல்ல ,செய்வதறியாது தவிக்கிறான் அந்தோனியோ. சைக்கிள் இல்லை என்றால் எங்கே வேலை பறிபோய்விடும்...

Spirited Away

Image
கனவுகள் கற்பனைகள் என்பதன் ஆரம்ப புள்ளி எதுவாக இருக்கும் ? எனக்குள் எப்படி ஆரம்பித்தது இந்த கற்பனைகளின் பயணம்  என்று அடிக்கடி யோசிப்பேன் .... பனி படர்ந்த கண்ணாடியில் தெரியும் முகத்தோற்றம் மாதிரி என் நினைவுகளில் நிழலாடுகிறது அந்த பால்யகால சம்பவங்கள் தாத்தாக்கள் பாட்டிகளிடம் கதை கேட்ட நாட்கள் அவை . அவர்கள் சொல்லச் சொல்ல அதை மனதில் காட்சிப்படுத்திக் கொள்வது என் வழக்கம் . பாட்டிகளின் உலகத்தோடு ஆரம்பித்த இந்த வழக்கம் எல்லோரிடமும் கதை கேட்கும் நச்சரிப்பாகவே மாறியது.  ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கதை இருக்கும்; பல சமயம் ஒரே கதை வெவ்வேறு விதத்தில் வெளிப்படும் . எதுவாக இருந்தாலும் எனக்கு கதைகள் ,அது தரும் கற்பனைகள், தனிமையை துரத்த தேவைப்பட்டது . காலப்போக்கில் பால்யம் தொலைய சினிமாவுக்குள் ஐக்கியமானேன். சினிமா தரும் கற்பனை உலகில் வசிக்க ஆரம்பித்த பிறகு கதைகளோடு வாழவே ஆரம்பித்து விட்டேன் . என்றோ கேட்ட கதைகளின் எச்சங்கள் இன்றைய பொழுதோடு சேர்ந்து கனவுகளில் துரத்தும் . அதை அரையுறக்கத்தில் ரசித்துக் கொண்டே உறங்கியும் உறங்காமலும் இரவை கழிப்பேன்.  இது என் வாழ்க...

Nuit Blanche(Sleepless Night)

Image
Nuit Blanche( Sleepless Night) மனிதன் எப்போதும் சமுக பிராணி என்றாலும் குடும்பமாக வாழ்கையில் அவர்களுக்குள் எழும் உறவுச்சிக்கல், மனோரீதியாகவும்  மரபணுரீதியாகவும் அணுகப்பட வேண்டியது . உலகம் முழுவதும் குடும்ப அமைப்புகளை எடுத்துகொண்டால் பெரும்பான்மையான  தந்தை -மகன் பாசபுரிதல் ஒரே மாதிரியானதாகவே காணப்படுகிறது . அவர்கள் இருவருக்குள்ளும் அன்பிருந்தாலும் வெளிப்படையாக கட்டிக்கொள்ள மாட்டார்கள் . ஏதோ தயக்கம், ஒட்டுதலற்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும் . ஏதோ ஒரு சந்தர்பம் அவர்களுக்குள் அன்பை உணர செய்யும் தருணமாக  அமையும்.  அந்த நேரம் வெளிப்படும்  கண்ணீரும் புன்னகையும்தான் இருவரின் அன்பிற்கு சாட்சி . இந்த உணர்வை நீரோடை போன்ற கதையோட்டம் கொண்ட படங்களில் பார்த்திருப்போம் .ஆனால் வாழ்வா சாவா போராட்டத்தில் தந்தையும் மகனும் தங்களுக்குள் இழையோடும் பாசத்தையும் நேசத்தையும் உணர்ந்தால் ...?  அந்த தந்தை-மகன் கதைதான்    Nuit Blanche(Sleepless Night). அதிகாலை நேரம் - காரில் வரும் இருவர் முகமூடி அணிந்து கொள்கின்றனர் . இன்னொரு காரினை துரத்திபிடித்...
Image
மனப்பெட்டகம் எழுதப்படாத கவிதைகள் நிறைந்துபோன மனப்பெட்டகம் திறந்து மூடிக்கொண்டிருக்கிறது. அதன் சத்தங்கள் பொறுக்க முடியாத இம்சையாய்... பூட்டுக்கள் அடைத்து முழுவதுமாய் மூடி சாவி தொலைக்கதோன்றும் எண்ணங்கள். செய்ய துணிய மறுக்கிறது மனது... மூடுகையில் திறக்கவும்  திறக்கையில் மூடவும்  தோன்றுகிறது நித்தமும்  திறப்பதும் மூடுவதுமாக தொடரும்  மீண்டும் மீண்டும்  தொலையும்வரை ...!!!
Image
நீதிக்கு நெஞ்சோ நிகர் கவிபாட வேளை வந்தது திறந்திருந்த என் பேனையில் வார்த்தைகளைக் கொட்டி குவிக்கிறேன் கிறுக்கல்கள் கவியாகாது இது கிறுக்கச்சியின் உளறல்கள் கவியரங்கில்  நீதிக்கு நெஞ்சோ நிகர்  என்ன கவி சொல்வேன் இங்கு ? வருகிறான் ஒருவன்  என் பக்கத்தில் நிற்க வைக்கிறார்கள்  நிற்கிறான். கண்களில் சிந்தக் காத்திருக்கும் கண்ணீர்  தளர்ந்து போன உடல்  அமைதியும் பயமும் கொண்ட அவன் உள்ளம் பிரார்த்திக்கிறது  சட்டென்று அவன் முகம் மறைத்து  என்னை அவனுடன் இருகப் பிணைத்துவிட்டார் என் அதிகாரி. நேரம் பார்த்து அனுமதிக்க மெல்ல மெல்ல  நான், அவன் கழுத்தை இறுக்கினேன் . என் முழு பலத்தையும் உபயோகித்து  அவன் கழுத்து நரம்புகளை அறுத்தேன். சுவாசக்குழாய் நெரிபட்டு லேசான உடைவுடன்  அவன் நாக்கு வெளித்தள்ள  கண்கள் முழித்தள்ள  மேலும் மேலும் இறுக்கி பிடித்தேன்  வன்மம் பொங்க என் கடமையை தொடர்ந்தேன்  அவன் துடித்தான்  நான் இறுக்கி பிடித்து கழுத்தறுக்க  சில நிமிட போராட்டங்க...