Painting in movies - Inception




திரைப்படங்களில் ஒரு Frame என்பது, வெறும் கேமராவின் பார்வை சார்ந்தது மட்டுமின்றி பல விடயங்களை உள்ளடக்கியதாக அமைகின்றது.
Everything within the frame makes up the frame என்பதற்கேற்ப
ஒளிப்பதிவு விடயங்கள் (lighting,camera angle etc)
Character elements (blocking,Costume)
Set design ( props, decor) உட்பட பல விடயங்களை உள்ளடக்கியே
ஒரு Frame உருவாக்கப்படுகின்றது.

Set design என்ற பிரிவில் Propகளின் பங்கு அளப்பரியது.
Props என்பவை வெறும் காட்சியின் சூழலை இட்டு நிரப்புகின்ற
பொருட்கள் அல்ல.
படத்தின் கதையினை கட்டியெழுப்பும் கூறுகளில் முக்கியமானவை.
சினிமாவில் கதை சொல்ல ,கதாபாத்திர பயன்பாட்டிற்கு, கதாபாத்திர அசைவுகளுக்கு,திருப்புமுனை ஏற்படுத்த ,Background Prop,Stunt Prop,திரைக்கதையின் கட்டமைப்புக்கு என்ற ரீதியில் பலவிதமான Props, பலதரப்பட்ட விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
கதைக்கு பொருத்தமற்ற எந்த ஒரு பொருளையும் நாம் பயன்படுத்த முடியாத அதே வேளை, பயன்படுத்துகின்ற பொருளானது படத்தில் சரியான
''MOOD'' ஐ உருவாக்குகின்றது என்பதை தெளிவாக உணர்ந்தே ஒவ்வொரு Frameலும் அதற்கேற்ற Props தீர்மானிக்கப்படுகின்றது.

திரைப்படங்களில் இடம்பெறும் பலவிதமான Propகளில்
சுவர் ஓவியங்கள் பற்றி மட்டும் கவனித்தால் ...
இதுவரை படங்களில் இடம்பெற்ற சுவர் ஓவியங்களில்
பிரபலமான ஓவியங்கள் ,
படத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஓவியங்கள் , பிரம்மாண்டத்தையோ அல்லது புதிய உணர்வையோ தோற்றுவிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவியங்கள் , எதேச்சையாக படத்தில் இடம்பெற்ற ஓவியங்கள் என்று
பல பிரிவுகளில் பல்வேறு ஓவியங்களை காணலாம்.
இதில் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஓவியங்களை
திரைப்படங்களில் பயன்படுத்தும் வழக்கமாக காணப்படுகின்றது .
அந்த ஓவியங்கள் பிரபலமானவை என்பதை தாண்டி
ஏன் பயன்படுத்தினார்கள் , அதன் முக்கியத்துவமும் அவசியமும் என்ன ,எப்படிபட்ட தாக்கத்தை அதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தினார்கள் ,
என்பதையும் திரைமொழியில் அதன் முக்கியத்துவத்துவமும்
தாக்கமும் என்ன என்பதையும் நாம் அவசியம் கவனிக்க வேண்டும்.

Paintings in movies தொடரில் முதலாவதாக,
கதாபாத்திரங்களின் முடிவோடு மறைமுகமாக சம்பந்தப்பட்ட
ஓவியங்களை உள்ளடக்கிய திரைப்படங்களில் முக்கியமானது Inception.

ஒரு திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்தையும் பார்வையாளர்களுக்கு அறிவித்துகொண்டே
இருப்பதோடு அவர்களின் சிந்தனைக்கு இடம்தராத திரைப்படங்கள் ஒருவகை என்றால்
சிந்தனைக்கு களம் அமைக்கும் படங்கள் இன்னொரு வகையாகும் . (இவற்றை Open film - Closed film என்றும் கூறுவது ஆரம்ப கட்ட பொதுவான இனம்காணலாக அமைகின்றது. Open-Closed என்று வகைப்பிரிப்பதில் பல விடயங்கள் உண்டு அதைப்பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம் )
இதுதான் முடிவு என்று தீர்மானிக்க முடியாத படங்களை Open ending என்று கடந்துவிடுகின்றோம்.
பெரும்பாலும் இதுபோன்ற படங்களில் முடிவினை தீர்மானிக்க ஏற்ற அனுமானங்கள் படத்தில் எங்கேனும் காட்டப்படுவது வழக்கம்.
அந்த வகையில் Inception படத்தின் இறுதி முடிவு தொடர்பான அனுமானங்களில் ஒன்றாக ஆரம்பத்தில்
வரும் ஓவியத்தை கருதலாம்.

படத்தின் ஆரம்ப கட்ட கனவு காட்சியில் மால்( Marion Cotillard) மற்றும்
காப்பின்(Leonardo DiCaprio) சந்திப்பின் போது
பிரபல பின்நவீனத்துவ ஓவியர் Francis bacon வரைந்த ஓவியம் பின்னணியில் காட்டப்படுகிறது.
இந்த ஓவியத்தைக் குறித்து வசனமும் இடம்பெறும்.

ஐரிஷ் ஓவியர் Francis bacon, தனது காதலர் George Dyerஐ மையப்படுத்தி பல ஓவியங்களை வரைந்துள்ளார் . அவற்றில் 1967ஆம் ஆண்டு 'study for head of George Dyer' தலைப்பில் Expressionism ஸ்டைலில் வரையப்பட்ட ஓவியம் இது!
George Dyer இன் தற்கொலைக்கு பின்னர்
Francis bacon இன் இயல்பு வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
Dyer இன் நினைவுகள் எப்போதும் அவரை தொடர்ந்துகொண்டே இருந்தன. முக்கியமாக குற்ற உணர்ச்சி அவரை வதைத்தது.
அந்த உணர்வுகளின் வெளிப்பாட்டில் Dyerஇன் முகத்தை தொடர்ந்து ஓவியங்களில் வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
Inception படத்தில்
George Dyer ஆக மால் கதாபாத்திரத்தையும் Francis baconஆக காப் கதாபாத்திரத்தையும் நோலன் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்று அனுமானிக்கலாம்.

இதனடிப்படையில்
மனைவி மாலின் மரணத்திற்கு தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சி எப்போதும் காப்பை துரத்தி,
சகல மன /மூளை அடுக்குகளிலும் அவளுடைய நினைவுகள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்ததை நோலன் இவ்வாறு வெளிப்படுத்தியதாக கருதலாம்.
இறுதி காட்சியானது கனவா நனவா என்ற கேள்வி உருவாகும் போதுகூட, இந்த விடயத்தை கொண்டு முடிவினை நாம் அனுமானிக்கலாம்.

Batman(Figure with Meat ),Entrapment (Figure in Movement) படங்களிலும் Francis bacon இன் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தாலும்
அவற்றின் முக்கியத்துவம் Background பொருட்களாக மட்டுமே இருக்கும்.
ஆனால் Inception படத்தில்
சுவர் ஓவியம் என்பதை தாண்டி கதாபாத்திர மனநிலையை யூகித்து கதையின் முடிவினை
அனுமானிக்க செய்யும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு ஓவியத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் நிஜமான தாக்கத்தை அடிப்படையாக கொண்டு, படத்தின் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு
முடிவின் அனுமானத்திற்கும் களம் அமைக்கலாம் என்பதை Inception படத்தின் இந்த காட்சி உணர்த்துகிறது.

நன்றி - Mahesh Raghavan

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery