A Question of Silence



அமைதியின் வன்முறை 



‘’நீ எவ்வளவு பெரிய சைக்கார்ட்டிஸ்ட்,அவங்க சாதாரண பெண்கள்;இது ஒரு நார்மல் கேஸ்’’ 


 ‘’அதான் என் பிரச்சனை, அவங்க ரொம்ப சாதாரண பெண்கள். தினமும் கடைல,தெருவுல பார்க்குற சராசரி பெண்கள். இந்த பொண்ணுங்ககிட்ட இருந்து என்னால உண்மைய பேச வைக்க முடியல;அதான் என் பிரச்னை’’


மனநல மருத்துவர் Cox Habbema, தன் கணவனிடம் கோபமும் இயலாமையுமாக பேசும் இடத்தில் இயக்குனர் நமது
கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டார்.

3 பெண்கள்
உணவகத்தில் பணிபுரியும் தனிமையில் வாழும் வயதான பெண்.
கணவன் குழந்தை சகிதம் குடும்ப வாழ்வில் ஈடுபடும் நடுத்தரவர்க்க பெண்.
பெரிய நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றும் இளம்பெண்.
 ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற இந்த மூவரும் ஒரு ஆடைக்காட்சியறையின் உரிமையாளரை அடித்துக்கொலைசெய்கிறார்கள் .

போலிஸ் விசாரணையில் கைது செய்யப்படும்
இந்த மூவரிடமும் பேசி. அவர்களின் மனநிலை தொடர்பான தெளிவான விளக்கத்தை அளிக்கும் பொறுப்பு
மனநலமருத்துவர் Cox Habbemaவிடம் தரப்படுகிறது.
ஒருத்தி பேச மறுக்கிறாள்,
இன்னொருத்தி வெகுளித்தனமாக பேசுகிறாள்.
மற்ற பெண்ணின் பேச்சில் எப்போதும் எச்சரிக்கையுணர்வும் கேட்பவரை வேறு திக்கில் சிந்திக்க செய்யும் அணுகுமுறையும் காணப்படுகிறது.
பலதரப்பட்ட முயற்சிகளின் இறுதியிலும்
அவர்களை தீர்மானித்து Cox Habbemaவால்
முடிவுக்கு வர முடியா நிலை.
இந்தக்கொலை ஏன்?
எதற்காக?
கொலை செய்ய தூண்டிய மனநிலை ?


சாதாரண பெண்கள் என்று புலம்புகையில்
த்ரிஷ்யம் மோகன்லாலும்
நீதிமன்றத்தில் 3 பெண்களும் சிரிக்கும் போது
ஆரண்யகாண்டம் சுப்புவும் ஏனோ ஞாபகம் வந்தார்கள்.


பெண்கள் -
என் மத்தியில் இருக்கும் சராசரி பெண்களின் உறுதிநிலையும் மனநிலையும் நான் கவனிக்கவில்லையோ என்று எண்ண வைத்தது.
யாரும் கேட்கமாட்டார்கள் என்று பேசுவதை நிறுத்தியவள் போலவே
நாமும் வீட்டுப்பெண்கள் வாழ்க்கையை கணித்து வைத்திருக்கிறோம்.
என் கதைகளின் பெண்களை திரும்பி பார்கிறேன்.
எல்லா பெண்களிலும் என்னைத்தான் கூறுபிரித்து அடைத்து வைத்திருக்கிறேன் என்ற உண்மையை
முகத்தில் தூக்கி எறிவது போல
உணர்த்தியது படத்தில் உள்ள கதாபாத்திரங்கள்;அவர்களின் உடல் மொழி.


வன்முறை மனநிலை எங்கிருந்து உருவாகிறது?
புறக்கணிப்பு,இயலாமை,தனிமை....உண்மையில் எது ?
இந்த கேள்விக்கு பதில்
அந்த பெண்களின் சிரிப்புக்கு பின்னர் வரும் அமைதி
அமைதிக்கான கேள்விகள்தான்
இங்கு இயங்கிக்கொண்டிருகிறது.



A Question of Silence
(De stilte rond Christine M.)
1982

Comments

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்