A Fighter's Blues
தோற்றுப்போனவனின் கதை
boxer என்பதை தாண்டி பல சந்தர்பங்களில் இதே கேள்வி முன்வைக்கப்படுகிறது.
ஜெயித்தல்/வெற்றிபெறுதல் என்றால் என்ன ?
எதை எல்லாம் எப்படி ஜெயிக்கலாம்?
வெற்றி என்பது பணம்,அடையாளம்,புகழ் என்பதை தாண்டி
வேறு எதுவுமே இல்லையா ?
வெற்றிக்கான திறமையும் உழைப்பும் இருந்தாலும்
கடைசிவரை அதை அடையமுடியா மனிதர்கள் ?
தோற்றுபோனவர்களுக்கு பின்னே தோற்கடிக்கப்பட்ட
கதைகளும் மறைந்துதானே இருக்கின்றன.
அதுபோன்ற உலகமறியா கதைக்கு சொந்தக்காரனின்
வாழ்க்கை A Fighter's Blues.
ANDY குத்துசண்டை வீரன் ,
அவனை பேட்டி எடுக்க வந்த பெண்ணோடு காதல்,
ஒரு குத்துசண்டை போட்டி
மாட்ச் பிக்சிங்கில் அவன் தோற்றுபோக வேண்டும்.
அவனது நிலையை பார்த்து காதலி வருந்த
இயலாமையிலும் அவமானத்திலும் துடித்துபோகும் ANDY,
ஒரு கட்டத்தில் சக போட்டியாளனை அடிக்க
அவன் இறந்துவிடுகிறான்.
ANDYக்கு சிறை தண்டனை கிடைகிறது.
பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து திரும்புபவன் காதலியை தேடிப்போகிறான்.
காதலி என்றோ இறந்துவிட்டதாகவும்
அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அறிந்தவன்
மகளை தேடிப்போகிறான்.
மெல்ல மெல்ல அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில்
பிணைப்பு ஏற்படுகிறது.
ஆனாலும் ANDY மனதில் நிம்மதியில்லை.
கொலைகாரன் என்ற பட்டமும் குற்றவுணர்வும் அவனை
துண்டாடுகிறது .
இறந்துபோனவனின் மாஸ்டரிடம்
மன்னிப்பு கேட்கிறான்
அவன் கேட்ட மன்னிப்பை தராத எதிர்குழு
ரிங்கில் எதிர்கொள்ள சொல்ல
போட்டிக்கு நாள் குறிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக கொலை வெறியுடன்
காத்திருக்கும் அவர்களோடு மோதி ANDYயால்
ஜெயிக்க முடிந்ததா ?
சாம்பியனாகவும் சிறைகைதியாகவும் ANDYயை
காட்டும் முதல் காட்சியிலிருந்து
வசிப்பிடத்தில் முடியும் இறுதி காட்சி வரை
படத்தில் இடம்பெறும் கேள்விகளை கவனித்தால்
பலவிடயங்களை புரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு கேள்விக்கு பின்னே கதையின் தடம் மாறுகிறது.
கடைசியாக
ANDY மன்னிப்பை கேட்கிறான்
அது கிடைத்தால் மட்டுமே அவன் வென்றதாக அர்த்தம்.
அந்த மன்னிப்புக்காக அவன் எடுக்கும் முடிவு ?
நாயக விம்பம் என்ற விமர்சனத்தை தாண்டி
அவனுடைய ஆழ்மனதிருப்தி சார்ந்தது.
ANDYLAUக்கு இது நூறாவது படம்.
நடிக்க நிறைய வாய்ப்புக்கள்.
தன் இறுக்கமான முகத்தில்
சின்ன சின்ன நுணுக்கங்களை காட்டி
தான் வெறும் கமர்சியல் ஹீரோ மட்டும்இல்லை என்பதை
நிருபித்திருக்கிறார்.
ஏன் சிறுவர்களுக்கு நல்லதை மட்டுமே போதிக்க வேண்டும்
மோசமான உலகத்தின் இருட்டுப்பக்கங்களையும்
அவர்களுக்கு காட்ட வேண்டும்
அப்பொழுதுதான்
தான் வாழும் வாழ்க்கை எவ்வளவு சிறந்தது என்பதையும்
எந்த பகுதியை தேர்வு செய்யவேண்டும் என்ற தெளிவும்
அவர்களுக்கு ஏற்படும்
Takako Tokiwa பேசும் இந்த வார்த்தையில் உணர்த்தப்படும் செய்தி எத்தனை வலிமையானது...
A Fighter's Blues(2000)
Hong Kong
Cinema of Hong Kong
what's the most difficulty being a boxer?
it is how to win
boxer என்பதை தாண்டி பல சந்தர்பங்களில் இதே கேள்வி முன்வைக்கப்படுகிறது.ஜெயித்தல்/வெற்றிபெறுதல் என்றால் என்ன ?

Comments
Post a Comment