
அழுக்கு சூரியன்கள்... பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில்... நிறைந்து கிடக்கிறது பல கோடி சூரியன்கள் நம் கண்ணுக்கு எட்டிய சிறுதூரம் தான் உண்மை என்று எண்ணிக்கிடக்கின்றோம் இன்றுவரை... நம் கண்ணில் கண்ட ஒரு சூரியனை ரட்சகன் என்றெண்ணி கண்ணில் ஒற்றிக்கொள்ளும் மடமைகளுக்கு புரிவதில்லை வாழ்வின் நிஜங்கள் விடிந்த பின்னர் வந்த சூரியன்கள் வாழ்வின் விடிவுகளை தீர்மானிப்பதில்லை சூரியன் இல்லாது விடிந்த பொழுதுகள் உண்டு உலகில் சூரியன் இல்லாது விட்டாலும் விடியும் பொழுது விடிந்ததே தீரும் கவனிக்க .... பலகோடி நிலவுகளும் உண்டு உலகில் அதற்கென்று தனி ஒளியும் உண்டு சில சூரியன்கள், தன் ஒளியை வீசி நிலவொளியை மறைத்து வாழ்வளித்த வள்ளல் என்று போலிப்பெருமை பேசுகிறது நிலையின்றி சுற்றி வரும் நிலவுகள் தான் அவை மேகம் மறைக்க மறைக்க அதிலிருந்து மீளும் நிலைகள் எப்போதுமே அவற்றுக்கு உண்டு அமாவாசையில் மறைக்கப்படும் நிலவுகள் தொலைந்துபோவதில்லை பௌர்ணமிகள் அதற்கு எப்போதும் உண்டு பூமி தொலைந்தாலும் நிலவில் வாழ்வோம் என்ற நம...