The Reader

சிறை வாசகி ! We're changing the order we do things. Read to me first, kid. Then we make love. தனிமையில் இருக்கும் நடுத்தரவயது பெண் ஹனா , பதினாறு வயது கொண்ட மைக்கல் . இருவருக்குமிடையிலான சந்திப்பு காமத்தில் நுழைகிறது. அவள் அவனை குழந்தையாக கருதுகிறாள் அன்பு செலுத்துகிறாள். அவளது அன்பின் இன்னொரு வடிவம் காமம். மைக்கல் புத்தகங்களை வாசிக்க அதை கேட்டுக்கொண்டிருப்பது அவளுக்கு பெரும் நிம்மதியளிகிறது. ஒரு நாள் அவள் மைக்கலிடம் எங்கோ சொல்லாது சென்று விடுகிறாள். சில ஆண்டுகளுக்கு பின்னர் சட்டக்கல்லூரி மாணவன் மைக்கல் கோர்ட்டுக்கு வருகிறான் பிரபலமான வழக்கு அங்கு முக்கிய குற்றவாளி அதே ஹனா . வழக்கின் பல கட்டங்களில் மைக்கலுக்கு ஒரு உண்மை புரிகிறது ஹனாவுக்கு எழுத படிக்க தெரியாது அவள் அதை வெளிப்படுத்துவதில்லை நீதிமன்றத்திலும் அதை அவள் மறைத்துவிட குற்றவாளியாக சிறை செல்கிறாள். காலம் மாறுகிறது விவாகரத்தான மைக்கலுக்கு ஹனா ஞாபகம் . புத்தகங்களை வாசித்து ஆடியோக்களை பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவுக்கு அனுப்ப அதை கேட்டு நிம்மதியடையும் ஹனா, சிறை நூலகத்தில் புத்தகங்களை எடு...