The Orphanage

The Orphanage


வாழும் போது அன்பு பாசம் உறவுகள் இதெல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் .இறந்த பிறகு ? இறப்புக்கு பின்னர் வாழ்தல் இல்லையா ?
அப்பொழுது அன்புக்கும் பாசத்துக்கும் இடமில்லையா ?
உண்மையான அன்பு மரணத்துக்கு தயங்காது;
மரணித்த பின்னரும் வாழ்தலை உறுதிபடுத்துவதும் அதே அன்புதான் 
இதை தான் The Orphanage வெளிபடுத்துகிறது 


கதாநாயகி லாரா .அநாதை சிறுமி .அநாதை இல்லத்தில் வளரும் அவளை ஒரு தம்பதி தத்தெடுகின்றனர்.
பல வருடங்களுக்கு பின்னர் லாரா தான் வளர்ந்த இல்லத்தை வாங்கி மீண்டும் ஆதரவு இல்லமாக மாற்ற முடிவு செய்கிறாள் .
இதற்காக கணவர் கார்லோஸ் , குழந்தை சிமோன் ஆகியோருடன் அங்கு வாழ ஆரம்பிக்கிறாள் .

சிமோன் அவ்வப்போது அவனது நண்பர்கள் பற்றி லாராவிடமும் கார்லோஸிடமும் சொல்வது லாராவுக்கு குழப்பத்தை  ஏற்படுத்துகிறது. சிமோனின் நண்பர்கள் யார் கண்ணுக்கும் புலப்படுவதில்லை .இதனால் மகன் சொல்லும் நண்பர்கள் நிஜமில்லை தனது தனிமையை போக்க இப்படி சொல்கிறான் என்று நினைகிறார்கள்

ஒரு நாள். லாராவை சந்திக்க ஒரு வயதான பெண்மணி வருகிறாள் .சமுக ஆர்வலர் என்று தன்னை அ டையாளப்படுத்தும் பெனீன்யா சிமோன் பற்றி சொல்கிறாள் சிமோன் லாராவின் தத்துப் பிள்ளை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிமோனுக்கு மரணம் தூரமில்லை என்பதை கூறி சிமோனின் மருத்துவ அறிக்கையை காட்ட அதிர்கிறாள் லாரா
இத்தனைநாள் யாருக்கும் தெரியாமல் காத்து வந்த  ரகசியத்தை எப்படி இவள் அறிந்தாள்? என்பதை எண்ணி குழப்பமடையும் லாரா அவளை வெளிறேற்றுகிறாள் .அந்த அறிக்கையை ஒரு இடத்தில் பூட்டி வைக்கிறாள் .

சிமோனுக்கு இப்போது இன்னுமொரு நண்பன் கிடைத்துவிட்டான் .அவன் பெயர் தாமஸ் .எப்போதும் விசித்திரமான முகமூடி அணிந்திருப்பது அவனது வழக்கம் .சிமோன் தனது நண்பர்கள் தனக்கு கற்று தந்த புதையல் வேட்டை விளையாட்டை அம்மா லாராவுக்கு கற்று தருகிறான்
ஒரு பொருளை கண்டுபிடித்தால் மற்ற பொருளுக்கான க்ளூ கிடைக்கும் .
இப்படி கண்டு பிடிக்கையில் இறுதி பொருளுடன் லாரா மறைத்து வைத்த மருத்துவ அறிக்கையும் வெளிவருகிறது .இதனால் கோபப்படுகிறாள்.
தான் தத்துப் பிள்ளை என்பதும் இன்னும் கொஞ்ச நாட்களில் இறந்து போகப் போவது தனக்கு தெரியும் என்றும் எல்லாவற்றையும் தனது நண்பன் கூறிவிட்டான் என்பதையும் சிமோன் சொல்ல செய்வதறியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறாள்

சில நாட்களின் பின்னர் -
விடுதிக்கு புதிய சிறுவர்கள் வரும் நாள் .
சிமோன் விழாவுக்கு வர மறுப்பதோடு தனது நண்பனின் இருப்பிடத்துக்கு செல்ல லாராவை அழைகின்றான்.அவனது செய்கையால் கோபப்படும் லாரா சிமோனை அடித்துவிட்டு வந்தவர்களை கவனிக்க செல்கிறாள்
சிறிது நேரத்தில் சிமோனை தேடி வரும் லாராவை நோக்கி வருகிறான் ஒரு முகமூடி அணிந்த சிறுவன் .அந்த சிறுவன் லாராவை தாக்கி விட்டு ஓட தடுமாறி விழுகிறாள் லாரா .

அன்றிலிருந்து சிமோனை காணவில்லை
யார் தேடியும் கிடைக்கவில்லை .போலிஸ் விசாரணைகள் நடத்தியும் ஒரு முன்னேற்றமும் இல்லை

6 மாதங்களுக்கு பிறகு
தனது வீட்டுக்கு வந்த முதிய பெண் பெனீன்யாவை காண்கிறாள் .அவளை நெருங்கும் சமயத்தில் ஒரு விபத்ததில் இறந்து விடுகிறாள்
அவளது தள்ளுவண்டியில் லாராவை தாக்கிய சிறுவனை போலவே முகமூடி அணிந்த பொம்மை இருக்கிறது
அவளை பற்றி விபரங்களை தேடுகிறார்கள்
லாரா வாழ்ந்த இல்லத்தில் பணிபுரிந்தவள் தான் பெனீன்யா
அவளின் மகன் தான் தாமஸ். பிறப்பிலையே கோரமான முகத்தோடு பிறந்ததால் முகமூடி அணிந்து வாழ்ந்தான் என்றும் அதன் பிறகு அவன் இறந்து விட்டான் என்பதையும் அறிகின்றனர்

தாமஸ் தான் சிமோனை மறைத்து வைத்திருக்கிறான் என்றென்னும் லாரா
ஆவி ஆராய்ச்சியாளர்களின் உதவியை நாடுகிறாள்
அவர்கள் அந்த வீட்டிலிருந்த குழந்தைகள் கதறி அழுவதையும்
லாரா அங்கு வாழ்பவர்களை,அந்த அமானுஷ்ய சக்தியை  நம்பினால் மகனை அடையும் வழி கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்

லாரா அந்த வீட்டின் அமானுஷ்யங்களை நம்ப ஆரம்பிக்கிறாள்
சிமோன் போலவே அவர்களுடன் விடையாட முன்வருகிறாள்
ஒரு கட்டத்தில் லாராவுக்கு இறுதி பொருள் கிடைகிறது
அது மூட்டையில் கட்டப்பட்ட சாம்பல்களும் எலும்புகளும்
பெனீன்யா, தன் மகனது மரணத்துக்கு மற்ற சிறுவர்கள் தான் காரணம் என்று நம்பி அனைவரையும்  உயிரோடு எரித்து அந்த சாம்பலை அனாதையில்லத்துக்கு பின்னாலுள்ள ஷெட்-இல் ஒளித்து வைத்திருந்தாள் என்பதை அறிகிறாள்

சீமோன்தொலைந்து  போய் 9 மாதம் ஆகிறது
கார்லோஸ் அவ்வீட்டை விட்டுச்செல்ல முடிவடுக்கிறார். ஆனால் லாரா மறுக்கிறாள் .சிமோன் இந்த வீட்டில் தான் இருக்கிறான் நிச்சயம் அவன் கிடைப்பான் என்று நம்புகிறாள் கார்லோசிடம் 2 நாட்களில் வருவதாக பொய் சொல்லிவிட்டு அங்கு தனியே வசிக்க ஆரம்பிக்கிறாள்

வீட்டை தான் வாழ்ந்த காலத்தில் இருந்த இல்லம் போல மாற்றிவிட்டு பராமரிப்பாளர்களின் உடைகளை அணிந்து கொள்கிறாள்
இறந்து போன சிறுவர்களை விளையாட அழைக்கிறாள்
அவர்களும் வருகிறார்கள்

அதன் பிறகு சிமோனை கண்டுபிடிக்க முடிந்ததா இல்லையா ?
மிகுதி திரையில் ......



பேய் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான கதையமைப்பு உடையவை
அதுவும் பழைய பங்களா அதை புதுப்பித்து குடியேறுபவர்கள்
சிறுவர்களுக்கு மட்டும் தெரியும் அமானுஷ்ய மனிதர்கள் ....
என்று ஒரே  டெம்ப்ளேட் தான் பல படங்களில் ...
அந்த டெம்ப்ளேட் விடயங்கள் இருந்தாலும் இந்த படத்தில் ஒரு வித்தியாசமிருந்தது அதுதான் கதை
அழகான ஒரு கதையோடு அமைந்த அமானுஷ்ய படம்
சுவாரஸ்யம் குறையாத முன்பகுதி பெரும் பலம் .
சில இடங்களில் இசையும் காட்சிகளும் திகிலை ஏற்படுத்தியது உண்மை
கிளைமாக்ஸ் மிகவும் நெகிழ்ச்சியான விதத்தில் இருந்தது ஆச்சர்யம்
அமானுஷ்யமும் அன்பும் கலந்த அழகான படைப்பு இந்த Orphanage

Comments

Popular posts from this blog

What time is it there?

Dyketactics