You're changing that boy's life. No. He's changing mine. தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரபல மகப்பேற்று மருத்துவர், அவரை நேர்காணல் செய்ய தொகுப்பாளினி தயாராகிவிட்டார். 'குழந்தையற்ற தம்பதிகளின் வாழ்க்கையில் துயரங்களை அகற்றி உயிர்ப்பை ஏற்படுத்த வந்த கடவுளின் தூதுவர்' என்றெல்லாம் நான் புகழ்ந்து எழுதிக்கொடுக்க அதையே தொகுப்பாளினியும் பேச மகிழ்ச்சியுடன் நேர்காணல் இடம்பெற்றது. அவர் பெருமை பொங்க சாதனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அது பெருமையாக தெரியவில்லை. ஏன் என்றால் .... The Blind Side தாய் போதைப்பொருளுக்கு அடிமை தந்தையாலும் கைவிடப்பட்டநிலையில் குற்றப்பின்னணியில் வாழும் மைக் , அநாதரவான இளைஞன். 2 டீசர்ட்கள் மட்டுமே அவனது உடை, எழுத படிக்க சரியாக வராததால் வகுப்பில் யாரும் அவனை கண்டுகொள்வதில்லை. கல்லூரியில் எல்லோரும் சாப்பிட்டு வீசிய பாப்கார்ன் பக்கட்டுகளை எடுத்து அதில் இருக்கும் எஞ்சியதை உண்ணவேண்டிய நிலை. உறங்குவதற்கு கூட இடமில்லை ....இரவெல்லாம் தெருவில் நடந்து திரிகிறான் . ஒருநாள் எதேச்சையாக அவன் பள்ளியில் படிக்...
Comments
Post a Comment