தர்பூசணி தர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக் கூடியது. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் C அதிகம் உள்ளது. நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும்.தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு ஐஸ் கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும். பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும். தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். பழத்தை நீங்கலாக இருக்கும் வெள்ளை ப் பகுதியை கூட்டு, குழம்...
"பொழியாத மழையில்
ReplyDeleteகுடையோடு நடை பழகி" super lines