காதல் வலி ...


என் விழியில் வழியுது   கண்ணீரில் கனவுகள்...
புது வலியில் ததும்புது   கனவான நினைவுகள்
வெற்றிடம் போலவே   வரையறை இல்லாவலி
கரைதொடும் நேரத்திலே  காணல் நீராய் காதலே ...

திசை அறியாத மேகங்களின்
மழை மோதல்கள்   நம் மனதில்
விசை புரியாத அணுக்களின்
பிழை விளைவு நம் காதலில்

மௌனங்கள் மரிக்க நீளும்
வார்த்தைகள் அலையாய் மோதும்
சிறகில் சிலுவை சுமக்கும் வரமாய்
காதலே ...

கண்ணில் வளர்ந்து எரியும் தீயில்
இந்த இதயம் கருகும் நாளில்
எந்தன் ஜீவன் தொலையும் உன்னில்
உயிரே ...

 என் விழியில் வழியுது   கண்ணீரில் கனவுகள்
புது வலியில் ததும்புது   கனவான   நினைவுகள்
வெற்றிடம் போலவே   வரையறை இல்லாவலி
கரைதொடும் நேரத்திலே   காணல் நீராய் காதலே

Comments

Popular posts from this blog

காக்கா முட்டை

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....

நாயகவிம்பத்தின் சிதைவுகள்