சிறகின் வலி ...



தனிமை வெளிகளில் அதிகரிக்கும்
வான் தொட்டு விளையாடும்
என் சிறகுகளின் ஆசை!

சிறகில் பிணைக்கப்பட்ட என் கூடுகள்
சிறைப்போலவே...
வெண்சிறகிற்குள் ஒளிந்திருக்கும்
கருமையும் கண்ணீரும் படர்ந்த கனவுகள்
கரைக்கமுடியாமல் கடக்கிறது காலஓடைகள்

என் சிறகுகள் உருவில் சிலுவைகள்
இது வரமாய் பெற்ற சாபம் !

இருக்கவும் மனமற்று பறக்கவும் வழியற்று
வாழ்கிறேன் நானும் உன்னைப் போலவே ...

Comments

Popular posts from this blog