தனிமையின் நிழல்

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்




சித்தம் கரைக்கும் இசை...அழகு வரிகள்...
கண்களை விட்டு அகலாத காட்சிகள்...இப்படி எதுவுமே இல்லாத இந்தபாடல் என்னுள் நிலைபெற்றது ஏன் என்றால்
இப்பாடலில் இயல்பாய் வெளிப்படும் தனிமை தான் காரணம்.
தனிமை வெளிகளில் தன்னம்பிக்கையுடன் வாழ்வியலை எதிர்கொள்ளும் பெண்ணின் பாடல் இது! வரிகளில் வெளிப்படும் தனிமையை பாம்பே ஜெயஸ்ரீயின் அழுத்தமான குரல்,அழகாய் வெளிப்படுத்துகின்றது.கேட்கும் போதே மௌனவெளியில் ஒலிப்பதை போன்ற நினைவு...

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே இன்று இல்லை ஒய்வெடுங்கள்

தென்றல் தோழனை அழைத்து வந்து

தேனீர் விருந்து கொடுத்து விட்டு

வம்பு செய்தீர்கள் சுவைத்துக் கொண்டு

சிரித்து முறைத்து விருப்பம் போல வாழ

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே இன்று இல்லை ஒய்வெடுங்கள்



மலர்களை நிம்மதியாக உறங்கசொல்பவள் அதன் சுகந்திரம் பற்றியும் உரிமை பற்றியும் உணர்த்துகிறாள். பூக்களின் அழகை மட்டுமே பாடும் உலகில் அதன் உரிமை பற்றி பாடும் பாடல்
பெண் சிந்தனைகளின் மறுவடிவம்

ஆடைகள் சுமை தானே அதை முழுதும் நீக்கி விட்டுக் குளித்தேன்
யாரேனும் பார்ப்பார்கள் என்ற கவலை ஏதுமின்றி களித்தேன்
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை எல்லோர்க்கும் இருக்கிறதே
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன் என் உள்ளம் சொல்கிறதே
அழைக்கின்ற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைகினை என்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி





சமுகம் திணித்த சுமைகள் எமது ஆடைகளாய்...அதை அணிந்து நிர்வாணம் எனும் பேரழகை மறைத்து விட்டோம் அதை களைந்து
முழுமையாய் சுமை நீக்கி சுகந்திர நீரில் மூழ்குவோம் என்கிறாள்.
மகிழ்வும் மனநிறைவும் இல்லாத நீண்ட ஆயுளை விட மனதிற்கு பிடித்த சில நிமிடங்கள் வாழ்தலே போதும் அவளுக்கு...
ஆண்டான் அடிமை பேதம் இல்லாது ஆதிவாசியை போல
காடு கொண்டு அன்பு ஆளும் தொலைந்து போன
வாழ்க்கையை மீட்க முயல்கிறாள்.

நீரோடு ஒரு காதல் கடல் அலையில்கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னைப் பார்க்க மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்
புதிய பல பறவைக் கூட்டம் வானில் பறந்து போகிறதே
சிறகு சில உதித்து நீயும் வாவா என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலை இல்லையே
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த ஞானநிலை
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஒய்வெடுங்கள்






கடலும் மணலும் வானும் பறவையும் சுற்றிலும் இயற்கை வெளி ...
பறவை போல தேசம் கடந்து எல்லை துறந்து பறக்கும் நுட்பம் கொண்ட வாழ்வை நேசிக்கின்றாள்
காதலும் ஆண் நேசமும் தரும் ஒப்பனை வாழ்க்கை அவளுக்கில்லை
அதுதான் அவளுக்கான பெருவரம் !


நாயகியின் அறிமுகப்பாடலாய் அமைந்த இப்பாடல் சற்றே வித்தியாசமானது
தன் அழகை ...இயற்கை எழிலை மட்டுமே பாடும் திரைப்பெண்களில் முதன் முதலில் தன் தேடலை, அகவெளி புறவெளி பயணங்களை பேசுகிறாள்
அவள் உணர்வுகளை எத்தனை அழகாய் காட்சிபடுத்தி இருக்கவேண்டும் ?
வரிகளுக்கும் காட்சிகளுக்கும் இணைப்பே இல்லாமல் அமைக்கப் பட்டுள்ளது
திரை மொழியை கையாளத் தெரியாதவர்களின் உருவாக்கமாய் காட்சிகள் நம்மை கடந்து போக பாடலும் கவனிக்கப்படாது போய்விட்டது...!


Comments

  1. மலர்களே பாடலை கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக என்னுடைய காலர் டியூனாக வைத்திருந்தேன்...வேலை நாட்களில் அவரசர செய்திக்காக அழைத்த நண்பர்கள் இந்த பாடலைக் கேட்டவுடன் ஒரு புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டதுபோலவும்..மனசின் அவசர கதியை நிதானமாக்கியதாகவும் தெரிவித்தார்கள்...இந்த அற்புதமான பாடலை இதுவரையில் யாரும் கவனித்து எழுதவில்லை..ஜே,சி.டேனியல் பற்றிய பதிவிற்காக உங்கள் தளம் வந்து மற்ற பகுதிகளை மேய்ந்த போது இந்த பாடலை பற்றி பதிவைக்கண்டதும் எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. பாடலின் வரிகளுக்கு நன்றி...என்னை மிக கவர்ந்த வரி சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்...அசடுகள் வழிந்தட ஆண்கள் இல்லையே..இந்தப் படத்தின்/பாடலின் நாயகி கூட உங்கள் நாட்டைச்சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Wow 2017