ஒற்றைக்கனவு


நெடு நாளாய் தொடரும் ஒற்றைக் கனவு
மழையிரவில் சிவப்புகுடையில்
நான்
அடைமழையில் என் முகம் பார்க்க
குடைக்குள்ளே எட்டிப் பார்க்கும் மழைத்துளிகள்
கடந்து போகும் சாலையில்
பெயர் தெரியாத பூக்களின் வாசம்.
மழையை விட குளிர்வித்தது
எதிர்படும் மனிதர்கள் அதிசயமாய் சிந்திய புன்னகை!
பூமி குளிர்ந்து மழைநீர் வழிய
பாதம் தடுமாறும் நடையில் மெல்ல நகர்கிறேன்
எங்கு செல்கிறேன் என்று தெரியாமல்
பாதைகள் முடியாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது
அந்த மழைப்பயணம் முழுவதும்!
இப்படி நெடு நாளாய் தொடரும்
இந்த ஒற்றைக் கனவு
அர்த்தம் புரியாவிட்டாலும்
அழகாய் தொடரும் கனவுக்காக
விழிக்க மறுக்கிறேன் நான்!!!



Comments

Popular posts from this blog

What time is it there?

Dyketactics