Dyketactics

பெண்ணின் நிர்வாணம் என்ன செய்யும் ? பதட்டத்தை, பயத்தை, அருவருப்பை,ஆசையை, கிளர்ச்சியை, காம உணர்வினை ....இன்னும் ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை தரக்கூடும். நிஜத்தில் உடல் என்பது உணர்வுகள் கொண்ட சதைப்பிண்டம். உயிருள்ளவரை நம்மை சுமந்து திரிய அதை பராமரிக்க வேண்டிய கடமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நம் உடல் மீதான மறைவுணர்ச்சி செயற்பாடுகளை நிகழ்த்தவே நம் சமுகமும் குடும்ப அமைப்புகளும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன எனலாம். நம் உடலை நாமே நிர்வாணமாக தனிமையில் மட்டுமே காணும் சூழலும் நிர்வாணம் மீதான ஒழுக்க கற்பிதங்களும் அச்சங்களும் வன்முறைகளும் திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அடக்குமுறை கட்டமைப்புக்களே இங்கு அதிகம் உள்ளன. ஒருகட்டத்தில் அந்த இறுக்கமான கட்டமைப்பின் மீதான வெறுப்பின் எதிர்வினையை நிகழ்த்த நிர்வாண உடலை ஆயுதமாக்கும் மனநிலையும் அதனால்தான் எழுகின்றது. இப்படி நிர்வாண உடல் பற்றி ஆயிரம் கதைகள் பேசினாலும் உடலை முன்வைத்து உருவாக்கப்படும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவே இல்லை. இந்த முடிவற்ற முரண்பாடுகளே Barbara Hammer இன் Dyketactics படைப்புலகம்! Barbara Hammer,...