Dharmasena Pathiraja



''ஒவ்வொரு நாட்டிலும் முதல் திரைப்படம் வெளியானதும் அந்த தேசத்தின் சினிமா உருவாகிவிட்டதாக வரலாற்றில் ஆண்டுகளை பதிந்து கொள்கிறோம்.
ஆனால் நிஜம் வேறு ....

பிலிம்சுருளில் எடுக்கப்பட்ட
அசையும் படங்கள் அனைத்தும் சினிமாக்கள் அல்ல.
கதையின் அத்தியாய விளக்கமாக, உரையாடல் தொகுப்பாக, மேடை நாடகப்பதிவாக ....என்று
பல கட்டங்களைக்கடந்து
ஏதோ ஒரு புள்ளியில்தான்
படைப்பாளியின் சினிமா உருவாகும்.
அன்றிலிருந்து அந்த தேசத்தின் முதல் சினிமா உருவாக்கப்பட்டு,
அதன் நீட்சியாக
சினிமா பிரவாகமெடுக்கும்.
இலங்கை சினிமா வரலாற்றில் திரைப்படங்கள் ஆரம்பிக்கப்பட்டு இயக்குனர் பட்டியல் உருவாக்கப்பட்டாலும்
சினிமா என்பதின் தோற்றம் தர்மசேன பதிராஜ என்ற படைப்பாளியால்தான் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை சினிமாவின் ஆரம்பகர்த்தாவாகவும்
இன்றைய படைப்பாளிகளின் பிதாமகனாகவும்
திகழ்பவரின் படங்களின் .......''

இலங்கை சினிமா பற்றிய இலக்கிய சஞ்சிகைக்கான கட்டுரையை
பதிராஜவின் படங்களைப்பற்றியும் அந்த படைப்புகள் உருவாக்கிய தனித்துவமான இலங்கை சினிமா துறைப்பற்றியும் மேற்கூறப்பட்ட வரிகளோடுதான் ஆரம்பித்திருந்தேன்.

ஒருகட்டத்தில்,
அவர் படங்களின் நுட்பங்களை எழுத இன்னும் நான் கற்றுக்கொள்ள
வேண்டும் என்று புரிந்தது.
கற்று புரிந்த பின் கட்டுரையை எழுதி அவரது நேர்காணலுடன் முடிக்கவேண்டும்
என்று தீர்மானித்திருந்தேன்

பதிராஜவின் இழப்பு செய்தி !

ஏதோவொரு
வெறுமையை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது.

என் திரைப்பட கல்லூரியின் அனுமதிக்காக
நீங்கள் எனக்களித்த பரிந்துரைப்பு கடிதத்திற்கு உங்களை சந்தித்து
நன்றி கூட சொல்லவில்லை .

கட்டுரைக்காக எழுதப்படும் புகழ்ச்சி வார்த்தைதளை தாண்டி
உங்கள் படைப்புகள் எனக்குள் ஏதோ ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றதை
இன்று
உணர்கிறேன்.

ம்....
அந்த
நிறைவுறாத கட்டுரையின் நிலையில்
நான் !



Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

சட்டென நனைந்தது நெஞ்சம்