நீ...நான்...காதல்... 


நீ இன்றி நான் இல்லையே ...
உடல் இன்றி நிழல்  இல்லையே ..
உயிர் தேடும் உடல் போல 
நம்மை தேடிடும் நம் காதலே 

வினா  தேடும் விடை  போல
முதல் முரணாய் நாமிருவர் ...
நுண் பூகம்ப விரிசல்கள் போல 
பிரிந்த நம் காதலே ...

காதலின் மழையிலே என் மௌனங்கள் கரைய
உன் அருகில் வாழ்ந்திட என் ஆயுள் நினைக்க
கண்ணீர் துளியில் கரையும் இதயம் கவிதை பாடும் உனக்காகவே 
எல்லாம் கனவாக நிஜங்கள் நஞ்சாக உயிர் வதை தரும் என் காதலே

நீ இன்றி நான் இல்லையே ...
உடல் இன்றி நிழல்  இல்லையே ..
உயிர் தேடும் உடல் போல 
நம்மை தேடிடும் நம் காதலே 

உன்னைக் கண்ட வேளை  வாழ்வில் 
உன் சிரிப்பில் நிலைத்த நாட்கள் உலகில் 
கண்ணில் வளர்ந்த காதல் உயிரில் 
நினைகிறதே மனதே 

உன் கைகள் கோர்த்து சென்ற நேரங்கள் 
சேர்ந்து நடந்த அந்தி சாலைகள் 
தோளில் சாய்ந்த அன்பு பொழுதுகள் 
நினைகிறதே மனதே 

மனதினில் ஒரு கனம் பரவ
நினைவினில் அது ரணமாக 
கண்ணிலே அது விஷமாக 
கவிதைகள் அதன் வசமாக 
புரியாத காதலில் பிரியாத நேசங்கள் நம்  நினைவுகள் கனவோடு காத்திருக்க..
உனக்கான வாழ்வில் நீ இல்லாத நிலையில் வலியோடு நானும்  பார்த்திருக்க ..

நீ இன்றி நான் இல்லையே ...
உடல் இன்றி நிழல்  இல்லையே ..
உயிர் தேடும் உடல் போல 
நம்மை தேடிடும் நம் காதலே 

வினா  தேடும் விடை  போல
முதல் முரணாய் நாமிருவர் ...
நுண் பூகம்ப விரிசல்கள் போல 
பிரிந்த நம் காதலே ...

Comments

Popular posts from this blog

What time is it there?

Dyketactics