A short film about love



காதல் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் வாரத்தை ...காதல்   என்பது என்ன ? அன்பின் வெளிப்பாடு என்றால் அதில் காமத்தின் தேவை தான் என்ன ? உள்ளக்கிளர்ச்சி தான் காதல் என்றால் உடல் உரசல்களுக்கு அவசியம் இல்லையே ...காதல் என்பதன் மறைமுகப் பொருளே உடல் புணர்ச்சியின் தேவை தானா உடல் தவிர்த்து மனநேசத்தோடு மட்டும் காதல் வாழாதா ? 
இந்த கேள்விகளுக்கும் குழப்பங்களுக்குமான பதில் தான் 
A short film about love

வார்சாவில் ஒரு பெரிய அடுக்குமாடிக்குடியிருப்பில் தன் வளர்ப்பு தாயோடு வசித்து வருகிறான் தோமக். தபால் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே படித்து வருகிறான் .சுவாரஸ்யமற்ற அன்றாட வேலைகளிலிருந்து அவனை விடுவிக்கும் ஒரே அம்சம் காதல் !

எதிரிலுள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கிறாள் அவனுடைய தேவதை .
அவள் பெயர் மேக்தா. மேக்தாவின் வாழ்வுக்கு எந்த விதிகளும் கட்டுபாடுகளும் இல்லை. தினம் ஒரு காதலன்,அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் நாட்கள்... என்று கடந்து போகிறது அவள் வாழ்வு !
அவளிடம் தோமக் நேசம் கொள்கிறான்.

தினமும் அவளை தொலைநோக்கி வழியே பார்த்து ரசிப்பதன் மூலம் காதலை வளர்த்துக் கொள்ளும்  தோமகின் காதலின் தனிமை எப்படித் தீர்ந்தது? 



3 முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி நகர்கிறது கதை.''வாயரிசம்'' என்ற பிறரது அந்தரங்கத்தை  எட்டிப்பார்க்கும் பாலுணர்வு சார்ந்த மனச்செயலின் வெளிப்பாட்டை இந்த படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். தனிமையின் பிடியில் பீடிக்கப்பட்ட அவனை தவறிழைக்க செய்யாது கட்டிப் போட்டிருக்கிறது காதல். பாலுணர்வில் பிறக்கும்  காதலுக்கு சில நேரம் காமமே அந்நியப்பட்டதாக மாறக்கூடும் என்ற மனிதர்களின் முரண்பட்ட மன நிலையை பதிவு செய்துள்ளார்  Krzysztof Kieślowski.  



இந்தப் படத்தின் ஒளிப்பதிவு அதி சிறப்பானது. பதின்ம வயதின் உணர்வுகளை ஒளியிலும்  நிழலிலும் அற்புதமாக  பதிவு செய்திருகிறார்கள். அதிகமான அருகாமை காட்சிகளில் கதை சொல்லியிருகிறார்கள்.
இரவிலும் அதிகாலையிலும் தான் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
தோமக்கின் அறை இருளில் கட்டப்படுகிறது.மேக்தாவின் அறை ஒளியுடன் காட்டப்படுகிறது. இவருடைய மனநிலையையும் வாழ்க்கை சூழலையும் ஒளிப்பதிவின் மூலம் குறியீடாக காட்டியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

சட்டென நனைந்தது நெஞ்சம்

The Clue:4th Period Mystery