நிறம் மாறும் மீன்கள்



விலங்குகளில் நிறம் மாறுபவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தன்னை பிற விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி பற்றி நாம் அறிவோம்.
செடிகொடிக்குள் நின்றால் தன் உடலை பச்சை, மஞ்சளாகவும், மரப்பட்டையில் நிற்கும்போது கருப்பும், காபி வண்ணமும் கலந்ததுபோல உடலின் நிறத்தை மாற்றித் தப்பித்துவிடும்.
 
ஆனால் இவை தரையில் நிறம் மாறுபவை கடலில் நிறம் மாறும் மீன்கள் பற்றி அறிவிர்களா?
கடலில் வாழும் மீன் இனங்களில் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள நிறம் மாறும் மீன்களில் முக்கியமானது வேதாள மீன்கள் மற்றும் இலை மீன்கள்.
 
இவை இரண்டும் மிக விந்தையான உடலமைப்பைப் பெற்ற மீன்கள். எதிரி மீன்களிடம் இருந்து தப்பிக்க சிறப்பு அமைப்புகளைப்பெற்றுள்ள இம்மீன்கள், பச்சோந்திகளைப் போல நிறம் மாறக்கூடியவை.
 
இவற்றை மீன் என்று யாரும் எளிதில் கண்டுபிடித்து விட முடியாத அளவில் தன் தோற்றத்தையும் நிறத்தையும் மாற்றக்கூடியவை.
 
இலை மீன், இலை போன்ற வடிவத்திலும், நிறத்திலும் காணப்படும். இலை போன்ற உடலமைப்பையும், இலையின் நரம்புகள் போன்ற வண்ணங்களையும் கொண்டு இருக்கும். பகை மீன்களை திசை திருப்பி, தப்பித்துக் கொள்ளும். 
 
அதேபோல வேதாள மீன் (சீ டிராகான் ), இலை நரம்புகள் போன்ற தோற்றத்திலும், வேதாளம் போன்ற வினோத உருவம் கொண்டதாகவும் இருக்கும். 
 
வேதாள மீனின் வாய் பகுதி எது, வால் பகுதி எது என்பதை கண்டு பிடிக்க முடியாது. பகை மீன்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, இயற்கையோடு இயைந்த விதத்தில் அமைந்துள்ளன இம் மீன்கள்.
 
இம்மீன்கள் பகை மீன்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள, தமது தோற்றத்தை மிகச்சிறப்பான மாற்றங்களுக்கு உட்படுத்துகின்றன. இவற்றை மீனென்று எளிதில் இனம் காண முடியாது. 
 
இதனால் எதிரி மீன்களுக்கு இவற்றை சரியாக இனம் காண முடியாது. சாதாரண இலைகளாக எண்ணி கடந்து போய் விடும் ஏனைய மீன்கள்.
 
வேதாளம் போன்ற உருவத்தை பார்த்து பயந்து அருகில் வரத் தயங்கி ஓடிவிடும் சிறிய மீன்கள். இவற்றின் நிறம்மாற்றம் மற்றும் உருமாற்றத்தால் பகை மீன்களிடமிருந்து எளிதில் தப்பித்துக்கொள்கின்றன.
 
இவைபோலவே பாதுகாப்புக்காக வண்ணப் பட்டைகளை பெற்றுள்ள மீன்களான ஜேக்கப் மீன், ஏஞ்சல் மீன் போன்றவையும், ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. 
 
தன் உடலில் பெற்றுள்ள வண்ண பட்டைகளை ஒளிவீசச் செய்து எதிரி மீன்களை திசை திருப்பி விடுகின்றன.
 
கடல் மிக ஆழமான ஆச்சர்யமான இடம் .அதில் வாழும் மீன்களின் இயல்புகளும் எம்மை விழி விரியச் செய்வன. நிறம், உரு மாறும் மீன்கள் உண்மையிலேயே அதிசயம் தான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Traveling on one leg

கேள்விகளைத்தேடும் பதில்கள்!